செவ்வாய், 26 ஜூலை, 2022

5G ஏலம்! இன்று ஆரம்பம்!
--------------------------------------------------- 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------
1) இன்று முதல் (26.07.2022) PAN INDIA 5G ஏலம்.
72 GHz அளவுள்ள அலைக்கற்றை ஏலம் விடப் 
படுகிறது.  Base price ரூ 4.3 லட்சம் கோடி.
20 ஆண்டு வேலிடிட்டி.    

2) ஏலத்துக்கு வைக்கப்பட்ட அலைக்கற்றையின் 
அளவு மிக அதிகம். விலையும் மிக 
அதிகம். ஆனால் ஏலத்தில் பங்கேற்கும் 
நிறுவனங்கள் மிக்க குறைவான 
பணத்தையே டெபாசிட் செய்துள்ளன.  

3) சிறுகக் கட்டிச் சிறுக வாழ் என்ற 
நிலையில்தான் 5G ஏலத்தில் 
நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
எல்லோருக்கும் பணமுடை! எனவே கொஞ்ச 
அளவுள் ள அலைக்கற்றையை மட்டுமே 
அவை ஏலம் எடுக்கும்.

4) எந்த நிறுவனமும் Pan India 5G  லைசன்சை 
எடுக்கப் போவதில்லை.  Pan India லைசன்ஸ் 
என்றால் இந்தியா முழுமைக்குமான லைசன்ஸ் 
என்று பொருள். அதாவது இந்தியா முழுவதும் 
22 லைசன்ஸ் ஏரியாவாக DOT (Dept of Telecom) 
பிரித்து வைத்துள்ளது. இந்த 22 LSAக்களிலும் 
5G அலைக்கற்றையை ஏலம் எடுக்க வேண்டும்.
ஆனால் எந்த நிறுவனமும் அப்படி PAN INDIA
லைசன்ஸை எடுக்கப் போவதில்லை. ஏனெனில் 
அதற்கான வாய்க்கரிசி அவர்களிடம் இல்லை.    
 
5) ஜியோ, ஏர்டெல், வோடபோன், அதானி டேட்டா 
நெட்ஒர்க் ஆகிய நான்கு நிறுவனங்கள் மட்டுமே 
5G ஏலத்தில் பங்கேற்கின்றன.
   
6) BSNL ஏன் இந்த ஏலத்தில் பங்கேற்கவில்லை 
என்று கேள்வி எழுப்பும் போலி முற்போக்கு 
விபச்சாரத் தரகர்களின் கேள்விக்கு தனிக் 
கட்டுரையில் பதில் அளிக்கப் படுகிறது.  
 
7) பின்வரும் BANDWIDTHல் உள்ள அலைக்கற்றைகள்
  ஏலம் விடப் படுகின்றன.
5G: 3.3GHz to 3.67 GHz, 26 GHz.
இவை தவிர 2G, 3G, 4G அலைக்கற்றைகள்.   

ஏலம் எடுத்த பின்னரும், 5G சேவையைத் தொடங்க
நிறுவனங்கள் குறைந்தது ஓராண்டு காலம் 
எடுக்கும். எனவே 2023ல் இந்தியாவில் 5G செயல்படும்.
*********************************************** 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக