பெரியாரியம் ஒரு சொத்துடைமைத்
தத்துவம்!
----------------------------------------------------------
மார்க்சியம் என்பது சாராம்சத்தில்
தனிச்சொத்துரிமையை ஒழிப்பதுதான்
(abolition of private property) என்றார்
மார்க்ஸ்.
பெரியாரியம் என்பது முற்ற முழுக்க
தனிச்சொத்தைப் பாதுகாக்கும் தத்துவம்.
தனது சொத்துக்களுக்கு அதீத
முக்கியத்துவம் கொடுத்த பெரியார்,
அச்சொத்தைக் காப்பாற்ற ஒரு வாரிசு
தேவை என்று தமது 72ஆம் வயதில்
27 வயது இளம்பெண்ணை மணந்தார்.
சொத்துடைமையைப் பாதுகாக்கும்
தத்துவமான பெரியாரியத்தை
சொத்துரிமையை அழிக்கும்
மார்க்சியத்துடன் சேர்க்க முயல்வது
பேதமையுள் எல்லாம் பேதைமை ஆகும்.
அம்பேத்காரியம் அல்லது தலித்தியம்
என்னும் தத்துவமும் தனிச்சொத்துரிமையைப்
பாதுகாக்கும் தத்துவமே.
மார்க்சியம் வர்க்க ரீதியாக மக்களை
அணிதிரட்டி வர்க்கப்போரை நடத்தும்.
பெரியாரியமும் தலித்தியமும் அடையாள
அரசியலை மட்டுமே நடத்தும். இவ்வாறு
கொள்கை, நடைமுறை என்று எல்லாவற்றிலும்
கடும் முரண்பாடு கொண்டுள்ள
பெரியாரியத்தை மார்க்சியத்துடன் எப்படி
ஒன்றாக வைக்க முடியும்?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக