ஞாயிறு, 10 ஜூலை, 2022

இசைத்தமிழ் நீ செய்த அருஞ்சாதனை!
--------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------- 
1970களில் தமிழின் வெகுஜன இலக்கிய ஏடுகளில் 
காரிகை மிகவும் பிரசித்தம். காரிகை என்பது 
யாப்பருங்கலக் காரிகை என்னும் தமிழிலக்கண 
நூலைக் குறிக்கும். அப்போது தமிழறிஞர் 
கி வா ஜகந்நாதன் இருந்தார். அவர் காரிகை 
கற்றுக் கவிபாட அனைவரையும் ஊக்குவித்தார்.

பட்டப் படிப்பில் மொழிப்பாடத்தில் எனக்கு காரிகை 
பாடமாக இல்லை. எனவே சொந்த முயற்சியில் 
படிக்க வேண்டிய நிலையில் இருந்த நாங்கள் 
காரிகை வாங்கிப் படித்தோம்; கவி புனைந்தோம்.

யாப்பு என்பது குறிப்பிட்ட ஓசையை நோக்கி 
செய்யுட்களை ஆற்றுப்படுத்துவது. முற்றிலும் 
தற்போக்கான (random) ஓசைக்குப் பதில் 
தெரிந்தெடுக்கப்பட்ட ஓசை அமையுமாறு 
கவி இயற்றுவதற்கு யாப்பு வேண்டும். எழுத்து,
அசை, சீர், தளை, அடி, தொடை ஆகியன யாப்பின் 
உறுப்புக்கள். 

யாப்பிலக்கணப்படி பாக்களை இயற்றினால் 
செப்பலோசை, அகவலோசை, துள்ளலோசை, 
தூங்கலோசை  ஆகியவற்றைப் பெற முடியும்.
அப்படி ஓசைகளைப் பெற்றுத்தான் ஆக 
வேண்டுமா? ஓசைகளுக்கு அவ்வளவு 
முக்கியத்துவமா?

ஆம் என்கிறார் ........................ (யார் என்று வாசகர்கள் 
சொல்ல வேண்டும்) ஓசை தரும் இன்பம் 
உவமையிலா இன்பம் என்கிறார் அவர்.

இந்தக் கட்டுரை பலருக்கும் புரியாது என்பதை 
நானறிவேன். புரியாதவர்கள் சபையில் இருக்கக் 
கூடாது. வெளியேறி விட வேண்டும். இதற்கு முன்பு 
உற்பத்தியோடு இணைத்து இசை குறித்து 
எழுதிய கட்டுரையும் பலருக்கும் புரியவில்லை.
புரியாதவர்கள் இசைத்தமிழ் பற்றிப் பேசும் 
அருகதை அற்றவர்கள்.
       
வாசகர்களின் புரிதலின் மட்டம் குறித்த நியாயமான 
அச்சம் காரணமாக கட்டுரையை முரடடடியாகச் 
சுருக்கிக் கொள்கிறேன். அடுத்து நேரடியாக 
சந்தத்துக்குள் இறங்கி விடுவோம். சந்தம் என்றால் 
என்ன என்று தெரியுமா? தெரியாதவனோடு 
மல்லுக்கு கட்ட இயலாது. சபையை விட்டு 
வெளியேறுங்கள்.

1980களில் திருப்புகழின் சந்த அமைப்பு என்ற ஓர் 
ஆய்வு நூலைப் படித்தேன். இன்று திருப்புகழின் 
சந்த அமைப்பு குறித்து ரிசர்ச் செய்து PhD 
பட்டம் பெற்ற நூற்றுக்கணக்கான ஆய்வாளர்களின் 
ஆய்வடங்கல்கள் (thesis) நூல்களாக வெளிவந்து 
விட்டன.

இளையராஜா குடித்தும் இசைத்தமிழ் குறித்தும் 
பேச விரும்புவோர் திருப்புகழின் சந்த அமைப்பு
குறித்து அறிந்திருக்க வேண்டும்; உரிய 
நூல்களைப் படித்திருக்க வேண்டும். அரங்கின்றி 
வட்டாட வேண்டாம்.      
   
ஒரு எளிய எடுத்துக்காட்டைப் பார்ப்போம்.

முட்டுப் பட்டுக் கதிதோறும் (இது திருப்புகழ்)
தத்தத் தத்தத் தனதான (சந்த அமைப்பு)

முற்றச் சுற்றிப் பலநாளும்
(தத்தத் தத்தத் தனதான)

சந்தம் என்றால் என்ன என்று புரிகிறதா?
இசைப்பாங்கான பாட்டு சந்தம் கொண்டு 
கட்டப்பட்டதாகும். திருப்புகழ் எல்லோருக்கும் 
புரியாது.

அப்படிப் புரியாதவர்கள் "வறுமையின் நிறம் சிவப்பு"
என்ற சினிமாவில் கமல்-ஸ்ரீதேவி நடிப்பில், 
எஸ்பிபி-ஜானகி பாடிய "சிப்பி இருக்குது முத்தும் 
இருக்குது" என்ற பாடலின் சந்த அமைப்பைப் 
புரிந்து கொள்ள முயலுங்கள்.

பிரசித்தி பெற்ற திருப்புகழ் செய்யளின்
சந்த அமைப்பைப் பார்ப்போம்.

முத்தைத் தரு பத்தித் திருநகை 
அத்திக்கிறை சத்திச் சரவண 
முத்திக்கொரு வித்துக் குருபர .....எனவோதும்.

இதன் சந்த அமைப்பு பின்வருமாறு உள்ளது.
சந்தத்தையும் பாடலின் அடிகளையும் 
பொருத்திப் பார்க்கவும். சந்தம் புரிகிறதா 
என்று பாருங்கள்.

தத்தத்தன தத்தத் தனதன  
தத்தத்தன தத்தத் தனதன
தத்தத்தன தத்தத் தனதன
தனதான  

யாப்பிலக்கணம் என்பது தற்போக்கான ஓசைக்குப் 
பதிலாக வரையறுக்கப்பட்ட ஓசையை நோக்கி 
செய்யுட்களை ஆற்றுப் படுத்துவது என்று முன்னரே 
சொன்னேன். அதே நேரத்தில் ஒரு அகவற்பாவை 
இசை செறிந்த பாடலாகக் கருதுவது பேதைமை ஆகும்.

இசைத்தமிழைக் கற்க விரும்புவோர் சந்த அமைப்புள்ள 
செய்யட்களைக் கருத்தில் கொள்ள வேண்டும்.
மிகச் சிறந்த உதாரணம் திருப்புகழ்.

காவடிச் சிந்து பற்றி எத்தனை பேருக்குத் தெரியும்?
அநேகமாக ஒருவருக்கும் தெரியாது. என் இள  
வயதில் காவடிச் சிந்து பாடக் கற்றேன். ஆனால் 
அப்போதே நான் கடவுள் மறுப்புக் கொள்கையில்
தீவிரமாக இருந்தேன். காவடிச் சிந்து என்றாலே 
முருகன் கோவிலுக்குப் போவோம் வா என்று 
கூப்பிடுவார்கள். நான் போக விரும்பவில்லை.
அதனால் எனது காவடிச்சிந்துப் பயிற்சி
முடிவுக்கு வந்தது. 

தேமா புளிமா என்று உளறிக்கொண்டு சிலர் 
தாங்கள்தான் இசைத்தமிழுக்கு அத்தாரிட்டி என்று 
தங்களின் அறியாமையைத் தம்பட்டம் அடித்துக் 
கொண்டு திரிகிறார்கள். குட்டி முதலாளியத்துக்கே 
உரிய தற்குறித்த தனமும் நேர்மையற்ற தன்மையும் 
கொண்டு அவர்கள் அவதூறில் இறங்குகிறார்கள்.

இளையராஜாவை ஆதரிப்பவன் எல்லாம் பாஜகவின் 
அடிப்பொடிகள் என்று உளறுகிறார்கள் குட்டி    
முதலாளியத் தற்குறிகள். நல்லது; அப்படியானால் 
இளையராஜாவை எதிர்ப்பவன் எல்லாம் விபச்சாரத் 
தரகன் (pimp) என்று பதிலுக்குச் சொல்லலாமா? 
எந்தப் படியால் அளக்கப் படுகிறதோ அதே படியால் 
திருப்பி அளக்கப்படும். 

இசைத்தமிழ் குறித்தும், இந்தி குறித்தும், இளையராஜா 
குறித்தும் தகுதி வாய்ந்த எவர் ஒருவருடனும் 
விவாதிக்கத் தயாராக இருக்கிறேன். அறிவியல் 
கற்ற சான்றோர்கள் நடுவர்களாக இருக்கட்டும்.

விவாதத்தில் நான் தோற்று விட்டால் உடனடியாக 
என் உயிரை மாய்த்துக் கொள்கிறேன். அது போல 
விவாதத்தில் என்னிடம் தோற்போர் உடனடியாக 
செத்துப் போய் விட வேண்டும். இதற்கு நான் தயார்.
குட்டி முதலாளியத் தற்குறிகள் தயாரா?
------------------------------------------------------------------
பின்குறிப்பு:
என்னுடைய தகுதிகள் குறித்த அனைத்துச்
சான்றிதழ்களையும் என் வீட்டிற்கு வந்து 
நடுவர்களோ போட்டியாளர்களோ சரிபார்த்துக் 
கொள்ளலாம். தேவையான எந்தத் தேர்வுக்கும் 
உட்படவும் நான் தயார். 

போட்டியாளர்கள் தங்களின் இந்திப் புலமை,
இசையறிவு குறித்து சான்றிதழ் இல்லாவிடினும் 
பரவாயில்லை. அவர்கள் எளிய ஒரு தேர்வுக்குத் 
தங்களை உட்படுத்தி நிரூபிக்க வேண்டும்.
*******************************************
  
  
 
   










கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக