கால்பந்தில் ஜெயிக்க ஜோசியம் வேண்டும்!
--------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------
இந்தியாவில் கால்பந்து விளையாட்டுக்காக
AIFF உள்ளது. அகில இந்திய கால்பந்துக்
கழகத்தின் தலைவராக சரத் பவாரின்
கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் பட்டேல் இருந்து
வந்தார். ஊழல் புகார்கள் காரணமாக அவர்
தற்போது சஸ்பெண்ட் செய்யப் பட்டுள்ளார்.
ஆசியக் கோப்பை கால்பந்து (AFC) காலிறுதிக்கு
இந்தியா தகுதி பெற்றுள்ளது. இறுதிப் போட்டிக்குத்
தகுதி பெறவும் போட்டியில் வெல்லவும் இந்தியா
முயன்று வருகிறது. இதற்காக இந்தியக்
கால்பந்துக் கழகம் ஒரு ஜோசிய நிறுவனத்தை
ரூ 16 லட்சம் கட்டணம் செலுத்தி அமர்த்தி உள்ளது.
விளையாட்டு வீரர்களுக்கு ஊக்கம் அளிக்கவும்
கிரக நிலைகளைத் தமக்குச் சாதமாக்கவும்
இந்த ஜோசிய நிறுவனம் செயலாற்றும் என்று
சொல்லப் படுகிறது.
விளையாட்டில் ஜெயிக்க முடியவில்லை என்றால்
தோற்று விட்டுப் போகலாம். அதில் தப்பில்லை.
ஆனால் ஜோசியனை அமர்த்தி ஜோசியத்தின்
மூலம் ஜெயிக்கலாம் என்ற நினைப்பில்
செயல்படுவது கடும் மூடநம்பிக்கை ஆகும்.
ஒரு அணி ஜெயிப்பதற்கும் ஜோசியத்துக்கும்
அணுவளவும் சம்மந்தம் கிடையாது.
அவனவனுக்குத் திறமை இருந்தால் ஜெயிப்பான்.
திறமை இல்லாதவன் தோற்றுப் போவான்.
இதில் ஜோசியத்துக்கு எந்த சம்பந்தமும் இல்லை.
ஜோசியத்தால் எவனும் ஜெயிக்கப் போவதும்
இல்லை. எவனும் தோற்கப் போவதும் இல்லை.
இதுதான் உண்மை.
இந்தியாவில் ஜோசியம் இவ்வளவு செல்வாக்குப்
பெறுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
வாஜ்பாய் பிரதமராக இருந்த 1999-2004ல்
மத்தியில் பாஜக-திமுக கூட்டணி ஆட்சி
நடைபெற்றது. முரளி மனோகர் ஜோஷி
கல்வி அமைச்சராக இருந்தார்.
கருணாநிதியின் ஒப்புதலைப் பெற்று முரளி
மனோகர் ஜோஷி இந்தையாவின் பல்கலைக்
கழகங்களில் ஜோசியத்தை ஒரு பட்டப்
படிப்பாகக் கொண்டு வந்தார்.ஜோசியப்
பித்தரான கருணாநிதி, ஜோசியன் சொன்னான்
என்பதற்காக மஞ்சள் துண்டை காலமெல்லாம்
அணிந்து கொண்டிருந்த ஜோசியப் பைத்தியம்
கருணாநிதி இந்தியாவில் ஜோசியத்தை
பட்டப் படிப்பாகக் கொண்டு வருவதற்கு
உறுதுணையாக இருந்தார்.
இன்றைக்கு கால்பந்துத் கழகம் ஜோசியனை
அமர்த்துகிறது என்றால், அதற்கு மூல காரணம்
இழிந்த மூடநம்பிக்கையாளரும் போலிப்
பகுத்தறிவு பேசும் நேர்மையற்றவருமான
கருணாநிதியே காரணம்.
********************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக