தமிழ் விரைவில் அழியும்!
இன்னும் 50 ஆண்டு கூடத் தாங்காது!
கவிஞர் வைரமுத்து எச்சரிக்கை!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------
கவிஞரின் பிறந்த நாள் விழா கோவையில்
2022 ஜூலை 13ல் நடைபெற்றது. கழுத்து
நிறைய மாலையுடன் கவிஞர் நிற்கிறார்.
கவிஞரின் வலப்பக்கம் ப சிதம்பரம் நிற்கிறார்.
இடப்பக்கம் துரைமுருகன் நிற்கிறார்.
(வலது பக்கம் என்றும் இடது பக்கம் என்றும்
நான் எழுத மாட்டேன். கணிகைக்குப் பிறந்த
பயல்கள் அப்படி எழுதுவார்கள்)
பள்ளி மாணவர்களுக்கு தமிழில் படிக்கவோ
எழுதவோ தெரியவில்லை. தமிழில்
பேசுவதற்குக்கூட அவர்கள் சிரமப்
படுகின்றனர் என்று வருத்தப்பட்டுச் சொல்கிறார்
வைரமுத்து.
தமிழ்நாட்டில் 10ஆம் வகுப்புத் தேர்வில் 47,000 பேர்
தமிழ்ப் பாடத்தில் தோல்வி அடைந்துள்ள செய்தியை
கவிஞர் கணக்கில் கொள்கிறார். தமிழுக்கு
இனி எதிர்காலமில்லை என்ற யதார்த்தத்தை
அவர் உணர்கிறார்.
வைரமுத்து இப்படிச் சொல்வது இது முதல்
முறை அல்ல. மேலும் இது அவரின் சொந்தக்
கருத்தும் அல்ல. இது ஐநா சபையின்
யுனெஸ்கோ மன்றத்தின் கருத்து. 2000ஆம்
ஆண்டின் தொடக்கத்தில் யுனெஸ்கோ இவ்வாறு
கூறியதை முன்பே பலமுறை நான் பொதுவெளியில்
கூறியுள்ளேன்.
அப்போதே ஐநாவின் யுனெசுகோ மன்றத்தின்
அறிக்கையைப் படித்துப் பார்த்த வைரமுத்துவும்
குமரி அனந்தன் அவர்களும் பெருந் துக்கத்தை
வெளிப்படுத்தி அறிக்கை வெளியிட்டு இருந்தனர்.
அவர்களின் அறிக்கை குறித்தும் நான் முன்பே
குறிப்பிட்டு இருந்தேன். இது குறித்து குமரி அனந்தன்
அவர்களைச் சந்தித்து அப்போதே உரையாடினேன்.
உரையாடலின்போது இடையிடையே குமரி அனந்தன்
அவர்கள் தமிழின் அவலம் குறித்த துக்கத்தில்
விம்மி விம்மி அழுதார். விடைபெற்று வரும்போது
நான் அவரின் காலில் விழுந்து வணங்கியபின்
விடைபெற்றேன்.
வைரமுத்துவும் இதைத்தான் சொல்கிறார். அவர்
சொல்வதில் பொய் எதுவும் இல்லை.
இதைத்தான் நான் பல ஆண்டுகளாகக் கூறிக்
கொண்டு இருக்கிறேன்.
தமிழ் பொருளுற்பத்தி மொழியாக இல்லை என்ற
உண்மையை முதன் முதலில் நான்தான் கூறினேன்.
உற்பத்தி மொழி என்ற கருத்தாக்கமே எனது
கண்டுபிடிப்புத்தான். என்னைத் தவிர வேறு யார்
எவரும், எனக்கு முந்தி உற்பத்தி மொழி என்ற
கருத்தாக்கத்தை அறிந்திருக்கவில்லை.
இந்திய-தமிழ்ச் சமூகத்தின் உற்பத்தி மொழியாக
ஆங்கிலமே இருந்து வருகிறது. தமிழோ சமஸ்கிருதமோ
இந்தியோ இந்தியாவின் உற்பத்தி மொழியாக இல்லை.
எது அறிவியல் மொழியோ அதுதான் உற்பத்தி மொழி.
உற்பத்தி என்பது அறிவு சார்ந்தது. ஜாவா, பைத்தான்
ஆகிய கணினி மொழிகள் ஆங்கிலத்தில்தான் உள்ளன.
உற்பத்தியில் ஆங்கிலம்தான் உள்ளது. தமிழ்
எங்கே உள்ளது?
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்குவதுதான்
எல்லாச் சிக்கல்களுக்கும் உரிய ஒரே தீர்வு.
தமிழை முழுமையானதொரு உற்பத்தி மொழியாக
ஆக்க இயலுமா? ஒருபோதும் இயலாது. ஆனால்
கடினமாக முயன்றால், ஓரளவுக்கேனும் பொருள்
உற்பத்தியில் பங்களிப்பைச் செய்ய வல்லதாக
தமிழை ஆக்க முடியும்.
இதை யாராவது செய்கிறார்களா? அதாவது
தமிழை உற்பத்தி மொழியாக ஆக்கும்
பெரும்பணியை யாராவது செய்கிறார்களா?
ஆம், நான் செய்கிறேன்; நான் மட்டுமே செய்து
வருகிறேன்.கடந்த 20 ஆண்டு காலமாக நான்
மட்டுமே செய்து வருகிறேன். தமிழை அறிவியல்
மொழியாக உற்பத்தி மொழியாக ஆக்கி வருகிறேன்.
தமிழில் அறிவியலைச் சொல்லி வருகிறேன்.
கடந்த பத்தாண்டுகளாக மிகவும் தீவிரமாக
தமிழில் அறிவியல் கட்டுரைகளை எழுதி
வருகிறேன்.தமிழ்ப் பகைவர்களின் வியூகங்களை
முறியடித்து வருகிறேன்.
என்றாலும் தமிழ் தமிழ் என்று போலியாகக்
கூச்சலிடும் குட்டி முதலாளிய வேசி மகன்கள்
எனது முயற்சிகளை ஆதரிப்பதில்லை.
அவர்கள் விரைவில் செத்துப் போவார்கள்.
நான் தமிழை வாழ வைப்பேன். எனது இறுதி மூச்சு
நிற்கிற வரைக்கும் தமிழ் வாழும்.
குமரி அனந்தன் அவர்களைப் போலவும்
வைரமுத்துவைப் போலவும் அழுது புலம்புவதோடு
நான் நிற்க மாட்டேன். நான் தமிழை வாழ
வைப்பேன். நான் உயிரோடு இருக்கும் வரை
தமிழ் வாழும். அது உற்பத்தி மொழியாக
அறிவியல் மொழியாகத் தன்னை ஆக்கிக்
கொள்ளும் முயற்சியில் முன்செல்லும்.
என்னுடைய இறுதி மூச்சு நிற்கிற வரை தமிழுக்கு
எந்தவொரு பங்கமும் நேராது. ஆனால் எவ்வளவு
காலம்தான் நான் வாழ இயலும்? எனது வாழ்நாள்
infinity அல்லவே! இப்போதே எனக்கு 70 வயது
ஆகிறதே!
நான் செத்துப்போனால் என்ன ஆகும்?
பூமடந்தை வாழப் புவிமடந்தை வீற்றிருக்க
நாமடந்தை நூலிழைந்தாள்
என்றல்லவா ஆகும் தமிழ்!
---------------------------------------------------------------
பின்குறிப்பு::
கனதனவான்களே,
உற்பத்தி மொழி என்பது முழுக்க முழுக்க
என்னுடைய மூளையில் உதித்த கருத்தாக்கம்.
அது எனக்கு மட்டுமே சொந்தமானது. அதன்
பதிப்புரிமை காப்புரிமை உள்ளிட்ட சகல
உரிமைகளும் எனக்கு மட்டுமே உண்டு. தயவு
செய்து அதைக் களவாண்டு விடாதீர்கள் ஐயா.
***************************************************** .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக