வியாழன், 7 ஜூலை, 2022

 சதுரங்கம் கணிதமே என்றும் 

ஆனந்த் கணித நிபுணர் என்றும்

நிரூபித்து  அறிவியல் ஒளி ஏட்டில் 

கட்டுரைகளை எழுதி உள்ளேன்.

இந்தியாவில் IQ அதிகமுள்ள 

மூன்று இந்தியர்களில் ஆனந்தும் 

ஒருவர் என்பதை நிருபித்து பதிவு 

செய்துள்ளேன். எனவே ஆனந்துக்கு 

பாரத ரத்னா வழங்கக் கோரி 

கடந்த பத்தாண்டுகளாகக் குரல் 

கொடுத்து வருகிறேன்.


இளையராஜாவை வெறும் சினிமா 

இசையமைப்பாளராக மட்டும் 

பார்ப்பது பெரும் reductionism. 

தியாகையருக்குப் பின் வந்த 

மகத்தான இசை மேதையான  

இளையராஜா சாதனையில் தியாகையரை 

விஞ்சியவர். பீத்தோவனின் சிம்பனி

போன்றதே இளையராஜாவின் சிம்பனி.

எம் எஸ் விஸ்வநாதன், ஏ ஆர் ரகுமான் 

போல் அல்லாமல் இந்த மண்ணின் 

இசையைத் தேடி எடுத்து 

வெளிப்படுத்தியவர் இளையராஜா.   

    

மேலும் ஆனந்த் இளையராஜா 

இருவருமே பத்ம விபூஷண் விருது 

வழங்கப் பட்டவர்கள். இதற்கு அடுத்த 

அந்தஸ்து பாரத ரத்னாதான்.


விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றியும் 

அவரின் கிரையோஜெனிக் எந்திரம் 

பற்றியும் அறியாதவர்களால் அவரின் 

மேதைமையைப் புரிந்து கொள்ள 

இயலாது. இது physics subject. அவருக்கும் 

பத்ம பூஷண் விருது வழங்கப் பட்டுள்ளது.


எனவே இம்மூவருக்கும் பாரத ரத்னா 

வழங்கப்பட வேண்டும் என்பது 

அறிவுபூர்வமான கோரிக்கை 

மட்டுமல்ல நியாயமான 

கோரிக்கையும் ஆகும். 

   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக