சனி, 23 ஜூலை, 2022

 அடுத்து வரும் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் 

முன்னோட்டமே ஜனாதிபதி தேர்தல்!

-------------------------------------------------------------------

POLITICAL ANALYSIS by நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------------- 

2019ல்  பாஜக இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்தது.

இன்று பாஜகவின் ஆட்சி  மூன்றாண்டுகளை நிறைவு 

செய்து விட்டது.2024 மார்ச் தேர்தலுக்கு இன்னும் 

19 மாதங்கள் மட்டுமே உள்ளன.


தற்போது (ஜூலை 2022) ஜனாதிபதி தேர்தல் நடைபெற்று 

முடிந்து விட்டது. பாகஜாவின் திருஒபதி முர்மு வெற்றி 

பெற்றுள்ளார். காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் 

நிறுத்திய யஷ்வந்த் சின்ஹா அவமானகரமான 

தோல்வியைத் தழுவி உள்ளார்.


1) எதிர்க்கட்சிகளால் திரௌபதி முர்முவை எதிர்த்து 

ஒரு சரியான வேட்பாளரை நிறுத்த இயலவில்லை.

தேர்தலில் தோல்வி அடைவதில் பெரிய குறை 

எதுவுமில்லை.ஆனால் யஷ்வந்த் சின்ஹா அடைந்த 

தோல்வி கெளரவமான தோல்வியோ அல்லது 

reasonableஆன தோல்வியோ அல்ல.


2) ஜனாதிபதி தேர்தல் எதிர்க்கட்சிகளின் 

பலவீனத்தையும் கையாலாகாத் தனத்தையும்

நன்கு அம்பலப் படுத்தி விட்டது. 2024 தேர்தலில்

எதிர்க்கட்சிகளும் காங்கிரசும் அடையப்போகும்

மெகா தோல்விக்கு ஜனாதிபதி தேர்தல் கட்டியம் 

கூறி விட்டது.


3) இந்தியாவில் மக்களவையில் உள்ள 543 இடங்களில் 

131 இடங்கள் தலித் மற்றும் பழங்குடியினருக்கு (SC,ST)

உரியவை. இதில் தற்போது பாஜக 77 இடங்களையும் 

காங்கிரஸ் 9 இடங்களையும் பெற்றுள்ளன.


திரௌபதி முர்முவின் வெற்றிக்குப் பின்னர் மேற்கூறிய 

131 இடங்களில் குறைந்தது 100 இடங்களை பாஜக 

கைப்பற்றும். காங்கிரசும் எதிர்க்கட்சிகளும்

தங்களின் தலித் வாக்கு வங்கியை கணிசமாக 

பாஜகவிடம் இழக்கும்.


திரௌபதி முர்முவுக்கு வாக்களிக்காமல் யஷ்வந்த் 

சின்ஹாவுக்கு வாக்களித்த துரோகிகள் இனி

சேரிகளில் நடமாட முடியாத நிலை ஏற்படும்.

SC/ST மக்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட 131

தொகுதிகளில் மேற்கூறிய துரோகிகள் 

போட்டியிட்டால் அவர்கள் காயடிக்கப் படுவார்கள்.

SC/ST மக்களை முட்டாள்கள் என்று கருதி அவர்களை 

ஏமாற்றலாம் என்று மனப்பால் குடிக்கும் 

துரோகிகள் வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத 

அளவுக்கு பாடம் கற்பிக்கப் படுவார்கள். 

*****************************************************************      

       

     

 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக