புதன், 6 ஜூலை, 2022

 நம்முடைய தமிழ் பொருளுற்பத்தியில் 

பயன்பட வேண்டும்! பொருளுற்பத்தியில் 

பயன்படும் தமிழ் மட்டுமே நின்று நிலைக்கும்.

------------------------------------------------------------

கணிதத்தில் வருகிற "பை"யின் மதிப்பு 

பொருளுற்பத்தில் முக்கியத்துவம் உடையது.

மாணவர்களுக்கு இது நன்றாகத் தெரிந்திருக்க 

வேண்டும்.

பை = 3.1415926535 (10 தசம இடங்களுக்கு)


இதை எளிதில் நினைவுகூர ஒரு ஆங்கில 

வாக்கியத்தை மனனம் செய்வர் மாணவர்கள்.


May I have a large container of coffee? 

என்ற வாக்கியமே அது.


இந்த வாக்கியத்தில் உள்ள வார்த்தைகளில் 

எத்தனை எழுத்துக்கள் உள்ளனவோ, அந்த 

எண்ணிக்கையே பையின் மதிப்பாக 

அமையும். (3.1415926)


ஆங்கில வாக்கியத்தைப் போலவே தமிழிலும் 

ஒரு வாக்கியம் வேண்டும் அல்லவா? யாராவது 

உருவாக்கி இருக்கிறார்களா? நான் 

உருவாக்கி உள்ளேன். அது இதுதான். 

மாணவர்களுக்கு இத்தமிழ் 

வாக்கியம் பயன்படட்டும்.


"அன்பே வா நண்பனே வா 

அதிரசம் முந்திரிப்பருப்பு

சீடை வாழைப்பழம்  

உண்ணலாம்." (3.14159265).

(அறிவியல் ஒளி ஏட்டில் வெளியான 

என் கட்டுரையில் இருந்து).  


இன்றைக்கு இது போன்ற தமிழ்தான் 

தேவை. தமிழ் மீது மெய்யான பற்றுள்ள 

தமிழர்கள் இந்த வாக்கியத்தை 

ஆதரிக்கிறார்கள். .

----------------------------------------------------------




  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக