ஞாயிறு, 26 ஜூன், 2022

 நாடாளுமன்ற இடைத்தேர்தல் முடிவுகள்!

-----------------------------------------------------------------

இன்று (ஜூன் 26, 2002) நாடாளுமன்ற மக்களவைக்கு 

முன்பு நடந்து முடிந்த இடைத்தேர்தலின் முடிவுகள் 

வெளியாகின.


தேர்தல் நடந்தது மொத்தம் 3 MP இடங்களுக்கு.

உபியில் 2 இடங்களுக்கும் பஞ்சாப்பில் ஒரு 

இடத்துக்கும் ஆக மொத்தம் 3 இடங்களுக்கு 

நடந்த தேர்தல் முடிவுகள் வருமாறு-


பாஜக = 2 இடங்களில் வெற்றி. (இரண்டும் உபி).

அகாலிதளம் (மான் பிரிவு) 1 இடத்தில் வெற்றி.(பஞ்சாப்).

காங்கிரஸ் = 0

சமாஜ்வாதி = 0

ஆம் ஆத்மி = 0.


பஞ்சாப்பில் ஆம் ஆத்மி படுதோல்வி அடைந்தது.

தற்போது பஞ்சாபில் முதல்வராக இருப்பவர் 

ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த பகவத் மான்.

முதல்வராவதற்கு முன் இவர் எம்பியாக 

இருந்தார். முதல்வரான பின் எம்பி பதவியை 

ராஜினாமா செய்தார். இந்த இடத்திற்குத்தான் 

(சங்ரூர் தொகுதி) இப்போது இடைத்தேர்தல் நடந்தது.


இதில் முதல்வர் வெற்றி பெற்ற தொகுதியை 

அகாலிதளம் (மான்) வேட்பாளரிடம் ஆம் ஆத்மி  

இழந்தது.      


அடுத்து உபியில் அசம்கார், ராம்பூர் என்ற இரண்டு 

இடங்களுக்கு இடைத்தேர்தல் நடந்தது. இந்த 

இரண்டுமே சமாஜ்வாதி கட்சி வேட்பாளர்கள்

வெற்றி பெற்ற இடங்கள். இந்த இரண்டு 

தொகுதிகளையும் பாஜக கைப்பற்றிக் கொண்டது.

இரண்டையும் பரிதாபமாக  சமாஜ்வாதி கட்சி இழந்தது.


இதில் ராம்பூர் தொகுதியானது சமாஜ்வாதி தலைவர் 

அசம்கானின் கோட்டையாகும். இத்தொகுதியில் 

50 சதத்திற்கும் மேலாக இஸ்லாமியப் பெருமக்கள் 

வாழ்ந்து வருகின்றனர். இத்தொகுதியில் 

அனாயாசமாக பாஜக வெற்றி பெற்றுள்ளது. 


அடுத்த தொகுதியான அசம்கார் தொகுதி 

முலாயம்சிங் முன்பு போட்டியிட்டு வென்ற

தொகுதியாகும். இதிலும் சமாஜ்வாதி கட்சி 

பாஜகவிடம் தோற்றுப் போனது.


ரௌடிகளின் ராஜ்யமான உபியில் சட்டம் 

ஒழுங்கை நிலைநாட்டும் யோகி ஆதித்யநாத்தின்

முயற்சிகளுக்கு மக்களின் வரவேற்பு இருக்கிறது 

என்பதே பாஜகவின் வெற்றிக்குக் காரணம் ஆகும்.


7 சட்டமன்றத் தொகுதிகளுக்கும்

3 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும்  

ஆக மொத்தம் 10 தொகுதிகளுக்கு நடந்த 

இடைத்தேர்தலில் முடிவுகள் இன்று 

வெளியாயின. மேற்கொற்றிய 10 தொகுதிகளும் 

டெல்லி உள்ளிட்ட 6 மாநிலங்களில் உள்ளவை.

-----------------------------------------------------------------

பி.கு: சட்ட மன்றத் தேர்தல் குறித்து அடுத்த 

கட்டுரையில் பார்ப்போம்.

***************************************

        

  


சனி, 25 ஜூன், 2022

பஞ்சாங்கம் என்றால் என்ன?
-------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
பஞ்சாங்கம் என்பது ஒரு தயார்நிலை அட்டவணை.
அதாவது அது ஒரு Ready Reckoner. Trigonometric tables 
போன்றதே பஞ்சாங்கம். அரசு அலுவலகங்களில் 
pay bill sectionல் ஒவ்வொருவரின் மேசை மீதும் 
பஞ்சப்படி கணக்கிடும் ரெடி ரெக்னர் இருக்கும்.
அதைப் பார்த்து இருக்கிறீர்களா? 

தமிழ்ச் சூழலில் ஒரு negative connotation ரைடர் (rider) 
பஞ்சாங்கத்துடன் கூடவே இருந்து கொண்டு  
கழுத்தறுக்கிறது. உலகின் வேறு எந்தப் பகுதியிலும்
இது போன்ற negative connotation இல்லை.  

Negative connotation என்றால் என்ன என்றும் rider என்றால் 
என்ன என்றும் நன்கு தெரிந்தவர்கள் மேற்கொண்டு 
படிக்கலாம். ஏனையோர் வெளியேறலாம்.    

1969-70ல் நான் SSLC (11ஆம் வகுப்பு) படித்துக் 
கொண்டிருந்த நேரம். ஆங்கிலப் பாடப் புத்தகத்தில்
ஆப்ரகாம் லிங்கன் பற்றிய ஒரு பாடம்.

லிங்கன் ஒரு வழக்கறிஞராக இருந்தார். ஒரு 
குறிப்பிட்ட நாளில் சூரிய உதயம் எப்போது 
நிகழ்ந்தது என்று அறிய விரும்பினார். 
அது ஒரு வழக்கின் தேவை. அதற்காக ஒரு 
almanac வேண்டுமென்று நீதிமன்றத்தில் கேட்டார்.

almanac என்பது collection of astronomical data. அதாவது 
வானியல் தரவுகளின் தொகுப்பு. அதாவது 
பஞ்சாங்கம். அவர் கோரிய பஞ்சாங்கம் தருவிக்கப் 
பட்டதும் சூரிய உதய நேரத்தை அறிந்து கொண்டு 
வழக்கை நடத்தி வெற்றி கண்டார்.

தமிழ்நாட்டில் ஒருவர் தமக்குப் பஞ்சாங்கம் தேவை 
என்று கூறுவாரேயாகில் என்ன நடக்கும்? 
தமிழ்நாட்டில் உள்ள அத்தனை விபச்சாரத் 
தரகர்களும் கேலிச்சிரிப்புடன் அதனை 
எதிர்கொள்ளுவார்கள்.

பஞ்சாங்கம் என்பது collection of astronomical empirical data
என்று யாருக்கும் புரிய வைக்க முடியாது.

பஞ்சாங்கத்தின் பயன் என்ன? ஒரு trigonometric 
tablesன் பயன் என்ன? அதேதான். போன வருஷம் 
ஆவணி மாதம் ஒரு குறிப்பிட்ட நாளில் என்ன திதி 
என்று தெரிய வண்டி இருக்கிறது. எப்படித் தெரிந்து 
கொள்ளுவது? இதற்கு பஞ்சாங்கம் பயன்படும்.

சூரிய சந்திர கிரகணங்கள் எந்தெந்தத் தேதியில்,
என்னென்ன நேரத்தில் ஏற்படும்? இதைத் தெரிந்து 
கொள்ளப் பஞ்சாங்கம் பயன்படும்.

மற்றப்படி பஞ்சாங்கத்தில் ஜோசியப் பகுதி 
ஒன்று உண்டு. பள்ளி விழும் பலன் முதல் தோஷங்கள் 
அவற்றின் பரிகாரங்கள் என்றெல்லாம் நிறைய உண்டு.
இப்பகுதி முற்றிலும் அறிவியலுக்கு எதிரானது. ஆக 
பஞ்சாங்கம் என்பதன் கூறுகள் இரண்டு. பஞ்சாங்கம் 
என்பது ஒரு two in one ஏற்பாடு.

இஸ்ரோவிலும் சரி, நாசாவிலும் சரி, சீன ரஷ்யாவிலும்
சரி, எல்லா நாடுகளின் வானியலிலும் (astronomy)
பஞ்சாங்கம் பயன்படுகிறது. எவ்வாறு trigonometric tables
பயன்படுகிறதோ, அவ்வாறே பஞ்சாங்கமும் 
பயன்படுகிறது. விண்வெளி அமைப்புகளைப் 
பொறுத்தமட்டில், அவை பஞ்சாங்கத்தின் அறிவியலுக்கு 
எதிரான பகுதியை நிராகரித்து, அறிவியல் பகுதியைப் 
பயன்படுத்தி வருகின்றன.

பஞ்சாங்கத்தை முற்றிலுமாக நிராகரிப்பது 
தற்குறித்தனம். முற்றிலுமாக ஏற்பது கோமாளித்தனம்.
கொள்வன கொண்டு தள்ளுவன தள்ளித்தான்
பஞ்சாங்கத்தை ஏற்க வேண்டும். இதுதான் 
பஞ்சாங்கம்  குறித்த அறிவியல் கண்ணோட்டம்.
----------------------------------------------------------------------
பின்குறிப்பு:
இயந்திரவியலில் நியூட்டனின் மூன்று இயக்கம் 
பற்றிய விதிகளை (Newton's laws of motion) வாசகர்களில் 
சிலர் அறிந்திருக்கலாம். வானியலைப் பொறுத்து 
கெப்ளரின் மூன்று விதிகளை ஒவ்வொருவரும் 
அறிந்திருக்க வேண்டும். 
********************************************** 

  

           



 
  


அன்று வள்ளுவர் சொன்னார்!
இன்று நியூட்டன் அறிவியல் மன்றம் சொல்கிறது!
பஞ்சாங்கமும் மாதவனும் குட்டி முதலாளித்துவமும்!
நடிகர் மாதவனின் கூற்று ஒரு LAYMANன் கூற்றே!    
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
நமது முன்னோர்கள் கணித்த பஞ்சாங்கக்  
கணக்கீடுகள் செவ்வாய்க்கு நாம் அனுப்பிய 
மங்கள்யானின் வெற்றிக்கு உதவியது என்பதாக 
நடிகர் மாதவன் கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் மாதவன் அறிவியலுக்கு 
எதிராகப் பேசியதாக குட்டி முதலாளித்துவம் 
கண்டனங்களை எழுப்பி வருகிறது.

நடிகர் மாதவன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறாரா 
அல்லது தவறாகச் சொல்லி விட்டாரா என்ற 
ஆராய்ச்சி முற்றிலும் தேவையற்றது. ஏனெனில் 
மாதவன் கூறியதற்கு எவ்விதமான canonical statusம் 
கிடையாது என்று எனது முந்தைய பதிவில் 
கூறி இருந்தேன்.

நடிகர் மாதவன் அறிவியலாளரோ, அறிவியல் 
கற்றவரோ, அறிவியலைப் போதிக்கும் ஆசிரியரோ 
அல்லர் என்பதால், அவருடைய கூற்று ஒரு 
layman's point of view மட்டுமே! அதை ஆய்வுக்கு 
உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 
அதற்கு canonical status கிடையாது.

மாதவனின் கூற்றுக்கு canonical status கிடையாது 
என்று நான் இன்று கூறுவதையே  2000 ஆண்டுகளுக்கு 
முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
கொள்ளார் அறிவுடை யார் 
என்கிறார் வள்ளுவர். 

அறிவியல் கற்றிராத நடிகர் மாதவனின் கூற்றுக்கு 
canonical status கிடையாது என்று நியூட்டன் அறிவியல் 
கூறுவதும், கல்லாதான் ஒட்பம் கொள்ளார் 
அறிவுடையார் என்று வள்ளுவர் கூறுவதும் 
சமமானவை! சமமான பொருள் உடையவை!
Great men think alike!
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஆங்கிலமும் தெரியாது! திருக்குறளும் தெரியாது!
Canonical statusம் தெரியாது! கல்லாதான் ஒட்பம் 
என்றாலும் தெரியாது. கல்வியறிவு வேண்டும்,
IQ வேண்டும் என்று நான் நிபந்தனை விதித்தால், 
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் ஆத்திரப்  
படுகிறார்கள். அவர்கள் உயிர் வாழத் தகுதியற்ற 
கயவர்கள்.
***********************************************      

    




 

 
  
நடிகர் மாதவன் கொடுத்து வைத்தவர்!
அவர் பேசிய எதற்கும் canonical status கிடையாது!
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------
இஸ்ரோ விஞ்ஞானி நம்பி நாராயணன் குறித்து 
ஒரு திரைப்படம் எடுத்துள்ளார் நடிகர் மாதவன்.
தமது படம் குறித்துப் பேசுகையில், இந்தியாவின் 
கோள்சுற்றியான (orbiter) மங்கள்யான் மிகவும் 
குறைந்த செலவில் அனுப்பப் பட்டது என்ற 
உண்மையையும் சொல்லியுள்ளார்.

இவ்வாறு குறைந்த செலவே ஆனதற்கு நமது 
முன்னோர்களின் பஞ்சாங்கக் கணக்கீடுகளைப்
பயன்படுத்தியதே காரணம் என்றும் நடிகர் 
மாதவன் கூறியுள்ளார்.

பஞ்சாங்கக் கணக்கீடுகள் செலவுக் குறைப்புக்கு 
எவ்வாறு உதவின என்று அவர் கூறவில்லை. அதைக் 
கூறுவதும் அனைவருக்கும் புரியுமாறு அதை 
விளக்குவதும் மெய்யாகவே அவருக்குச் சாத்தியமற்றது. 

நடிகர் மாதவன் விஞ்ஞானி அல்லர்.
அறிவியல் பேராசிரியரோ, ப்ளஸ் டூ மாணவர்களுக்கு 
இயற்பியல் போதிப்பவரோ அல்லர்.
celestial mechanics கற்றவரும் அல்லர்.

மற்றவர்களிடம் இருந்து கேட்டுத் தெரிந்து 
கொண்டதை, அவர் எப்படிப் புரிந்து கொண்டாரோ, 
அப்படியே அவர் கூறியுள்ளார்.

எனவே நடிகர் மாதவன் சொன்னதற்கு எவ்விதமான 
canonical statusம் கிடையாது. நான் ஆயிரம் முறை 
அடித்துக் கூறுகிறேன். நடிகர் மாதவன் என்ன சொல்லி 
இருந்தாலும், அவர் சொன்ன எதற்கும் canonical status
கிடையாது.

Canonical status அல்லாத ஒரு textக்கு பதவுரை 
பொழிப்புரை எழுதுவது தற்குறிகளின் வேலை. 
திராவிடக் கணிகைகளுக்குப் பிறந்த கருவின் 
குற்றங்கள் இவ்வாறு விருத்தியுரை எழுதி 
வருவதைக் கண்டு நாம் நாணுவோம்.

பிறர்நாணத் தக்கது தான்நாணான் ஆயின் 
அறம்நாணத் தக்கது உடைத்து.     .
------------------------------------------------------------------
பின்குறிப்பு:
கணிகைக்குப் பிறந்த பயல்களை அதிகம் கொண்டது 
தமிழ்நாடு. இவர்களால் சினிமா நடிகன் கடவுளுக்குச் 
சமமாகக் கொண்டாடப் படுவான். தற்போது
நடிகர் மாதவன் had farted. கருவின் குற்றத்தால் 
பிறந்த Dravidian scumகளுக்கு இந்த farting ஒரு 
மாபெரும் வரப் பிரசாதம். எனவே அமெரிக்காவில் 
உள்ள வழுக்கைத்தலை சவுண்டிப் பாப்பான் முதல்
திராவிடக் கணிகைக்குப் பிறந்த பயல்கள் வரை 
அனைவரும் தற்போது மாதவனின் fart ஆராய்ச்சியில் 
இறங்கி விட்டான்.

மேலும் ஒரு பின்குறிப்பு:
முதல் பின்குறிப்பில் வழுக்கைத்தலை என்று குறிப்பிடப் 
பட்டு இருப்பதில் உருவக் கேலியோ அல்லது 
தாலியறுத்த கேலியோ எதுவும் கிடையாது. குற்றச் 
செயல் புரிந்த கிரிமினல் ராஸ்கலின் அடையாளத்தைத் 
தெளிவாகக் கூற வேண்டும் என்ற அக்கறையின் 
விளைவே அது.  
 *****************************************************        


     
       


பௌதிக யதார்த்தம் (Reality) என்றால் என்ன? 
குவான்டம் விசையியலும் பௌதிக மெய்ம்மையும்!
Quantum mechanics and the Physical Reality!
பொருள்முதல்வாதம் பற்றிய முக்கியமான கட்டுரை!
---------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------------------------------
புறநிலை மெய்ம்மை அல்லது பௌதிக மெய்ம்மை
(physical reality) என்பது குவான்டம் விசையியலிலும்
தத்துவத்திலும் (philosophy) அடிப்படையான முக்கியத்துவம்
வாய்ந்தது.

1 அடி நீளம், 1 அடி அகலம், 1 அடி உயரம் உள்ள ஒரு
கன சதுரப் பெட்டியில் ஒரு எலக்ட்ரான் இருப்பதாக
வைத்துக் கொள்வோம். பெட்டியின் நடுவிலோ,
ஓரத்திலோ, அடியிலோ, பக்கவாட்டிலோ இப்படி
ஏதேனும் ஓர் இடத்தில் அத்துகள் இருக்கக் கூடும்.

அத்துகள்  எங்கே இருக்கிறது என்பதைத் துல்லியமாக
அறிய இயலுமா? குவாண்டம் விசையியல் என்ன
கூறுகிறது?

வெர்னர் ஹெய்சன்பெர்க் (Werner Heisenberg) இதற்குப்
பதிலளிக்கிறார். இவர் தாம் கண்டு பிடித்த
உறுதியின்மைக் கோட்பாட்டுக்காக (uncertainty principle)
நோபல் பரிசு பெற்றவர்.

மிகவும் எளிமையாகச் சொன்னால், உறுதியின்மைக்
கோட்பாடு என்பது இதுதான்:
"ஒரு துகளின் இருப்பிடத்தையும் அதன் வேகத்தையும்
ஒரே சமயத்தில் ஒருபோதும் துல்லியமாகச் சொல்ல முடியாது.
இருப்பிடத்தைத் துல்லியமாகக் கூறினால்,
வேகத்தைத் துல்லியமாகக் கூற இயலாது.அதைக்
கணிப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்.
வேகத்தைத் துல்லியமாகக் கூறினாலோ, இருப்பிடத்தை
அளப்பதில் பெரும் பிழை ஏற்பட்டு விடும்". இதுதான்
உறுதியின்மைக் கோட்பாடு.

மேலே கூறியிருப்பது உறுதியின்மைக் கோட்பாட்டின்
official version அல்ல. ஆங்கிலத்தில் இக்கோட்பாடு
பின்வருமாறு கூறப்படுகிறது. ஆங்கிலத்தில்
உள்ளதே அதிகாரபூர்வமானது.

Uncertainty principle:
"The position and momentum of a particle cannot be simultaneously
measured with precision."

ஆக பெட்டிக்குள் உள்ள எலக்ட்ரான் எந்த இடத்தில்
இருக்கிறது என்பதை ஒருபோதும் துல்லியமாகக்
கூற முடியாது என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.
இவ்வாறு துல்லியமாகக் கூற முடியாமல் போவதற்கு
என்ன காரணம்? கருவிகளின் நுட்பமின்மையா?
இல்லை என்கிறார் ஹெய்ஸன்பெர்க். That uncertainty is
INHERENT in nature என்கிறார் அவர். இத்தகைய
உறுதியின்மை இயற்கையாகவே இருக்கிறது
என்கிறார் ஹெய்சென்பெர்க்.

அப்படியானால் பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரானின்
இருப்பிடத்தை அறியவே முடியாதா? இதற்கு
விடையளிக்கிறார் எர்வின் ஷ்ராடிங்கர் (Erwin Schrodinger)
என்னும் ஆஸ்திரிய விஞ்ஞானி. இவரும் இயற்பியலில்
நோபல் பரிசு பெற்றவர்.

குவான்டம் விசையியலில் ஷ்ராடிங்கரின் Wave equation
மிகவும் புகழ் பெற்றது; மிகவும் அடிப்படையானது.
பெட்டிக்குள் இருக்கும் எலக்ட்ரான் எந்த இடத்தில்
இருக்கக்கூடும் என்பதற்கான நிகழ்தகவை (probability)
தெளிவாகக் கூற முடியும் என்கிறது ஷ்ராடிங்கரின்
சமன்பாடு.

படத்தில் உள்ள ஷ்ராடிங்கரின் சமன்பாட்டைப்
பாருங்கள். இச்சமன்பாட்டுக்கான விளக்கம்
இக்கட்டுரையின் வரம்புக்கு அப்பாற்பட்டது.
சமன்பாட்டில் வரும் கிரேக்க எழுத்தான
ப்சை (psi) என்பதைக் கவனியுங்கள்.

இந்த "ப்சை" ஐ square செய்து அதன் absolute valueஐக்
கண்டறிந்தால், அது துகள் இருக்கும் இடத்திற்கான
நிகழ்தகவை அறிவிக்கும். அதாவது,
modulus psi squared = probability density.
 
ஆக, துகளின் துல்லியமான இருப்பிடத்தை (exact location)
கூற இயலாது. அதாவது இந்த இடத்தில்தான் துகள் இருக்கிறது
என்று அடித்துக் கூற இயலாது. ஆனால் எந்த இடத்தில்
இருக்கக்கூடும் என்பதற்கான நிகழ்தகவை மட்டுமே
கூற இயலும்.
  
ஒரு துகள் எங்கே இருக்கிறது என்பதைக்கூட
அறிவியலால் சொல்ல முடியாதா? அப்படியானால்
அறிவியல் குறைபாடு உடையதுதானே என்று
சிலர் கேட்கலாம். துகளின் இருப்பிடத்தைக்
கூற முடியாமல் போனதில் அறிவியலின் குறைபாடு
எதுவும் இல்லை. இயற்கை அப்படித்தான் இருக்கிறது.
அதாவது பௌதிக மெய்ம்மை எனப்படும் physical reality
அப்படித்தான் இருக்கிறது.

புறநிலை மெய்ம்மை அதாவது இயற்கை இப்படித்தான்
இருக்க வேண்டும் என்று  மனிதன் ஒரு சட்டகத்தை
(frame) உருவாக்கிக் கொண்டு, அதனுள் இயற்கையை
அடைக்க முடியாது. " இயற்கை எப்படி இருக்கிறதோ
அதை அப்படியே மனிதன் ஏற்றுக் கொள்ள வேண்டும்"
என்கிறார் வெர்னர் ஹெய்சென்பெர்க்.

என்றாலும் ஐன்ஸ்டின் குவான்டம் விசையியலில்
உள்ள இந்த உறுதியின்மையை (uncertainty) ஏற்றுக்
கொள்ள விரும்பவில்லை. ஐன்ஸ்டின் மட்டுமா?
லூயி டி பிராக்லியம் விரும்பவில்லை. இன்னும்
சிலரும் விரும்பவில்லை. அக்காலத்தில் நியல்ஸ் போர்
(Neils Bohr) தலைமையில் சிலரும் ஐன்ஸ்டின்
தலைமையில்  சிலரும் என அறிவியல் உலகமே
இரு பிரிவாகப் பிரிந்து நின்று விவாதித்தது.

மனிதனின் சட்டகத்துக்குள் இயற்கை ஒருபோதும்
அடங்காது. இயற்கையை அது எப்படி இருக்கிறதோ
அப்படியே அதைப் புரிந்து கொள்வதுதான் சரியானது.
பௌதிக மெய்ம்மை (physical reality) என்பது இப்படித்தான்
இருக்கிறது; அது ஏகப்பட்ட உறுதியின்மைகளைக்
கொண்டிருக்கிறது என்றால், அதை அப்படியே
ஏற்றுக் கொள்வதுதான் சரியானது.

சரி, இந்தக் கட்டுரை புரிகிறதா? குவான்டம்
விசையியலிலும் தத்துவத்திலும் உள்ள மிக
முக்கியமான ஒரு பிரச்சினை குறித்து எழுதப்பட்ட
கட்டுரை இது. இதை இந்த அளவுதான்
எழுத இயலும். தமிழில் எழுதுவது ஒரு சிக்கல்.
அறிவியல் குறியீடுகளைப் பயன்படுத்தாமல்
எழுதுவது இன்னொரு சிக்கல்.

ஒரு முறைக்கு இருமுறை படியுங்கள். புரிந்து
கொள்ள முயற்சி செய்யுங்கள்.இந்தப் பொருளில்
தமிழில், இவ்வளவு  அக்கறையுடன் எவரும் எழுதப்
போவதில்லை.
----------------------------------------------------------------
பின்குறிப்பு-1:
அறிவியல் ஒளி இதழில் இக்கட்டுரை ஆசிரியர் எழுதிய
ஷ்ராடிங்கரின் பூனை என்ற கட்டுரைப் படிப்பது
இக்கட்டுரையைப் புரிந்து கொள்ள உதவும்.

பின்குறிப்பு-2:
ரியாலிட்டி குறித்த இதுவரையிலான நமது பார்வையை 
தலைகீழாக மாற்றிப் போட்டு விட்டது உறுதியின்மைக்
கோட்பாடு! ஏகப்பட்ட uncertaintyக்ளிக் கொண்டதாகத்தான் 
இயற்கை இருக்கிறது என்பது இதுவரை நாம் அறியாத 
ஆனால் நிரூபிக்கப்பட்ட கோட்பாடு!  
**********************************************

 
 


.                

 பிரபஞ்சம் எப்படி இருக்கிறதோ அதை அப்படியே

பொருள்முதல்வாதம் பிரதிபலிக்கிறதா?
ஒரே நேரத்தில் இரண்டு நிலைகளில்
இருக்கும் எலக்ட்ரான்!
------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
-----------------------------------------------------------
பூமி தன்னைத்தானே சுற்றுகிறது என்பது
நமக்குத் தெரியும். சந்திரன் எப்படி? அதுவும்
தன்னைத்தானே சுற்றுகிறது. மற்றக் கோள்கள்
எப்படி? அவையும் தம்மைத்தாமே சுற்றுகின்றன.
ஆங்கிலத்தில் இதை rotation என்று சொல்லுகிறோம்.
எலக்ட்ரான் என்பது மிகவும் நுண்ணிய ஒரு துகள்.
இதுவும் தன்னைத்தானே சுற்றுகிறது. இதை
தற்சுழற்சி (self spin) என்கிறோம்.
இப்படி எலக்ட்ரான் தன்னைத்தானே சுற்றுவதில்
இரண்டு விதம் உண்டு.
1. மேல்நோக்கிய சுழற்சி (SPIN UP)
2. கீழ்நோக்கிய சுழற்சி (SPIN DOWN).
இக்கட்டுரையுடன் இணைக்கப்பட்ட
படங்களைப் பார்க்கவும்.படங்களில் உள்ள
அம்புக் குறிகளை கவனமாகப் பார்க்கவும்.
சரி, இப்போது குவான்டம் தியரிக்கு வருவோம்.
Quantum Superposition என்று ஒரு கோட்பாடு உண்டு.
ஒரு துகள் ஒரே சமயத்தில் ஒன்றுக்கு
மேற்பட்ட நிலைகளில் (states) இருக்கும்.என்று
குவான்டம் சூப்பர்பொசிஷன் கோட்பாடு கூறுகிறது.
ஸ்பின் அப் (spin up) என்பது ஒரு நிலை (state);
ஸ்பின் டவுன் (spin down) என்பது ஒரு நிலை.
ஒரே நேரத்தில் இவ்விரண்டு நிலைகளிலும்
ஒரு எலக்ட்ரான் இருக்கும் என்று சூப்பர்
பொசிஷன் கோட்பாடு கூறுகிறது.
இதை நம் பகுத்தறிவு ஏற்க மறுக்கிறது.
இல்லையா? சரி, பகுத்தறிவு என்பது என்ன?
பிறந்ததில் இருந்து பதினெட்டு வயது வரை
நம் மூளையில் அடைக்கப்பட்டு உறைந்து
போய் இருக்கும் சிந்தனையைத்தான்
பகுத்தறிவு என்கிறோம். அதாவது தகவல்கள்,
தர்க்கங்கள், விதிகள் போன்ற பலவற்றின்
தொகுப்புதான் பகுத்தறிவு.
இதுவரைக்கும் நமது அறிவு சரியென்று எதை
நம்பியதோ, அதற்கு நேர் எதிராக ஒரு விஷயம்
வரும்போது, நமது அறிவு அதை ஏற்க மறுக்கிறது.
நமது அறிவு அதை ஏற்க மறுக்கிறது
என்பதாலேயே அது உண்மையல்ல என்று
ஆகி விடுமா?
ஒரே நேரத்தில் ஒரு எலக்ட்ரான் SPIN UP,
SPIN DOWN ஆகிய இரு சாத்தியமான
நிலைகளிலும் இருக்கிறது என்பது
பல்வேறு பரிசோதனைகளில் நிரூபிக்கப்
பட்டு இருக்கிறது.
ஒரு நுண்ணிய துகளான எலக்ட்ரான்
அலையாகவும் இருக்கிறது என்பதை
முன்பு எழுதி இருந்தேன். துகள் என்றாலே
மிக மிக மிக நுண்ணிய ஒரு பொருள்.
அலை என்றால் நீளமாக இருப்பது. .
இவ்வளவு நுண்ணிய ஒரு துகள் எப்படி
அலையாக இருக்க முடியும் என்று நம்
பகுத்தறிவு நம்ப மறுத்தது.
ஆனால் எலக்ட்ரான் அலையாகவும் இருக்கிறது
என்பது நிரூபிக்கப்பட்டு, எலக்ட்ரானின்
அலைநீளமும் கண்டு பிடிக்கப்பட்டது.
முந்திய கட்டுரையில் எலக்ட்ரானின்
அலைநீளத்தைக் கண்டுபிடிக்கும் கணக்கு
ஒன்றைக் கொடுத்திருந்தேன். நினைவு
இருக்கிறதா? அந்தக் கணக்கில் எலக்ட்ரானின்
அலைநீளம் சில நானோமீட்டர் என்று .பார்த்தோம்.
குவான்டம் கம்ப்யூட்டர் என்ற ஒன்று தயாரிப்பில்
இருக்கிறது. என்று முடியுமோ தெரியவில்லை.
சாதாரண கம்யூட்டர்கள் 0 அல்லது 1 என்ற இரண்டு
நிலைகளில் ஏதாவது ஒரு நிலையில் இருக்கும்.
குவாண்டம் கம்ப்யூட்டர் ஒரே நேரத்தில் 0, 1 என்ற
இரண்டு நிலைகளிலும் இருக்கும். அது தயாராகி
விற்பனைக்கு வரதன் போகிறது! அப்போது எப்படி
ஒரு எலக்ட்ரான் ஒரே நேரத்தில் 0,1 என்னும்
இரண்டு நிலைகளிலும் இருக்கிறது என்பதை
எல்லோரும் உணரலாம்..
இக்கட்டுரையின் தொடக்கத்தில் ஒரு எலக்ட்ரான்
ஒரே நேரத்தில் ஸ்பின் அப், ஸ்பின் டவுன் என்ற இரு
நிலைகளிலும் இருக்கிறது என்பதைச் சொல்லி
இருந்தேன். இதைப் புரிந்து கொள்ள ஒரு
படத்தையும் இணைத்துள்ளேன். அதை நன்றாகப்
பாருங்கள். அதில் ஒரு எலக்ட்ரானின் இரண்டு
முனைகளிலும் அம்புக்குறி இருப்பதை பாருங்கள்.
மேலும் ஸ்பின் அப், ஸ்பின் டவுன் என்ற இரண்டும்
64, 36 என்ற விகிதத்தில் அதில் உள்ளதைப்
பாருங்கள். இந்த 64,36 என்ற விகிதம் எப்படி வந்தது என்பதற்கெல்லாம் சூத்திரங்கள் உள்ளன.
ஒரு குவான்டம் கம்ப்யூட்டரில் ஒரு எலக்ட்ரான்
ஒரே நேரத்தில் SPIN UP, SPIN DOWN என்ற இரண்டு
நிலைகளிலும் இருப்பதை உணர்த்தும் படம் அது.
சரி, இதையெல்லாம் ஏன் சொல்ல வேண்டும்?
சொல்லியாக வேண்டும். இதெல்லாம் ADVANCED
Quantum Physics என்பதனால், வெகு சிலரே இதை
அறிந்திருக்க முடியும். மேலும் இந்த விவரங்கள்
எல்லாம் ஆங்கிலத்திலும் பிற மொழிகளிலுமே
உள்ளன. தமிழில் இல்லை. 700 கோடி உலக மக்கள்
தொகையில், இதைத் தமிழில் சொல்வது
நியூட்டன் அறிவியல் மன்றம் மட்டுமே.
பொருள்முதல்வாதம், கருத்துமுதல்வாதம்
என்றெல்லாம் சொல்லிக் கொண்டு
இருக்கிறோமே! இன்றைய குவான்டம்
இயற்பியல் எல்லாவற்றையும் தலைகீழாகப்
புரட்டிப் போட்டுக் கொண்டு இருக்கிறதே!
தத்துவத்தைப் புதுப்பிக்க வேண்டாமா?
வேண்டாம் என்றால், இன்றைய இயற்பியல்
பிரபஞ்சம் பற்றிய பார்வையை அடியோடு
மாற்றி விடுகிறதே! அதற்கெல்லாம்
பொருள்முதல்வாதத்தில் என்ன விளக்கம்
இருக்கிறது?
ஆக, இவை மார்க்சியர்களின் கவனத்துக்கு
உரியவை. கவனத்திற்கு கொண்டு வருகிறோம்!
******************************************
.

வியாழன், 23 ஜூன், 2022

ஜனாதிபதி வேட்பாளர்களான 
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு இருவரில்  
இந்துத்துவத் தன்மை யாருக்கு அதிகம்?
------------------------------------------------------------------
யஷ்வந்த் சின்ஹா ஒரு தீவிரமான இந்துத்துவர்.
வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக 
இருந்தார்.

2014 நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்குப் பதிலாக
இவருடைய மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு சீட் 
கொடுத்தது பாஜக. ஜெயந்த் சின்ஹா தமது 
தந்தையின் தொகுதியான ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்) 
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நிதித்துறை இணையமைச்சர் பதவியை அவருக்கு 
வழங்கினார் மோடி.

தான் எம்பியாகவும் இல்லை; அமைச்சராகவும் இல்லை 
என்பதால் மிகவும் எரிச்சலுற்ற யஷ்வந்த் சின்ஹா 
தமது இழந்த செல்வாக்கை மீட்க ஜார்க்கண்ட் 
மாநிலத்தில் தமது ஹசாரிபாக் தொகுதியில் 
ஒரு பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்தத் 
திட்டமிட்டார். நூற்றுக்கணக்கான இஸ்லாமியக் 
குடும்பங்களை அடித்து விரட்டும் நோக்கத்துடன்
அவர் கலவரத்த்ற்குத் திட்டமிட்டார்.

2017ஆம் ஆண்டு ராமநவமித் திருநாளின்போது 
ஒரு பெரும் இந்துத்துவ ஊர்வலத்தை பெரும் 
வன்முறையுடன் நடத்தி மதக்கலவரத்துக்கு 
வித்திட்டார். ஆனால் ஜார்க்கண்ட் முக்தி 
மோர்ச்சாவும் ஹேமந்த் சோரனும் சின்ஹாவுக்கு 
எதிராகச் செயல்பட்டு மதக்கலவரம் நிகழாமல் 
தடுத்து விட்டனர். இவ்வாறு பாஜகவில் செல்வாக்குப் 
பெறும் யஷ்வந்த் சின்ஹாவின் முயற்சி தோல்வியில் 
முடிந்தது.

இதன் பிறகு, மிக அண்மையில்தான் சின்ஹா 
மமதாவின் திரணமூல் கட்சியில் சேர்ந்தார்.

சின்ஹாவுடன் ஒப்பிடும்போது திரௌபதி முர்முவின் 
இந்துத்துவம் மிகவும் பலவீனமானது. சின்ஹாவின் 
இந்துத்துவத்துக்கு உறை போடக் காணாது.

இவ்வளவு தீவிரமான இந்துத்துவ வேட்பாளர் 
யஷ்வந்த் சின்ஹாவைத் தவிர வேறு ஒரு
நல்ல வேட்பாளர் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும்
கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இக்கட்சிகள்
திவாலாகிப் போய் உள்ளன.

நாடு முழுவதும் அம்பலப்பட்டு சாயம் வெளுத்துப் 
போன, மதக்கலவரம் நடத்தத் திட்டமிட்ட
யஷ்வந்த் சின்ஹாவை எச்சில் காசுக்கு விலைபோன 
சில இழிந்த ஊடக மூடர்கள் ஆதரித்துக் கொண்டு 
பொய்களை விற்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
அவர்களின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன.
**************************************************