ஜனாதிபதி வேட்பாளர்களான
யஷ்வந்த் சின்ஹா, திரௌபதி முர்மு இருவரில்
இந்துத்துவத் தன்மை யாருக்கு அதிகம்?
------------------------------------------------------------------
யஷ்வந்த் சின்ஹா ஒரு தீவிரமான இந்துத்துவர்.
வாஜ்பாய் அமைச்சரவையில் நிதியமைச்சராக
இருந்தார்.
2014 நாடாளுமன்றத் தேர்தலில் இவருக்குப் பதிலாக
இவருடைய மகன் ஜெயந்த் சின்ஹாவுக்கு சீட்
கொடுத்தது பாஜக. ஜெயந்த் சின்ஹா தமது
தந்தையின் தொகுதியான ஹசாரிபாக் (ஜார்க்கண்ட்)
தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
நிதித்துறை இணையமைச்சர் பதவியை அவருக்கு
வழங்கினார் மோடி.
தான் எம்பியாகவும் இல்லை; அமைச்சராகவும் இல்லை
என்பதால் மிகவும் எரிச்சலுற்ற யஷ்வந்த் சின்ஹா
தமது இழந்த செல்வாக்கை மீட்க ஜார்க்கண்ட்
மாநிலத்தில் தமது ஹசாரிபாக் தொகுதியில்
ஒரு பெரிய மதக்கலவரத்தை ஏற்படுத்தத்
திட்டமிட்டார். நூற்றுக்கணக்கான இஸ்லாமியக்
குடும்பங்களை அடித்து விரட்டும் நோக்கத்துடன்
அவர் கலவரத்த்ற்குத் திட்டமிட்டார்.
2017ஆம் ஆண்டு ராமநவமித் திருநாளின்போது
ஒரு பெரும் இந்துத்துவ ஊர்வலத்தை பெரும்
வன்முறையுடன் நடத்தி மதக்கலவரத்துக்கு
வித்திட்டார். ஆனால் ஜார்க்கண்ட் முக்தி
மோர்ச்சாவும் ஹேமந்த் சோரனும் சின்ஹாவுக்கு
எதிராகச் செயல்பட்டு மதக்கலவரம் நிகழாமல்
தடுத்து விட்டனர். இவ்வாறு பாஜகவில் செல்வாக்குப்
பெறும் யஷ்வந்த் சின்ஹாவின் முயற்சி தோல்வியில்
முடிந்தது.
இதன் பிறகு, மிக அண்மையில்தான் சின்ஹா
மமதாவின் திரணமூல் கட்சியில் சேர்ந்தார்.
சின்ஹாவுடன் ஒப்பிடும்போது திரௌபதி முர்முவின்
இந்துத்துவம் மிகவும் பலவீனமானது. சின்ஹாவின்
இந்துத்துவத்துக்கு உறை போடக் காணாது.
இவ்வளவு தீவிரமான இந்துத்துவ வேட்பாளர்
யஷ்வந்த் சின்ஹாவைத் தவிர வேறு ஒரு
நல்ல வேட்பாளர் காங்கிரசுக்கும் எதிர்க்கட்சிகளுக்கும்
கிடைக்கவில்லை. அந்த அளவுக்கு இக்கட்சிகள்
திவாலாகிப் போய் உள்ளன.
நாடு முழுவதும் அம்பலப்பட்டு சாயம் வெளுத்துப்
போன, மதக்கலவரம் நடத்தத் திட்டமிட்ட
யஷ்வந்த் சின்ஹாவை எச்சில் காசுக்கு விலைபோன
சில இழிந்த ஊடக மூடர்கள் ஆதரித்துக் கொண்டு
பொய்களை விற்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.
அவர்களின் இறுதி நாட்கள் நெருங்குகின்றன.
**************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக