புதன், 8 ஜூன், 2022

 "நாகம்மையார் ஏன் தாலி கட்டி இருக்கின்றார்?" என்கிற தலைப்பில் குடியரசில் வந்த கட்டுரையிலிருந்து, "நாகம்மையார் ஏன் தாலி கட்டி இருக்கின்றார்" என கேட்கப்பட்ட கேள்விக்கு - இராமசாமி எழுந்து பதில் சொல்லும் முறையில் தாலி கட்டிக் கொண்டிருப்பது அடிமைத்தனத்திற்கு அறிகுறி என்று அனேக பெண்கள் இன்னமும் உணரவில்லை, தனது மனைவியார் கட்டிக் கொண்டிருந்தாலும் அவர்களது இஷ்டத்திற்கு விரோதமாய் பலவந்தம் செய்யத் தான் துணியவில்லை என்றும் சொன்னார்.

ஒருவர் மத்தியில் எழுந்து “உங்கள் குடும்ப மனைவியையே நீங்கள் அடக்கி ஆள முடியவில்லையானால் மற்றவர்களை எப்படி திருத்த முடியும்” என்றார். இதற்கு திரு.இராமசாமி சமாதானம் சொல்லுகையில் மனைவியை அடக்கி ஆளவில்லை என்று சொன்ன நண்பர் மனைவி என்றால் அடிமை என்கின்ற நமது பழைய கொள்கையை மனதில் வைத்துக்கொண்டு பேசுகின்றாரேயொழிய அவர்கள் இஷ்டப்படி நடக்க அவர்களுக்கு உரிமை உண்டு என்றும் சிறிதும் கவனியாமல் சொல்லுகிறார் என்றே கருதுகின்றேன்" - ஈவெராமசாமி - குடி அரசு - சொற்பொழிவு - 20.09.1931
ஈவெராமசாமியின் பதில் அறிவு நாணயத்துடன் வந்துள்ளதா என பார்ப்போம். அனேகமாக ஈவெராமசாமியின் பதில் - கழுவுற நீரில் நழுவுகிற மீனின் கணக்காக தானுள்ளது என சொல்லலாம். ஈவெராமசாமி கூறுவது போலவே - தன் கொள்கையை மனைவி மீது பலவந்தப்படுத்த முனையவில்லை எனவே வைத்து கொள்வோம். அதே நேரம் - பலவந்தப்படுத்தி தோற்றும் போயிருக்கலாம். ஈவெராமசாமி உண்மையை மாத்திரம் பேசுவார் என உத்தரவாதமுள்ளதா?
நாகம்மை தாலியை அவிழ்க்காத விஷயத்தில் மட்டுமல்ல - ஈவெராமசாமியின் நாத்திக விஷயத்தில் மற்றும் பெண்ணிய விஷயத்திலும் கூட உடன்பாடில்லாமல் தான் இருந்திருக்கிறார் என்பது தான் உண்மை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக