வியாழன், 30 ஜூன், 2022

உப்பைத் தின்னவன் தண்ணீர் குடிப்பான்!
----------------------------------------------------------------
மகாராஷ்டிரா முதல்வர் பதவியில் இருந்து உத்தவ் 
தாக்கரே ராஜினாமா செய்திருக்கிறார். இத்தோடு 
இழிந்த வாரிசு அரசியலுக்கு மகாராஷ்டிராவில் 
கொள்ளி வைக்கப் படுகிறது.

பாஜகவின் கூட்டணிக் கட்சியாகவே சிவசேனை 
நீண்ட காலமாக இருந்து வந்தது. இரண்டுக்கும் ஒரே 
கொள்கைதான்! இந்துத்துவம்தான்!

2019 தேர்தலில் பாஜகவும் சிவசேனையும் 
வழக்கம் போல கூட்டணி அமைத்துப் 
போட்டியிட்டன. காங்கிரசையும் சரத் பவாரின் 
NCP கட்சியையும் எதிர்த்துப் போட்டியிட்டன.

பாஜக-சிவசேனை கூட்டணி வெற்றி பெற்றது.
பாஜக 105 இடங்களையும் சிவசேனை 
56 இடங்களையும் பெற்றன. அதிக இடங்களை 
பெற்ற, சிவசேனையை  விட இரண்டு மடங்கு 
அதிக இடங்களைப் பெற்ற பாஜக முதல்வராக 
வேண்டும். ஆனால் அதற்கு உத்தவ் தாக்கரே 
சம்மதிக்கவில்லை.

அவர் தனக்கு முதல்வர் பதவி வேண்டுமென்று 
தகராறு செய்தார். இதை பாஜக ஏற்கவில்லை.
உடனே தனது பரம்பரை எதிரிக் கட்சித் தலைவரான 
சரத் பவாரிடம் சென்று சரண் அடைந்தார் 
உத்தவ் தாக்கரே.

மக்களின் தீர்ப்புக்கு விரோதமாக காங்கிரசுடனும்
சரத் பவரின் கட்சியுடனும் கூட்டணி அமைத்து 
தான் முதல்வர் ஆனார். தனது மகனையும் 
அமைச்சர் ஆக்கினார்.

மக்களின் தீர்ப்பு என்ன? சரத் பவரின் கட்சிக்கோ 
காங்கிரசுக்கோ மகாராஷ்டிரத்தை ஆளும் 
உரிமையை மக்களின் தீர்ப்பு வழங்கவில்லை.

ஆனால் 2019 தேர்தலில் எந்தக் கட்சிகளை 
எதிர்த்துப் பிரச்சாரம் செய்தாரோ, எந்தக் 
கட்சிகளை எதிர்த்து வெற்றி பெற்றாரோ 
அதே கட்சிகளுடன் சேர்ந்து மகாராஷ்டிராவில் 
ஆட்சி அமைத்தார். மிக இழிந்த சந்தர்ப்ப 
வாதத்திற்கும் மக்களின் தீர்ப்பை மதிக்காத 
அராஜகப் போக்கிற்கும் வரலாற்றின் உதாரணமாக
ஆனார் உத்தவ் தாக்கரே.

உத்தவ் தாக்கரே IQ குன்றியவர். அவரின் IQ வெறும் 
94 மட்டுமே. நிதித்துறையையும் உள்துறையையும் 
சரத் பவாரிடம் தாரை வார்த்து விட்டு, ஒரு 
அடிமுட்டாளாக ஆடசி நடத்தினார் உத்தவ் 
தாக்கரே. 

பெயருக்குத்தான் உத்தவ் முதல்வர். உண்மையான 
முதல்வராக இருந்தது சரத் பவார்தான். இந்த 
அவல நிலையை சிவசேனைத் தொண்டர்கள் 
முற்றிலுமாக ஏற்கவில்லை. இந்தியாவிலேயே 
கொள்கைப் பிடிப்புள்ள கட்சிகளில் ஒன்றாகக்
கருதப் படுவது சிவசேனை.

பரம எதிரிகளான காங்கிரசுடனும் சரத் பவாரின்
கட்சியுடனும் கூட்டணி வைத்து ஆட்சியில்
இருப்பதை சிவசேனைத் தொண்டர்கள் 
விரும்பவில்லை.

ஆக உத்தவ் தனது முட்டாள்தனமான செயல்களின் 
மூலம் ஆட்சியையும் இழந்தார்; கட்சியையும்
இழந்தார். வாரிசு அரசியலுக்கும் நிரந்தரமாகக் 
கொள்ளி வைக்கப்பட்டு விட்டது.

முறைகேடாக உத்தவ் முதல்வரான ஆறே மாதத்துக்குள் 
அவரின் ஆட்சியை பாஜக கவிழ்த்திருக்க வேண்டும். 
கவிழ்த்திருக்க முடியும். ஆனால் தேவேந்திர 
பட்நாவிசுக்கு மேலிடத்தில் இருந்து அனுமதி 
கிடைக்கவில்லை. தற்போது இரண்டரை ஆண்டு 
ஆகி விட்டபடியால், இனிமேலும் உத்தவ்வை 
முதல்வர் பதவியில் நீடிக்க விடுவது சரியல்ல என்ற 
முடிவுக்கு ஆர் எஸ் எஸ் வந்தது. தொடர்ந்து 
பட்நாவிசுக்கு க்ரீன் சிக்னல் தரப்பட்டது.

பட்நாவிஸ் IQ அதிகமான அரசியல் தலைவர்களில் 
ஒருவர். இவரின் IQ 118.6 ஆகும். கட்டி வா என்றால் 
வெட்டி வரக்கூடிய பட்நாவிஸ் மிகக் குறைந்த
கால அவகாசத்துக்குள்ளேயே உத்தவ் தாக்கரேயை 
MATE பண்ணி விட்டார். (mate = checkmate).
*********************************************** 
    
  
 
 
        
    
        

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக