செவ்வாய், 21 ஜூன், 2022

பாஜகவின் பழங்குடியின வேட்பாளருக்கு எதிராக 
உயர்சாதி வேட்பாளர் யஷ்வந்த் சின்ஹாவை 
நிறுத்திப் போட்டியிட்டால் எதிர்க்கட்சிகளுக்கு 
எதிர்காலம் இருக்காது!
----------------------------------------------------------------------
இந்திய வரலாற்றில் முதன் முறையாக ஒரு 
பழங்குடியினத்தைச் சேர்ந்தவர், அதுவும் ஒரு 
பெண் ஜனாதிபதியாகும் வாய்ப்பை பாஜக 
ஏற்படுத்தி உள்ளது.

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் மீதான 
பாஜகவின் கிடுக்கிப்பிடி இது.

எதிர்க்கட்சிகள் தரப்பிலோ ஒரு குறைந்தபட்ச 
அருகதை உள்ள வேட்பாளரை நிறுத்த 
இயலவில்லை. நேற்று வரை பாஜகவில் இருந்த 
யஷ்வந்த் சின்ஹாவைத்தான் வேட்பாளராக
அறிவிக்க வேண்டிய அவலநிலை எதிர்க்கட்சிகளுக்கு
ஏற்பட்டு உள்ளது. சரத் பவார், கோபாலகிருஷ்ண காந்தி,
பாரூக் அப்துல்லா ஆகியோர் போட்டியிட மறுத்து 
விட்டனர்.

கடந்த காலத்தில் ஆர் வெங்கட்ராமன், சங்கர் தயாள் 
சர்மா, பிரணாப் முகர்ஜி போன்ற அக்மார்க் 
பார்ப்பனர்களை ஜனாதிபதிகள் ஆக்கி பார்ப்பன 
ஆதிக்கத்தை ஸ்திரப் படுத்தியது காங்கிரஸ் கட்சி.

இந்தியாவில் பத்துக்கோடிப் பேருக்கும் மேல் பழங்குடி 
இனத்தவர் இருந்தபோதிலும், அவர்களில் ஒருவர் கூட 
இதுவரை ஜனாதிபதி ஆனதில்லை. பழங்குடி இனத்தைச் 
சேர்ந்த பி ஏ சங்மாவை பாஜக நிறுத்தியபோது 
பார்ப்பன பிரணாப் முகர்ஜியை நிறுத்தி சங்மாவைத் 
தோற்கடித்தது காங்கிரஸ் கட்சி.

தற்போது மீண்டும் ஒரு பழங்குடி இன வேட்பாளரை,
திரௌபதி முர்மு என்னும் பெண்மணியை ஜனாதிபதி 
வேட்பாளராக நிறுத்தி இருக்கிறது பாஜக.

இம்முறை பாஜகவின் பழங்குடியின  வேட்பாளர்
வெற்றி பெறுவது உறுதியிலும் உறுதி. இந்த நிலையில் 
எதிர்க்கட்சிகள் என்ன செய்ய வேண்டும்?

அரைகுறை வேட்பாளர் முன்னாள் பாஜக யஷ்வந்த்  
சின்ஹாவை எதிர்க்கட்சிகள் உடனடியாக வாபஸ் 
பெற வேண்டும். பாஜகவின் பழங்குடியினைப் 
பெண் வேட்பாளர் ஏகமனதாக வெற்றி பெற்று 
ஜனாதிபதியாவதற்கு எதிர்க்கட்சிகள் வகை 
செய்ய வேண்டும்.

இப்படிச் செய்வதன் மூலம், இந்திய ஜனதிபதியாக 
ஒரு பழங்குடியினத்தவரைக் கொண்டு வந்த 
பெருமையை முழுவதுவாக பாஜகவுக்கு விட்டுக்
கொடுக்காமல் தங்களின் பங்கையும் உறுதிப் 
படுத்தலாம்.

தங்களிடம் உள்ள கொஞ்ச நஞ்சம் தலித் வாக்கு 
வங்கியையும் பெரிய அளவு சேதாரம் இல்லாமல் 
தக்க வைத்துக் கொள்ளலாம். 

ஆனால் எதிர்க்கட்சிகள் இப்படி அறிவுபூர்வமாக 
முடிவு எடுக்குமா? எடுக்காது. வெறி பிடித்த 
மோடி எதிர்ப்பாளராக சுழன்று வரும் மமதா பானர்ஜி 
அறிவுக்கு எள்ளளவும்  இடம் தர மாட்டார். மேலும் 
அவர் அகிலேஷ் யாதவ் போன்று தலித் வாக்கு 
வங்கியைச் சார்ந்து இருப்பவரும் அல்ல. 

உண்மையில் மோடியும் அமித்ஷாவும் ஒருவிதப்
பதைபதைப்புடன்தான் இருந்து கொண்டு 
இருக்கிறார்கள். தங்களின் வேட்பாளரின் 
வெற்றியைப் பற்றிய பதைபதைப்பு அல்ல அது.
பாஜகவின் வேட்பாளரின் வெற்றி சூரியன் 
கிழக்கே உதிப்பதை போன்றது.

பின் எதற்காக மோடியும் அமித் ஷாவும் 
பதைபதைப்புடன் இருக்கிறார்கள்? எங்கே 
எதிர்க்கட்சிகளின் முகாமில் எவரேனும் 
அறிவுக்கு இடம் கொடுத்து, யஷ்வந்த் சின்ஹாவை 
வாபஸ் பெற்று விடுவார்களோ என்றுதான் 
மோடியும் அமித்ஷாவும் நிம்மதியின்றி 
இருக்கின்றனர்.

என்ன நடக்கும்? யஷ்வந்த் சின்ஹா போட்டியிடுவார்.
படுதோல்வி அடைவார். ஒரு பழங்குடியின 
வேட்பாளரை ஜனாதிபதி ஆக்குவதை எதிர்த்த 
ஜாதி வெறியர்கள் என்ற அழுத்தமான முத்திரை 
எதிர்க்கட்ச்சிகள் மீது விழும்.

திருப்பதி முர்முவை ஆதரிக்காவிட்டால் உபியில் 
மாயாவதியும் அகிலேஷ் யாதவ்வும் கட்சி நடத்த
முடியாது. தமிழ்நாட்டில் தோல் திருமாவளவன் 
கட்சி நடத்த முடியாது.

2019 நாடாளுமன்றத் தேர்தலில் திமுக வேட்பாளர்கள்
அனைவரும் 3 லட்சம் 4 லட்சம் என்ற பிரும்மாண்டமான 
வாக்கு வித்தியாசத்தில் ஜெயித்தபோது திருமாவளவன்  
வெறும் 500 ஒட்டு வித்தியாசத்தில் ஜெயிக்க எவ்வளவு 
மூச்சுத்தி திணறினார் என்பதை இங்கு நினைத்துப் 
பார்க்க வேண்டும்.

பழங்குடியினப் பெண் வேட்பாளரை வெறியுடன் 
எதிர்த்தும், உயர்சாதி வேட்பாளருக்கு வாக்களித்தும் 
முடித்து விட்டு, அதன் பின்னர் சேரிகளில் நடமாட 
முடியாத நிலை உருவாகும்.

சரி, நிலைமை எப்படி இருக்கும்? மோடியின் 
காட்டில்தான் மழை பெய்யும். எனவே எதிர்க்கட்சிகள்
தங்களின் தலித் விரோதப் போக்கை வெட்ட 
வெளிச்சமாக்கி விட்டு, தங்களின் தலித் வாக்கு 
வங்கியை பாஜகவிடம் ஒப்படைத்து விட்டு 
காசி யாத்திரை போகும்.
***************************************************  
.   

  



  
 
     
  
          

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக