புதன், 22 ஜூன், 2022

இந்திய நாடாளுமன்ற, சட்ட மன்றங்களில் அதிகமான 
SC.ST இடங்களை பாஜக கைப்பற்றியது எப்படி?
இந்தப் பின்னணியில் ஜனாதிபதியாக திரௌபதி முர்மு! 
------------------------------------------------------------------------- 
இந்திய நாடாளுமன்ற மக்களவையில் 
மொத்த இடங்கள்= 543 (2022 ஜூன் நிலவரம்).
இந்த 543ல் பொதுவான இடங்கள் = 412.
பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினருக்கு 
ஒதுக்கப்பட்ட இடங்கள் = 131.
(SC = 84 இடங்கள். ST = 47. மொத்தம் = 131).

2014 தேர்தலில் பாஜக 282 இடங்களைப் பெற்று
ஆட்சியைப் பிடிக்கிறது. மோடி பிரதமர் ஆகிறார்.
2019 தேர்தலில் பாஜக மீண்டும் வென்று ஆட்சியைப்
பிடிக்கிறது. மோடி மீண்டும் பிரதமர் ஆகிறார்.

2014 தேர்தலில் SC/STக்கான 131 இடங்களில் பாஜக 
67 இடங்களைப் பிடித்தது. 2019 தேர்தலில் மேலும் 
இடங்கள் அதிகரித்து, 131ல் 77 இடங்களில் பாஜக 
வெற்றி பெற்றது.

காங்கிரசானது மொத்தமுள்ள SC/ST இடங்கள் 131ல், 
பெற்ற இடங்கள் வருமாறு:-
2014 = 12
2019 = 9.

SC/STக்கான தொகுதிகளில் காங்கிரஸ் கைப்பற்றிய 
தொகுதிகளின் எண்ணிக்கை சரிந்து கொண்டே 
வந்து, 2019ல் ஒற்றை இலக்கமாகச் சுருங்கி விட்டது.

பாஜக பெற்ற SC/ST இடங்கள் 67, 77 என்று அதிகரித்துக் 
கொண்டே செல்வதும், காங்கிரஸ் பெற்ற இடங்கள் 
12, 9 என்று சரிந்து கொண்டே செல்வதும் ஒரு உண்மையை 
அழுத்தம் திருத்தமாகச் சுட்டிக் காட்டுகின்றன.

130 கோடி மக்கள் தொகையைக் கொண்ட இந்தியாவில்,
தலித் மக்கள் (SC/ST மக்கள்) 31 கோடி என்ற 
எண்ணிக்கையில் உள்ளனர். சற்றுத் தோராயமாக,
SC மக்கள் 21 கோடியும், ST மக்கள் 10 கோடியும்
உள்ளனர். இந்த 31 கோடி மக்களிடம் பாஜகவின் 
செல்வாக்கு தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே 
வருகிறது என்ற உண்மைதான் அது. இந்த 31 கோடி 
தலித் மக்களின் நம்பிக்கையை பாஜக  தொடர்ந்து 
பெற்று வருகிறது என்பதை எவராலும் மறுக்க இயலாது.

நாடாளுமன்ற இடங்களில் மட்டுமல்ல, பல்வேறு 
மாநிலங்களிலும் SC/ST மக்களுக்கான சட்டப்பேரவை 
இடங்களிலும் பாஜக அதிகமான இடங்களைக் 
கைப்பற்றிக் கொண்டே வருகிறது. விதிவிலக்காக 
உள்ள ஒன்றிரண்டு மாநிலங்களைத் தவிர, 
பெருவாரியான மாநிலங்களின் சட்டப் பேரவைகளில் 
உள்ள SC/ST இடங்களில் அதிகமான இடங்களைக் 
கைப்பற்றி இருப்பது பாஜகவே ஆகும்.

அண்மையில் (மார்ச் 2022) தேர்தல் நடைபெற்று முடிந்த 
இந்தியாவின் மிகப்பெரிய மாநிலமான உபி பற்றிப் 
பார்ப்போம். 
உபியில் மொத்த இடங்கள் (பேரவை) = 403.
SC/STக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் = 86.
(இந்த 86ல் SC = 84. ST = 2).

மாயாவதியின் பகுஜன் கட்சி மொத்தமுள்ள 
403 இடங்களில் எத்தனை இடங்களில் வென்றது 
என்று பார்ப்போமா? ஒரே ஒரு இடத்தில் மட்டும்தான் 
பகுஜன் கட்சி வெற்றி பெற்றுள்ளது. மொத்தம் =403.
அதில் மாயாவதி கட்சி வென்ற இடம் = 1.

அடுத்து காங்கிரஸ் கட்சி எத்தனை இடத்தில் வெற்றி 
பெற்றது என்று பார்ப்போமா? இரண்டே இரண்டு 
இடங்களில் மட்டுமே காங்கிரஸ் வென்றுள்ளது.
மொத்த இடம் = 403; இதில் காங்கிரஸ் =2.

எனவே 86 தலித் தொகுதிகளில் இவ்விரு கட்சிகளும் 
எத்தனை இடங்களைப் பெற்றன என்று பார்க்க 
வேண்டிய தேவையே இல்லை. இவ்விரு கட்சிகளும்
துடைத்தெறியப் பட்டு விட்டன.

தற்போதைய 2022 தேர்தலிலும் அதற்கு முந்திய 
2017 தேர்தலிலும் உபியில் உள்ள 86 தலித் 
தொகுதிகளில் மிகப்பெரும் அளவிலான 
தொகுதிகளைக் கைப்பற்றியது பாஜகவே.
வாசகர்கள் தங்களின் சொந்த முயற்சியில் உரிய 
புள்ளி விவரங்களைத் தேடி எடுத்துப் படிக்குமாறு 
வேண்டுகிறேன். ஆங்கிலம் நன்கு தெரிந்திருந்தால் 
தேவையான தரவுகளை எளிதில் பெறலாம்.

சரி, நாடாளுமன்ற இடங்களிலும் சரி, மாநிலங்களின் 
சட்டப் பேரவை இடங்களிலும் சரி, பாஜக பெற்றுள்ள 
அதீதமான அபரிமிதமான செல்வாக்கிற்குக்  
காரணம் என்ன? உபி மக்கள் தலித்துகளுக்கென்றே 
கட்சி நடத்துவதாகக் கூறும் மாயாவதியின் கட்சியை
முற்றிலுமாகத் துடைந்தெறிந்து விட்டு, பாஜக மீது 
நம்பிக்கை கொள்ளக் காரணம் என்ன?

இதற்கு நான் விடை சொல்ல விரும்பவில்லை.
மூளை உள்ளவர்கள் சிந்தித்து விடை காணலாம்.

பாஜக பாப்பாரக் கட்சி என்பதெல்லாம் ONCE UPON 
A TIME, LONG LONG AGO சொல்லப்பட்ட விஷயங்கள். 
இன்று அது உண்மை அல்ல. பாஜகவானது இன்று 
தலித்துகளின் கட்சி! அது பிற்பட்டோரின் கட்சி! 
வட இந்தியா முழுவதும் உள்ள நூறு கோடி அளவிலான 
மக்கள் பாஜகவானது SC/ST/OBCகளின் கட்சி
என்ற உண்மையைத் தெரிந்து வைத்திருக்கிறார்கள். 

தென்னிந்தியாவிலும் படிப்படியாக பாஜகவின் 
Dalit empowerment, inclusiveness ஆகிய credentials 
மக்களால் உணரப்பட்டு வருகின்றன.   

பாஜக கீழ்சாதியினரின் கட்சி என்ற 
குற்றச்சாட்டைத்தான் பாஜக எதிர்ப்பாளர்கள் 
கூறி வருகின்றனர். தாழ்ந்த சாதி அரசியல் 
செய்கிறார் மோடி என்று புகார் கூறினார் 
சரத் பவார். உபியில் பிராமணர்களை சுட்டுக் 
கொல்கிறார் தாழ்ந்த சாதிக்காரரான யோகி 
ஆதித்தியநாத்  என்று புலம்பினார் பிரபல 
பின்நவீனத்துவக் கணிகை அருந்ததி ராய்.

Dalit empowerment, Inclusive political representation ஆகியவையே 
தற்போது பாஜகவின் credentials. இதை இந்தியா 
முழுவதும் உள்ள மக்கள், தமிழ்நாடு கேரளா தவிர்த்து
உணர்ந்து வருகின்றனர். எனவே மீண்டும் மீண்டும் 
அதிகரித்த இடங்களுடன் பாஜக ஆட்சியைப் பிடித்து
வருகிறது.     

இறுதியாக ஒன்று. திரௌபதி முர்மு கார்ப்பொரேட் 
ஆதரவாளர் என்றும் பழங்குடி இன மக்களுக்கு 
எதிரானவர் என்றும் சில குட்டி முதலாளித்துவத் 
தற்குறிகள் உளறி வருகின்றனர். இதே குற்றச்சாட்டை 
நவீன் பட்நாயக் மீதும் வைக்க முடியும். மு க ஸ்டாலின் 
மீதும் வைக்க முடியும். ப சிதம்பரம் மீதும் வைக்க 
முடியும்.

இந்தியாவில் நடப்பது பாட்டாளி வர்க்க அரசாடா 
கணிகைக்குப் பிறந்த பயல்களே! மோடி என்ன 
லெனினாடா குட்டி முதலாளித்துவக் கபோதிகளே!  

ஒரு முதலாளித்துவ சமூக அமைப்பு நிலவும்போது,
முதலாளித்துவ அரசு ஆட்சியில் இருக்கும்போது,
முதலாளித்துவ அரசியல்வாதிகள்தான் அதில் 
பங்கு பெற முடியும். இந்த உண்மை மண்டையில் 
ஏறாதபோது, இந்தியாவில் ஏதோ போல்ஷ்விக் அரசு 
நடக்கிறது என்று நினைத்துக் கொண்டு போதையில் 
உளறும் தற்குறிகளைத் திருத்த முடியாது.

யஷ்வந்த் சின்ஹாவா திரௌபதி முர்முவா என்றுதான் 
பார்க்க முடியும். திரௌபதி முர்மு கார்ப்பொரேட் 
ஆதரவாளர் என்றால், யஷ்வந்த் சின்ஹா என்ன 
போல்ஷ்விக் புரட்சியாளராடா குட்டி முதலாளித்துவத் 
தற்குறியே?

இதெல்லாம் வேண்டாம் என்றால், போய் ஆயுதம் 
தாங்கிய புரட்சியை நடத்து. உன்னை யார் வேண்டாம் 
என்கிறார்கள்? முதலாளித்துவ அரசியலில் 
அனைத்து அரசியல் கட்சிகளுமே கார்ப்பொரேட் 
ஆதரவுக் கட்சிகள்தான். அப்படித்தான் இருக்க 
முடியும்.  

கார்ப்பொரேட் எதிர்ப்பு மாவோயிஸ்டுகளை 
போலி என்கவுண்டரில் நாயைச் சுடுவது போலச் 
சுட்டுக் கொல்கிறானே பினராயி விஜயன்? அவன்
கார்ப்போரேட் கைக்கூலி இல்லையா? அவன் 
மயிரைக்கூட உன்னால் புடுங்க முடியாதே 
தேவடி. பயலே!   

யதார்த்த உலகுக்கு வாங்கடா கணிகைக்குப்
பிறந்த பயல்களா!
*******************************************






 

 






 
 


                
  
 
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக