வெள்ளி, 3 ஜூன், 2022

அமெரிக்காவில் தொடரும் துப்பாக்கிச் சூடுகள்!
பின்நவீனத்துவமே பிரதான காரணம்! 
------------------------------------------------------------------------ 
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-----------------------------------------------------------------------
அமெரிக்காவில் தொடர்ந்து பல்வேறு இடங்களில் 
மனநோய் பிடித்த அமெரிக்கர்களின் துப்பாக்கிச் சூடுகள்
அண்மையில் நடந்துள்ளன. இவற்றில் பள்ளிக் 
குழந்தைகள் உட்படப் பலர்.இறந்துள்ளனர். வாசகர்கள் 
உரிய ஆங்கிலச் செய்தித்தாள்களைப் படிக்குமாறு 
வேண்டுகிறேன்.   

அமெரிக்காவின் குடிமக்கள் எவருடைய உயிருக்கும் 
ஒரு மயிரும் உத்தரவாதம் இல்லை. எந்த நேரமும் 
யார் எவரும் தங்களின் உயிரை எவனோ ஒரு 
மனநோயாளியின் துப்பாக்கிக்கு இரையாகத் தர
வேண்டி இருக்கும்.

மக்கள் உயிர் வாழத் தகுதியற்ற நாடு அமெரிக்கா.
அமெரிக்காவின் இந்தச் சீரழிவுக்கு என்ன காரணம்?

அமெரிக்கா  ஒரு ஏகாதிபத்திய நாடு. எனவே 
அந்நாட்டின் பண்பாடு ஏகாதிபத்தியப் பண்பாடு.
ஏகாதிபத்தியப் பண்பாடு என்றால் என்ன என்ற
கேள்விக்கு COPY BOOK STYLE தன்மையிலான  
விடை  அமெரிக்கப் பண்பாடே.

புருஷன் பொண்டாட்டிக்கு ஒரு முத்தம் கொடுப்பது 
கூட ரொக்க மதிப்பு உடையதாக அல்லது 
பரிவர்த்தனை மதிப்பு உடையதாகப் பார்க்கப் 
படுகிற பண்பாடு அமெரிக்கப் பண்பாடு ஆகும்.

அமெரிக்கப் பண்பாடு ஏகாதிபத்தியப் பண்பாடு
என்று வரையறுக்கிற அதே நேரத்தில், அமெரிக்கப் 
பண்பாடு பின்நவீனத்துவப் பண்பாடும் ஆகும் 
என்பதையும் நாம் மனத்தில் இருத்த வேண்டும்.

பின்நவீனத்துவம் கழிபெருங்காமத்தைப் போற்றுகிறது.
உடலுறவில் உள்ள சமூகத் தடைகளை விலக்கக் 
கோருகிறது. இத்தடைகளை சமூகம் விலக்க
மறுத்தாலும், பின்நவீனத்துவர்கள் தாங்களாகவே 
விலக்கிக் கொள்கிறார்கள்.

(உடலுறவில் உள்ள சமூகத் தடைகள் என்ன? சமூகம் 
விதித்த தடைகள் ஆகும் அவை. அதாவது அண்ணனும் 
தங்கையும் உடலுறவு கொள்ளக் கூடாது. தகப்பனும் 
மகளும் உடலுறவு கொள்ளக் கூடாது. சிறு 
குழந்தைகளோடு உடலுறவு கொள்ளக் கூடாது. 
இவை  போன்ற பல்வேறு தடைகள் உலகளாவிய
தடைகளாக உள்ளன. உலகின் எல்லாச் சமூகங்களும் 
இத்தடைகளை விதித்துள்ளன).      
     
யாரும் யாருடனும் படுக்கலாம். இதுதான் 
அமெரிக்காவின் உடலுறவுக் கொள்கை. இது 
அப்பட்டமான பின்நவீனத்துவக் கொள்கை.

திருமணம் என்பது தேவையற்றது. திருமணம் செய்து 
கொள்ள வேண்டாம். பிடித்த்வர்களுடன் சேர்ந்து 
வாழலாம். உடலுறவு கொள்ளலாம். பிடிக்காவிட்டால் 
விலகி விடலாம். இதுதான் அமெரிக்காவின் 
பெண்ணியம் உபதேசிக்கும் வாழ்க்கை முறை.

எனவே அமெரிக்க சமூகத்தில் குடும்பம் என்பது 
தேவையற்றுப் போய்விட்டது. கணவன் 
மனைவி என்ற சொற்கள் அர்த்தமற்றுப் போய்விட்டன 
அதற்குப் பதிலாக பாலுறவுப் பங்காளி என்ற சொல் 
(SEX PARTNER) ஆட்சிக்கு வந்து விட்டது. 

இந்தப் பண்பாட்டையே அமெரிக்க மக்கள் 
கடைப்பிடித்து ஒழுகுகிறார்கள். இதன் விளைவு 
குடும்பம் என்பது ஒன்று: உருவாகும் முன்பே 
இல்லாமல் போய் விடுகிறது. இரண்டு: உருவாகி 
உள்ள குடும்பம் சிதைந்து போய் விடுகிறது.

 இதன் நிகர விளைவு என்ன? அனாதைக் குழந்தைகள்
அதிகமாகி விடுகிறார்கள். தகப்பன் இல்லாத 
குழந்தைகள் அமெரிக்க சமூகத்தில் அதிகம். 
SINGLE PARENT என்ற சொல் அமெரிக்காவில் 
உயிர்ப்புடன் திகழும் சொல். 

இவ்வாறு SINGLE PARENTSஇடம் வளரும் குழந்தைகள்
தாயை மதிப்பதில்லை. ஏனெனில் தாய் இன்னொரு 
ஆணுடன் வாழுவாள் அல்லது பாலுறவு ஏற்பாட்டில் 
இருப்பாள். இந்தச் சூழலில் வளரும் குழந்தை 
எப்படி தாயை மதிக்கும்? சமூக விழுமியங்களை 
எப்படி அக்குழந்தை மதிக்கும்?

எனவே பதினெட்டு வயதாய் அடையும்போது அல்லது 
சொந்தமாக நிற்க முடியும்போது இக்குழந்தைகள் 
சமூகத்தைப் பழிவாங்க வேண்டும் என்ற 
எண்ணத்தால் உந்தப்பட்டு துப்பாக்கியைக் கையில்
எடுக்கின்றன.

அமெரிக்காவில் யார் வேண்டுமானாலும் துப்பாக்கி 
வைத்துக் கொள்ளலாம். அமெரிக்கக் குடிமக்களுக்கு 
இந்த உரிமை உண்டு. இன்றைய சூழலில் 
இந்த உரிமை தேவையில்லை. இந்த உரிமையை 
நீட்டிக்க வேண்டியதில்லை. 

ஆனால் அமெரிக்காவில் துப்பாக்கி உரிமையை 
எந்த ஜனாதிபதியால் ரத்து செய்து விட முடியாது. 
துப்பாக்கி உற்பத்தி விற்பனையில் உள்ள பெரும் 
ஏகாதிபத்திய நிறுவனங்கள் துப்பாக்கி வைத்துக் 
கொள்ளும் உரிமையை ரத்து செய்ய அனுமதிக்க 
மாட்டார்கள்.

அடுத்து துப்பாக்கி உரிமை ரத்தானாலும் கூட,
ஏதேனும் நாட்டு வெடிகுண்டை அல்லது ஏதேனும் 
ஒரு IEDயை வைத்து சுட்டுத் தள்ள அமெரிக்க 
மனநோயாளிகளால் முடியும்.

அமெரிக்காவின் இந்த ஏகாதிபத்தியப் பண்பாடும்  
பின்நவீனத்துவப் பண்பாடும் இந்தியாவுக்குள்ளும்  
நுழைந்து விட்டன. ஆதிக்கம் செலுத்த முயற்சி 
செய்கின்றன. இந்திய மக்கள் விழிப்போடு 
இருந்து பின்நவீனத்துவ இழிந்த பண்பாட்டை 
முறியடிக்க வேண்டும்.

இந்தியாவின் இழிந்த பின்நவீனத்துவவாதி அருந்ததி 
ராய் பற்றி நம்மில் பலரும் அறிந்திருக்கலாம்.
இவர் திருமணத்தை வெறுப்பவர். இவர் திருமணம் 
செய்து கொள்ளாமல் செக்ஸ் பார்ட்னர்களுடன் 
உடலுறவு கொள்ளக் கூடியவர். தமது பாலியல் 
வாழ்க்கையில் இதுவரை பல செக்ஸ் 
பார்ட்னர்களுடன் உறவு கொண்டு பின் பிரிந்தவர்.

இவர் எழுதிய GOD OF SMALL THINGS என்ற நூலை 
அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் தடை 
செய்துள்ளனர். தமது நூலில் அண்ணன் தங்கை 
உடலுறவை மிகவும் வர்ணித்து எழுதி இருப்பார் 
அருந்ததி ராய். இவ்வளவு இழிந்த நூலைப் 
படித்தால் பிள்ளைகள் கெட்டுப் போகும் என்று 
பெற்றோர்கள் புகார் கூறியதன்பேரில் அம்மாகாண 
ஆளுநர் அருந்ததி ராயின் காமவெறி நூலைத் 
தடை செய்துள்ளார்.

அருந்ததி ராய் குறித்தும் பின்நவீனத்துவம் குறித்தும் 
எச்சரித்து இதுவரை பல கட்டுரைகளை எழுதி 
உள்ளேன். வேறு யார் எவரும் சொல்லாத 
விஷயங்களை நான் மட்டுமே சொல்லி உள்ளேன்.
என்றாலும் தமிழ் மக்கள் போதியளவு எனது 
கட்டுரைகளை ஆதரிக்கவில்லை.

பின்நவீனத்துவத்தையும் அருந்ததி ராயையும் 
கண்டிக்கும் என்னுடைய கட்டுரைகளைப் 
படிக்காதவர்களும், அவற்றை ஆதரிக்காதவர்களும்
மிக மோசமாக நஷ்டம் அடைவார்கள். உங்கள் 
குழந்தைகளை, குடும்பத்தைப் பாதுகாக்க,
சமூகத்தைப் பாதுகாக்க என்னுடைய 
பின்நவீனத்துவ எதிர்ப்புக் கட்டுரைகளைப்
படியுங்கள். பரப்புங்கள். 
*********************************************    
பின்குறிப்பு::
அருந்ததி ராயின் அறிவிக்கப்பட்ட 
முதல் பாலுறவுப் பங்காளி யார்?
அவரை விரட்டி விட்டு அருந்ததி ராய் 
கொண்டு வந்த இரண்டாவது பாலுறவுப்
பங்காளி யார்? வாசகர்களே, விடை தருக.
----------------------------------------------------------------------------

தனிப்பட்ட கருத்து அல்ல. இது 
ஒரு objective assessmentன் நிகர விளைவு. 
From facts one has to process and achieve 
the truth. இதுதான் மார்க்சிய அணுகுமுறை.
என் கட்டுரையில் எதை யாரால் 
மறுக்க முடியும்?

1) அமெரிக்கா ஒரு  ஏகாதிபத்தியம் 
என்பதை மறுக்க முடியுமா? அங்கு 
பின்நவீனத்துவம் செல்வாக்குப் 
பெற்றுள்ளது என்பதை மறுக்க 
முடியுமா? 

2) அருந்ததி ராய் திருமணம் செய்து 
கொள்ளாமலே பலருடன் உடலுறவு 
கொண்டு வாழ்ந்து வருகிறவர் 
என்பதை மறுக்க முடியுமா?

3) அவரின் நூலில் அண்ணன் தங்கை 
உடலுறவு கொள்வதைப் பற்றி 
எழுதப்படவில்லை என்று
யாரவது மறுக்க முடியுமா?

4 அமெரிக்காவில் ஒரு மாகாணத்தில் 
அவரின் நூல் தடை செய்யப்பட்டுள்ளது  
என்ற உண்மையை 
மறுக்க முடியுமா?   

எனவே மெய் விவரங்களில் இருந்து 
பகுத்தும் தொகுத்தும் புறவயமாக 
ஆராய்ந்தும் இக்கட்டுரை எழுதப் 
பட்டுள்ளது. இக்கட்டுரை முழுவதுமே 
objective assessment ஆகும்.  No subjectivity at all.
   -----------------------------------------------------------------

 
 
  

 
 
 
   
  

         .    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக