வியாழன், 9 ஜூன், 2022

நயன்தாரா திருமணத்தை வாழ்த்துவோம்!
----------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
குட்டி முதலாளித்துவ வழிசல் காரணமாக நயன்தாராவின் 
திருமணத்தை நான் வாழ்த்தவில்லை. மாறாக மிகவும் 
உணர்வுபூர்வமாகவும் தகுந்த காரணத்துடனும்  
நயன்தாராவின் திருமணத்தை வாழ்த்துகிறேன்.

ஒரு கூத்தாடிச்சியாக இருந்தபோதிலும், பாலியல் 
வில்லங்கங்கள் பல இருந்தபோதிலும், இறுதியில் 
முறையான திருமண வாழ்க்கையே சரியானது
என்ற முடிவுக்கு வந்து திருமணம் புரிந்த 
நயன்தாராவை வாழ்த்துவோம்.  

இன்று நிறைவாக நடந்தேறிய நயன்தாராவின் 
திருமணம் கண்டு பொங்கிப் பொருமி உடம்பெல்லாம் 
வெந்து போய்க் கிடக்கிறார் பிரபல பின்நவீனத்துவக் 
கணிகை சூசன்னா அருந்ததி ராய்.

அ)  திருமணமே கூடாது 
ஆ) கணவன் மனைவி என்ற உறவே கூடாது
இ) பாலியல் பங்காளி (sex partner) என்ற இழிந்த உறவு
இந்தியா முழுவதையும் ஆக்கிரமிக்க வேண்டும் 
என்றெல்லாம் நாளும் பொழுதும் தீயாய் வேலை 
பார்த்து வந்த பின்நவீனத்துவக் கணிகை 
சூசன்னா அருந்ததி ராய் நயன்தாராவின் 
திருமணக் காட்சிகளைப் பார்த்ததுமே மூர்ச்சித்து
விழுந்து விட்டார்.

எனக்கு மீண்டும் மீண்டும் அந்தக் குறுந்தொகைப்
பாடல் நினைவுக்கு வருகிறது. 1969ல் 11ஆம் 
வகுப்பு படிக்கும்போது மகா வித்துவான் 
சு தி சங்கர நாராயணன் கற்றுத் தந்த அந்தப் பாடல்!

இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீயாகியர் என் கணவனை 
யானாகியர் நின் நெஞ்சு நேர்பவளே    

அன்று போல இந்தப் பாடல் எழுபதை நெருங்கும் 
இந்த வயதிலும் அதே உணர்ச்சியை நல்குவது 
எங்ஙனம்? இது தமிழின் மாண்பா? அல்லது என்னுடைய 
மாண்பா? அல்லது கற்பித்த ஆசிரியரின் மாண்பா?
அல்லது பிறந்த ஊர், சாதி, சுற்றம், பெற்றோரின் 
மாண்பா? 

இம்மை மாறி மறுமை ஆயினும் 
நீயாகியர் என் கணவர் என்று அந்தப் பெண் 
கூறுகிறாள் எனில், அந்தக் கணவன் எவ்வளவு 
கொடுத்து வைத்தவன்? யானாகியர் நின் நெஞ்சு 
நேர்பவளே என்று சொல்கிறாளே, எவ்வளவு 
தன்னம்பிக்கை!

திருக்குறளில் இருந்து ஒரு காட்சி!
கணவனும் மனைவியும் அருகருகே அமர்ந்து 
பேசிக் கொண்டு இருக்கிறார்கள்.

"இந்தப் பிறவியில் உன்னைப் பிரிய 
மாட்டேன் அன்பே"   
என்கிறான் கணவன். அவ்வளவுதான்! அந்தப் பெண் 
அழ ஆரம்பித்து விடுகிறாள்! ஏன்? 
அப்படியானால் அடுத்த பிறவியில் பிரிந்து 
விடுவீர்கள் என்றுதானே பொருள் என்று 
கூறிக்கொண்டே அழுகிறாள் அவள்!

புலவி நுணுக்கத்தில் வள்ளுவரை மிஞ்சிய ஒரு புலவர் 
இப்பிரபஞ்சம் எங்கும் இல்லை! 
(புலவி என்றால் என்ன பொருள் என்று தெரியுமா?
இல்லை, அதற்கும் நான் அர்த்தம் எழுதித் 
தாலியறுக்க வேண்டுமா?)

செவ்வியல் இலக்கியங்களில் இருந்தே நான்  
எப்போதும் மேற்கோள் கூறி விளக்கம் அளிப்பதால் 
நன்கு கற்றறிந்த உயர்ந்த சாதியைச் சேர்ந்தவர்கள் 
மட்டும்தானே புரிந்து கொள்ள முடிகிறது என்று சில 
அன்பர்கள் அடிக்கடி குறைப்பட்டுக் கொண்டனர்.
எனவே சினிமாவில் இருந்து மேற்கோளும் 
விளக்கமும் அளிப்பதன் மூலம் எல்லோரும் 
புரிந்து கொள்ள வாய்ப்பளிக்கிறேன்.  

1970களின் தொடக்கம்! அப்போது வானொலி 
மட்டும்தான். டிவி கிடையாது. சிவாஜி கணேசன் 
நடித்த பிராப்தம் என்ற படம் வெளிவந்திருந்த நேரம்.
அற்புதமான பாடல்களைக் கொண்ட, காலத்தை 
வென்ற பாடல்களைக் கொண்ட படம் அது.

அப்படத்தில் வரும் ஒரு வசனத்தை, (மிகத் தெறிப்பான
வசனம் அது) விளம்பர வாசகமாக வானொலியில் 
அடிக்கடி ஒளிபரப்பினார்கள்!

"எத்தனை பிறவி எடுத்தாலும் 
நீ என் சொந்த ராதாதான்" 
என்பார் சிவாஜி கணேசன். அந்த வசனம் ,அன்று,
அந்த 1970களில் எங்களின் நெஞ்சை வருடிக்கொண்டே 
இருக்கும்! சிவாஜி கணேசன் தன்னுடைய ராதாவுக்குச் 
சொன்ன அந்த வசனத்தை நாங்களெல்லாம் 
எங்களின் ராதாக்களுக்குப் பொருத்திக் கொண்டோம்.     
     
மூன்று உதாரணங்களைச் சொன்னேன் இரண்டு 
இலக்கிய உதாரணங்கள்; ஒரு ஜனரஞ்சக உதாரணம்.
இம்மூன்றும் பிறவிகள் கடந்தும் நிலைத்து நிற்கும் 
காதலைப் பற்றிப் பேசுகிறது. இதுதான் தமிழ்ப் 
பண்பாடு. இதுதான் பரந்த இந்தியப் பண்பாடும் ஆகும்.

கால்டுவெல் விசுவாசியும் சரி, பின்நவீனத்துவ 
இழிஞனும் சரி இக்கட்டுரையை ஏற்க மாட்டான்.
அவனுடைய முதுகுத்தொலியை  உரிப்போம்.
********************************************

பின்குறிப்பு::
திருக்குறளின் புலவி, புலவி நுணுக்கம், ஊடலுவகை 
ஆகிய அதிகாரங்களைப் படிக்காத மூதேவிகள் 
நாண்டுக்கிட்டு நில்லுங்கல என்கிறார் 
வீரவநல்லூர் இசக்கிமுத்து அண்ணாச்சி    


 


.   
    

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக