புதன், 22 ஜூன், 2022

வாரிசு அரசியலை ஆதரிக்கும் கபோதிகளால் 
பழங்குடியினத்தவர் இந்திய ஜனாதிபதி ஆவதைப் 
பொறுத்துக் கொள்ள முடியாது!
------------------------------------------------------------------- 
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி (CPM) இந்தியாவின் 
மிகப்பெரிய கம்யூனிஸ்ட் கட்சி ஆகும். இக்கட்சி
தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட நூறு ஆண்டு ஆகப்
போகிறது.

இக்கட்சியில் மத்தியக் கமிட்டி உறுப்பினர் பதவிதான் 
மிக உயர்ந்த பதவி ஆகும். இந்த 100 ஆண்டு கால 
வரலாற்றில், 2021 வரை ஒரு தலித் கூட மத்தியக் 
கமிட்டி உறுப்பினராக இருந்ததில்லை.

2022 ஏப்ரலில்தான் முதன் முறையாக ராம் சந்திர 
டோம் என்னும் தலித் மத்தியக் கமிட்டி உறுப்பினர் 
ஆகி உள்ளார். மத்தியக் கமிட்டி உறுப்பினர் 
பதவி என்பது கட்சிப் பதவிதான் தவிர அரசுப் 
பதவி அல்ல. இருந்தும் இந்தப் பதவியைப் பெற 
ஒரு தலித் நூறு ஆண்டு காலம் காத்திருக்க 
வேண்டி வந்தது.

தமிழ்நாட்டில் திமுகவை எடுத்துக் கொள்ளுங்கள்.
இக்கட்சியில் தலைவர், பொதுச் செயலாளர், 
பொருளாளர் என்னும் மூன்று பதவிகளும் 
முக்கியமானவை. இக்கட்சி தொடங்கி 70 ஆண்டு
காலத்துக்கும் மேல் ஆகிறது. என்றாலும் இன்று வரை 
மேற்கூறிய தலைவர், பொதுச்செயலாளர் 
பொருளாளர் பதவிகளில் இதுவரை ஒரே ஒரு தலித் 
கூட இடம் பெற்றதில்லை.

ஒரு தலித் இந்திய ஜனாதிபதி ஆகலாம். ஆனால் 
திமுகவின் பொருளாளர் ஆக முடியாது.

 தலித்துக்கு அதிகாரம் அளிப்பது என்பது இந்தியச் 
சூழலில் மலையைப் புரட்டுகிற வேலை. தலித்துக்கு 
அதிகாரம் தர வேண்டும் என்று வாய் கிழியப் 
பேசும் எவரும் உதட்டுப் பரிவைத் (LIP SYMPATHY)
தாண்டுவதில்லை.

Dalit empowerment என்பாதை நடைமுறைக்கு எவரேனும் 
கொண்டு வரும்போது, சமூகத்தில் உள்ள சகல 
பிற்போக்குச் சக்திகளும் ஒன்று திரண்டு, தலித்துக்கு 
அதிகாரம் அளிப்பதை எதிர்ப்பார்கள். தலித் ஒருவர் 
ஜனாதிபதி ஆகிவிட்டால், தலித்துகளின் பிரச்சினை 
எல்லாம் தீர்ந்து விடுமா என்று ஆவேசமாகக் கேள்வி 
கேட்பார்கள் நமது போலி முற்போக்கு மாமாப் 
பயல்கள்.

இந்திய ஜனாதிபதி பதவியில் அநேகமாக எல்லாப் 
பிரிவினரும் (இஸ்லாமியர், தலித், பெண், பிற்பட்டோர்,
முற்பட்டோர், பார்ப்பனர், தென்னிந்தியர், தமிழர் 
முதலியோர்) அமர்ந்து விட்டனர், ஒரே ஒரு பிரிவினரைத் 
தவிர. பழங்குடியினப் பிரிவினர் எவரும் இதுவரை 
இந்திய ஜனாதிபதியாக இருந்ததில்லை.

தற்போது பாஜக கட்சியானது திரௌபதி முர்மு 
என்னும் பழங்குடியினப் பெண்மணியை
ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தி உள்ளது. இது 
சர்வ நிச்சயமாக வரவேற்கத்தக்க நடவடிக்கை.

இழிந்த தற்குறிகளும் போலி முற்போக்கு மாமாப் 
பயல்களும் மட்டுமே ஒரு பழங்குடியின வேட்பாளர் 
ஜனாதிபதி ஆவதை எதிர்க்க முடியும்.

கணிகைக்குப் பிறந்த இந்தப் பயல்களுக்கு 
inclusiveness என்றால் என்ன என்றே தெரியாது.
Dalit empowerment என்றால் என்ன என்றே தெரியாது.

இவர்களுக்குத் தெரிந்ததெல்லாமே வாரிசு 
அரசியல்தான். கருணாநிதி, ஸ்டாலின், உதயநிதி,
இன்பநிதி என்று தொடரும் இழிந்த வாரிசு 
அரசியலை ஆதரிக்கும் ஈனக் கயவர்களால் 
திரௌபதி முர்மு என்னும் பழங்குடியினப் பெண்மணி 
ஜனாதிபதி ஆவதை பொறுத்துக் கொள்ள முடியாது.
ஆனால் பத்துக்கோடிக்கும் மேல் உள்ள இந்தியாவின் 
பழங்குடி மக்கள் மேற்கூறிய வாரிசு அரசியலை 
ஆதரிக்கும் கயவர்களின் மூஞ்சிகளில் காரித்
துப்புகிறார்கள்.
************************************************     
        
  
          
      

1 கருத்து: