புதன், 29 ஜூன், 2022

சோதிடத்தை எதிர்க்காத போலி மாவோயிஸ்டு 
கட்சிகள் மற்றும் போலி நக்சல்பாரி கட்சிகள்!
-----------------------------------------------------------------
 பி  இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------------------
பாஜக திமுக கூட்டணி ஆட்சியின்போது (1999-2004) 
வாஜ்பாய் பிரதமராக இருந்தார்..

பல்கலைகளில் சோதிடத்தைப் பாடமாக வைக்கப் 
போவதாகவும் BAs (Bachelor of Astrology), MAs
 (Master of Astrology) பட்டன்களை வழங்கப் போவதாகவும் 
அதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்றும் 
வாஜ்பாயாய் அரசின் கல்வி அமைச்சர் முரளி 
மனோகர் ஜோஷி திமுக தலைவர் கருணாநிதியிடம் 
கோரிக்கை வைத்தார். சோதிடத்தில் பிடிப்பு உள்ள, 
ஜோசியன் பேச்சைக் கேட்டு மஞ்சள் துண்டு அணிந்து 
கொண்டு திரியும் கருணாநிதி முழு மனதோடு சம்மதம் 
தெரிவித்தார்.   

கருணாநிதியின் சம்மதம் பெற்றவுடன்  
பல்கலைகளில் சோதிடம் பற்றிய
பட்டப் படிப்புகள் அறிமுகம் ஆயின.
இதை எந்தக் கட்சியும் எதிர்க்கவில்லை.
இந்தியாவின் அரசியல் கட்சிகள் அனைத்தும் 
நிலப்பிரபுத்ததுவக் கட்சிகள் (feudal parties) 
தலைவர்களோ தற்குறிகள் மற்றும் பிற்போக்குப் 
பிண்டங்கள்!

2004ல் வாஜ்பாய் ஆட்சியை  இழந்தார்.
UPA ஆட்சிக்கு வந்தது. காங்கிரஸ் கூட்டணியின் 
ஆடசியில் மன்மோகன் சிங் பிரதமர் ஆனார். 
ஆனால் காங்கிரஸ் ஆட்சி சோதிடப் படிப்பை 
நீக்கவில்லை.

2004 நாடாளுமன்றத் தேர்தலுக்கான
எல்லாக் கட்சிகளின் தேர்தல் அறிக்கையும்
என்னிடம் உள்ளது. எந்தக் கட்சியும்
பல்கலைகளில் உள்ள  சோதிடப் படிப்பை
நீக்குவோம் என்று வாக்குறுதி கொடுக்கவில்லை.

தேர்தலில் பங்கேற்காத மாவோயிஸ்ட் கட்சிகள்,
நக்சல்பாரி கட்சிகள் கூட சோதிடத்தை 
எதிர்க்கவில்லை. நக்சல்பாரி புரட்சியாளரும்
மக்கள் யுத்தக் குழு போல்ஷ்விக் தமிழ்நாடு 
அமைப்பின் தலைவரும் ஆகிய ஆசான் 
ஏ எம் கே  அவர்களிடம் நான் இது குறித்து மிகவும் 
விலாவாரியாகத் தெரிவித்தேன். இரண்டு மூன்று 
கல்லூரிகளின் பிராஸ்பெக்டஸை நான் தோழர் 
ஏ எம் கே அவர்களிடம் காண்பித்தேன். என்னிடம் பல 
கேள்விகள் கேட்டு முழுத்தகவலையும் கேட்டுத் 
தெரிந்து கொண்ட ஏ எம் கே அவர்கள் சோதிடத்தில் 
டிகிரி வாங்கும் அளவுக்கு கல்வி சீரழிந்து விட்டதே 
என்று கொதிப்படைந்தார்.

நியூட்டன் அறிவியல் மன்றத்தையும் போல்ஷ்விக்
கட்சியின் தலைவர் ஏ எம் கே அவர்களையும் தவிர 
வேறு யார் எவரும் பல்கலைகளில் 
சோதிடப் பட்டப் படிப்பைக் கொண்டு வந்ததைக் 
கண்டிக்கவில்லை. இந்தியாவில் உள்ள பெரும்பான்மை
'முற்போக்கு'வாதிகள் போலிகளே.

நான் பொறுப்பில் உள்ள தொழிற்சங்கம் மூலமாக
சோதிடப் படிப்பை எதிர்த்து நான் பல்வேறு இடங்களில் 
கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினேன்.

சோதிடத்துக்கு ஆதரவு தந்த திமுகவை கருணாநிதியை 
மன்னிக்கவே முடியாது. மத்தியில் உள்ள  மோடி அரசு 
பல்கலைகளில் உள்ள சோதிடப் படிப்பை ரத்து 
செய்ய வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் 
மன்றம் வலியுறுத்துகிறது.
*****************************************
 
  

  
 

 
ஜெயேந்திரர் செய்த
சங்கர ராமன் கொலை!
திரைப்படம் ஆகிறது!
அனுபம் கேர் ஜகத்குருவாக
நடிக்கிறார்!

இந்துத்துவம் கிறிஸ்துவத்துவம்
இஸ்லாமியத்துவம் உள்ளிட்ட
அனைத்து மதங்களின் மதவாதப் பிற்போக்கு
பிளவுறுத்தும் பிற்போக்கு அரசியலை
ஒருசேர எதிர்ப்பதே முற்போக்கு!

இந்துத்துவம் என்பது மதம் அல்ல. கிறிஸ்துவத்துவம்
என்பதும் மதம் அல்ல.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை
'முற்போக்கு'வாதிகள் போலிகளே.
திராவிட இந்துத்துவம் என்பது மாயை அல்ல.
அது மெய்மை.

மனிதவள அமைச்சர் 
முரளிமனோகர் ஜோஷி யில்
பல்கலை களில்
சோதிடத்தில் பட்டப்படிப்பு
கொணர்ந்தபோது
எதிர்க்க நாதியில்லை

எமது  கோட்பாட்டு ஆவணத்தில் முழு  விளக்கம்
அளிக்கப்படும். விரைவில் .வெளியாகும்.

400ம் அதற்கு மேலும் மதிப்பெண் எடுத்த
மாணவர்களின் எண்ணிக்கையை மட்டுமே
CBSE வெளியிட்டுள்ளது. 250 to 300 மற்றும் 300 to 350
மதிப்பெண் எடுத்தவர்கள் எண்ணிக்கை தெரியாமல்
கணிக்க முடியாது. GUESS பண்ணலாம். அது துல்லியமாக
இருக்காது

சுயநிதி நிகர்நிலை ஆன்லைன் கவுன்சலிங்
.ஆரம்பம் ஆகிவிட்டதே. எனது பதிவுகளை பார்க்கவும்.
14ஆம் தேதி RANK LIST வெளியாகும் என்று தமிழக
அரசு அறிவித்துள்ளது.

அரசு அதிகாரிகளின் மெத்தனம் ஒரு பக்கம்.
மக்களிடம் போதிய விழிப்புணர்வு இல்லாமல்,
அரசுக்கு அழுத்தம் கொடுக்காமல் இருப்பது
இன்னொரு பக்கம். வா

அதுவும் ஒரு திராவிடக் கட்சி ஆயிர்றே. கடவுளை
வணங்குவது பற்றி எனக்கு கவலையில்லை.
தமிழ் மக்களை மூட நம்பிக்கையில் ஆழ்த்தினால்
அது தவறல்ல. மேனன் காலத்தில் மேனன் கொல்லூர்
மூகாம்பிகை பக்தர். சகுனம் நாள் நட்சத்திரம் பார்ப்பார்.
அதைக்கூட ரகசியமாகச் செய்வார். ஜெயா
மூட நம்பிக்கைகள் எல்லாவற்றையும் உரமிட்டு .வளர்த்தார். 


அவர்களின் நம்பிக்கை அவர்களோடு இருந்தால்
நல்லது.பொதுவெளியில் இதைச் செய்யும்போது
மக்களின் மனநிலையும் பிற்போக்காக மாறுகிறது.


அதிமுக ஸ்தாபகர் மேனன். அவர் அண்ணாவால் MLC
ஆக்கப் பட்டவர். 1967இல் அண்ணா அவருக்கு
பரங்கிமலை தொகுதியில் சீட் கொடுத்தார்.
கலைஞர் அவருக்கு பொருளாளர் பதவி கொடுத்தார்.
அவர் திராவிட இயக்கத்தில் வளர்ந்தவர். அவரின் கட்சி
அதிமுகவும் ஒரு திராவிடக் கட்சிதான். அது திராவிடக்
கட்சி இல்லையென்று கலைஞர் ஏற்பாரா? மாட்டார்.
ஆராய்ச்சியாளர்கள் ஏற்பார்களா? மாட்டார்கள்.
--------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக