திங்கள், 27 ஜூன், 2022

 2015ல் முகநூலில், தமிழில் எழுதி பெரும் ஆதரவு பெற்ற பதிவு, தற்போது நீதிமன்றம், மூலம் நிரூபிக்கப் பட்டு, குஜராத் கலவரங்களுக்கு மோடி காரணமல்ல என தீர்ப்பு வந்துள்ளது. என்னை போன்ற பலர் 2010 முதல் இது குறித்து பேசி, பல எதிர்ப்புகளை சந்தித்துள்ளோம்.

பலருக்கு இன்னமும் குஜராத் கலவரத்தில், எப்படி பொய்கள் பரப்பப் பட்டன என்பது குறித்து தெளிவில்லை. ஒரு பெரும் காட்டாற்று வெள்ளம் போன்ற பொய்களின் சில துளிகளை மட்டுமே கொடுக்க இயலும். ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பது போல இவற்றின் மூலம் நீங்களே உணரலாம், எவ்வளவு பொய்கள் அவதூறுகள் பரப்பப் பட்டன என்பதை. மீண்டும் உங்கள் பார்வைக்கு.
--------------------------------------------------------------------------
யாரையும் புண்படுத்தவோ, ஆதரிக்கவோ இந்த பதிவு செய்யப்படவில்லை. அதே சமயம் எந்தவித நியாயமின்றி உண்மை அறியாமல், தவறான எண்ணம் ஏற்பட்ட நல்ல மனிதர்களுக்கு உண்மையை தெரியப்படுத்தும் முயற்சி. ஒவ்வொன்றும் பெரும்பாலும் பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் எழுதப்பட்டது.
தேர்தல் களம் மக்களுக்கு ஆற்றும் தொண்டின் அடிப்படையில் நடைபெறவேண்டும், உண்மை அறியாமல் ஏற்படும் தனிமனித வெறுப்புகளின் அடிப்படையில் அல்ல. முடிந்த வரை நடுநிலைமையுடன் இந்த பதிவை எழுதியுள்ளதாக நம்புகிறேன். பொறுமையாக விருப்பு வெறுப்பின்றி படித்தால் உண்மை விளங்கும்.
குஜராத்தை பற்றி எத்தணை பொய்கள் சமூக வளைதலத்தில், அனைத்தையும் பொய்யென்று நிரூபிக்க என்னால் முடியாது, அதற்கு என் வாழ்நாள் முழுவதும் போதாது. இந்த பதிவு 2002ல் நடைபெற்ற கலவரத்தை ஒட்டி, பரப்பப் பட்ட பல பொய்களில், ஒரு சிலவற்றை மட்டுமே ஆதாரத்துடன் நிரூபிக்கும் முயற்சி.
பத்திரிகைகள் வெளியிடும் முதல் தகவலை மட்டும் நம்புபவர்கள், அதே பத்திரிகைகளில் பின்னர் வரும் உண்மையை, திரும்பி கூட பார்ப்பதில்லை. கேவலப்படுத்த மட்டுமே உரிமை உள்ளவர்கள், பாதிக்க பட்டவரின் நியாயத்தை மதிக்காததில் வியப்பென்ன?
ஒரு தாய் பசுவிற்கு ஏற்பட்ட தவற்றை கூட, தீர விசாரித்து, தன் மகனை இரதமேற்றி கொன்ற மன்னன், சிலம்பை தவறாக புரிந்து, தண்டனையளித்ததை, தாளாமல் உயிர் விட்ட மன்னன், இப்படி பலர் நீதியையும் தர்மத்தையும் உயிரினும் மேலாக மதித்த தமிழ் இனம், இன்று வெறுப்பின் உச்ச கட்டத்தில் ஒரு மாநில மக்களை தவறாக திரித்து, கற்பனையாக குற்றம் சாற்றி, இன்பமுறுவதை கண்டு இந்த பதிவு.
இதன் மூலநோக்கம் மதக்கலவரம் நடந்ததா இல்லையா என்பதல்ல. எந்தவொரு விஷயத்தையும் விஷமாக்கும், சில கீழ்புத்திகாரர்களை வெளிச்சத்திற்கு கொண்டு வருவதே. சிலவற்றையே சொல்லியுள்ளேன், இதுபோல தினம் தினம் சமூக வளைதலத்தில் அரங்கேற்றமாகிறது.
இதற்கெல்லாம் ஒரே காரணம் அரசியல், மதவெறி, பணம், இந்தியாவை துண்டாடுதல். இதற்கு பின் மிகப்பெரிய சக்திகள், வெளிநாட்டு சக்திகள், இவற்றை எதிர்த்து எங்களை போல சாதாரணமானவர்கள் என்ன செய்ய முடியும். முடிந்ததை செய்வோம், மற்றதை கடவுள் பார்த்து கொள்வார்.
Like
Comment
Share

1 கருத்து: