சனி, 25 ஜூன், 2022

அன்று வள்ளுவர் சொன்னார்!
இன்று நியூட்டன் அறிவியல் மன்றம் சொல்கிறது!
பஞ்சாங்கமும் மாதவனும் குட்டி முதலாளித்துவமும்!
நடிகர் மாதவனின் கூற்று ஒரு LAYMANன் கூற்றே!    
--------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன் 
நியூட்டன் அறிவியல் மன்றம் 
--------------------------------------------------------------------
நமது முன்னோர்கள் கணித்த பஞ்சாங்கக்  
கணக்கீடுகள் செவ்வாய்க்கு நாம் அனுப்பிய 
மங்கள்யானின் வெற்றிக்கு உதவியது என்பதாக 
நடிகர் மாதவன் கூறி இருந்தார்.

இதைத் தொடர்ந்து நடிகர் மாதவன் அறிவியலுக்கு 
எதிராகப் பேசியதாக குட்டி முதலாளித்துவம் 
கண்டனங்களை எழுப்பி வருகிறது.

நடிகர் மாதவன் சரியாகத்தான் சொல்லி இருக்கிறாரா 
அல்லது தவறாகச் சொல்லி விட்டாரா என்ற 
ஆராய்ச்சி முற்றிலும் தேவையற்றது. ஏனெனில் 
மாதவன் கூறியதற்கு எவ்விதமான canonical statusம் 
கிடையாது என்று எனது முந்தைய பதிவில் 
கூறி இருந்தேன்.

நடிகர் மாதவன் அறிவியலாளரோ, அறிவியல் 
கற்றவரோ, அறிவியலைப் போதிக்கும் ஆசிரியரோ 
அல்லர் என்பதால், அவருடைய கூற்று ஒரு 
layman's point of view மட்டுமே! அதை ஆய்வுக்கு 
உட்படுத்த வேண்டிய அவசியம் இல்லை. 
அதற்கு canonical status கிடையாது.

மாதவனின் கூற்றுக்கு canonical status கிடையாது 
என்று நான் இன்று கூறுவதையே  2000 ஆண்டுகளுக்கு 
முன்பு வள்ளுவரும் கூறியுள்ளார்.

கல்லாதான் ஒட்பம் கழியநன் றாயினும் 
கொள்ளார் அறிவுடை யார் 
என்கிறார் வள்ளுவர். 

அறிவியல் கற்றிராத நடிகர் மாதவனின் கூற்றுக்கு 
canonical status கிடையாது என்று நியூட்டன் அறிவியல் 
கூறுவதும், கல்லாதான் ஒட்பம் கொள்ளார் 
அறிவுடையார் என்று வள்ளுவர் கூறுவதும் 
சமமானவை! சமமான பொருள் உடையவை!
Great men think alike!
---------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
ஆங்கிலமும் தெரியாது! திருக்குறளும் தெரியாது!
Canonical statusம் தெரியாது! கல்லாதான் ஒட்பம் 
என்றாலும் தெரியாது. கல்வியறிவு வேண்டும்,
IQ வேண்டும் என்று நான் நிபந்தனை விதித்தால், 
குட்டி முதலாளித்துவத் தற்குறிகள் ஆத்திரப்  
படுகிறார்கள். அவர்கள் உயிர் வாழத் தகுதியற்ற 
கயவர்கள்.
***********************************************      

    




 

 
  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக