செவ்வாய், 21 ஜூன், 2022

 தூத்துக்குடி தொழிலாளர் வேலை நிறுத்தத்தையும் பொதுமக்களின் எதிர்ப்பையும் நிறுத்த ஆஷ் துப்பாக்கியால் சுட்டான். அதில் மாண்டவர்கள் நால்வர். ஒருவர் இஸ்லாமியர். ஒருவர் பட்டியல் சமுதாயத்தை சார்ந்தவர். ஒருவரின் வயது 17. வலம்புரியம்மன் கோவிலில் பணி செய்யும் இளைஞர். மண்டையில் குண்டு பாய்ந்து மாய்ந்தார். மற்றொருவர் வயது 18. ரொட்டிக்கடையில் வேலை செய்யும் இளைஞர். இவரும் ஆஷின் துப்பாக்கி குண்டுக்கு பலியானார். இறந்தவர்களின் தேகங்கள் எவ்வித அக்கறையும் மரியாதையும் இன்றி மாலை வரை தெருக்களிலேயே கிடக்கும்படி அராஜகம் செய்தான் ஆஷ். இந்த விவரங்கள் ம.பொ.சிவஞானம் ஐயா அவர்கள் எழுதிய ’கப்பலோட்டிய தமிழன்’ எனும் ஆதாரபூர்வமான நூலில் பக்கங்கள் 54-55 இல் உள்ளன.

ஆனால் இப்படிப்பட்ட ஆஷை குறித்து அவன் ஏதோ சாதி கொடுமைகளை எதிர்த்த தயாளதுரை போல சில மக்கட் பதடிகள் பேசியும் எழுதியும் வருகின்றனர். வீர வாஞ்சிநாதனின் தியாகத்தையும் அவரது மனைவி பட்ட கஷ்டங்களையும் மோசமாக பேசுகின்றனர். இப்படிப்பட்ட கீழ்த்தர ஜன்மங்களையும் பெற்றிருக்க அவர்களின் தாயார்கள் என்ன பாவம் செய்தார்களோ தெரியவில்லை.
இதில் நம்முடைய ஒரு தவறும் இருக்கிறது. இந்த நான்குபேரையும் யார் யார் என்பதை கண்டறிந்து அவர்களை தேச விடுதலைக்கான பலிதானிகள் தியாகிகள் என கௌரவிக்க நாம் தவறிவிட்டோம். திருநெல்வேலி தேசபக்தர்கள் இவர்கள் யார் யார் என கண்டறிந்து ஆஷின் கொடுங்கோன்மைக்கு பலியான நம்மவர்களான இவர்களின் நினைவை மக்களிடம் கொண்டு செல்லவேண்டும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக