தமிழரும் நாட்காட்டிகளும்...
இன்று நாம் பயன்படுத்தும் ஆங்கில நாட்காட்டிக்கு வானியலோடு நெருங்கிய தொடர்பு இல்லை. உதாரணமாக பிப்ரவரியில் 28 நாட்கள் என்பதை சூரியனின் சுழற்சி முடிவு செய்யவில்லை. அகஸ்டச்சும், ஜூலியஸ் சீசரும் - தங்கள் பெயர் உள்ள மாதங்களுக்கு 31 நாட்களைக் கொடுக்க ஒரு நாளை பிப்ரவரியில் இருந்து திருடியதன் சுவடுதான் பிப்ரவரியில் 28 நாட்கள். லீப் ஆண்டில் பிப்ரவரியில் மட்டும் ஒரு நாள் கூடுவதற்குப் பின்பும் அறிவியல் இல்லை - அது ஒரு இழப்பீடு. ரோமானிய அரசர்களின் ஆதிக்கத்துக்கு கீழ்ப்பட்ட முட்டாள்தனமான நாட்காட்டியைத்தான் இன்றும் நாம் பின்பற்றிக் கொண்டிருக்கிறோம். அது போக கிறிஸ்து பிறந்த ஆண்டைத் தவறாகக் குறிக்கும் வரலாற்றுப் பிழை, போப்பாண்டவர்கள் செய்த மாற்றங்கள் எல்லாம் இன்றைய காலெண்டரில் உண்டு. ஆனால் அது நமக்கு அறிவியல்.
ஆனால் தமிழரின் நாட்காட்டியில் உள்ள 12 மாதங்களும் சூரியனின் நகர்வை அடிப்படையாகக் கொண்டவை. 30 டிகிரி அல்லது ஒரு ராசி அல்லது இரண்டேகால் நட்சத்திரங்களை சூரியன் நீள்வட்டப் பாதையில் சுழன்று கடக்க எடுத்துக் கொள்ளும் காலமே இங்கு ஒரு மாதம்.
நமக்கும் லீப் ஆண்டு உண்டு அதற்கு ‘நெட்டாண்டு’ என்று பெயர். தமிழரின் நெட்டாண்டில் ஒரு மாதத்தில் மட்டும் நாட்கள் மாறாது. வைகாசி, ஆனி, தை, மாசி ஆகிய 4 மாதங்களின் நாட்கள் எண்ணிக்கைகளும் மாறும். காரணம் சூரியனின் பாதையை முழுமையாக மீண்டும் கணக்கிட்டு இந்த நாட்கள் முடிவு செய்யப்படுகின்றன. நமது நாட்காட்டியை மதம் மாற்றியது இல்லை, அரசர்கள் ஆதிக்கம் செலுத்தியது இல்லை. ஆனால் இது நமக்கு மூடநம்பிக்கை, அயலார் கொடுத்து!.
பஞ்சாங்கத்தைக் கேலி செய்யும் கும்பலுக்கு காலண்டரின் வரலாறு தெரியாததுதான் சோகம். என்று தணியும் எங்கள் அடிமையின் மோகம்?
-வரலாற்று ஆய்வாளர் (நாணயவியல்) திரு மன்னர் மன்னன்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக