திங்கள், 20 ஜூன், 2022

சோனியா ராகுல் இருவருக்கும் ஜாமீன் 
கிடைத்தது எப்போது?
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------
1) சோனியா, ராகுல் மற்றும் சிலர் மீதான
ரூ 2000 கோடி மணி லாண்டரிங் வழக்கு 
2012ல் மன்மோகன்சிங் ஆட்சியின்போது 
போடப்பட்டது. புகார் தொடுத்தவர் டாக்டர் 
சுப்பிரமணியம் சுவாமி.    

2) சோனியா, ராகுல் மீதான வழக்கில் 
போடப்பட்ட கிரிமினல் குற்றங்களும் அவற்றின் 
சட்டப் பிரிவுகளும் பின்வருமாறு::-

அ) இபிகோ பிரிவு 403:
நேர்மையற்ற விதத்தில் சொத்துக்களை அபகரித்தது 
(dishonest misappropriation of property).

ஆ) இபிகோ பிரிவு 406:   
கிரிமினல் தனமான நம்பிக்கை மோசடி 
(criminal breach of trust).

இ) இபிகோ 420: ஏமாற்று வேலை (cheating)

ஈ) இவை அனைத்தும் இபிகோ 120b பிரிவுடன் 
கிரிமினல் சதி (criminal conspiracy) சேர்த்துக் 
கருதப்படும் (read with).

3) சோனியா ராகுல் மீதான மணி லாண்டரிங் 
வழக்கானது மன்மோகன் சிங்கின் ஆட்சியின்போது
(2012) போடப்பட்டாலும், அவர்களுக்கு ஜாமீன் 
வழங்கியது மோடியின் ஆட்சியில்தான் 2015ல்.
பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் அவர்களுக்கு 
ஜாமீன் கிடைத்தது. அவர்களுக்கு ஜாமீன் 
கொடுப்பதை மோடி அரசின் வழக்கறிஞர் 
கடுமையாக ஆட்சேபிக்கவில்லை. வெறுமனே 
பெயரளவுக்கு ஆட்சேபித்துவிட்டு, அவர்களுக்கு 
ஜாமீன் வழங்கப்படுமென்றால் அதை அரசு 
பொருட்படுத்தாது என்ற சமிக்ஞையை மோடி 
அரசின் வழக்கறிஞர் நீதிமன்றத்திற்குத் 
தெரியப் படுத்தினார்.

4) 2014 மே மாதத்தில்தான் மோடி பிரதமராகப் 
பதவி ஏற்று இருந்தார். பதவியேற்ற ஓராண்டுக்குள் 
எவ்வளவுதான் சட்டப்படி சோனியாவையும் 
ராகுலையும் உள்ளே வைத்தாலும், அது மோடி 
அரசின் பழிவாங்கும் செயலாகவே பார்க்கப்படும்.
எனவே அத்தகைய எண்ணம் யாருக்கும் ஏற்பட்டு 
விடாமல், சாமர்த்தியமாக நடந்து கொண்டு 
அவர்களுக்கு ஜாமீன் கிடைக்க வகை செய்தார் மோடி.  

4) காங்கிரஸ் ஆட்சியில் வழக்குப் போடப்பட்டு 
மோடியின் ஆட்சியில் ஜாமீன் கிடைத்தது என்ற 
உண்மை விசுவரூபம் எடுத்து நிற்கிறது. இப்படி 
இருக்கையில் ராகுல் பழிவாங்கப் படுகிறார்
என்று சொல்வதற்கு தொழில்முறையிலான 
விபச்சாரத் தரகர்களால் மட்டுமே முடியும்.

5) தங்கள் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி 
 2016ல் உச்சநீதிமன்றத்தை நாடினர் சோனியாவும் 
ராகுலும். ஆனால் அவர்கள் மீதான வழக்கு 
விசாரணையை ரத்து செய்ய முடியாது என்று 
உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்து விட்டது.

6) ஐயோ எங்கள் மீது பொய் வழக்குப் போட்டு 
இருக்கிறார்கள் என்று உச்சநீதிமன்றத்தில் போய் 
ஒப்பாரி வைத்தும் இந்தப் பயனும் இல்லை.
வழக்கு நியாயமானதுதான் என்று உச்சநீதிமன்றம் 
அடித்துக் கூறி விட்டது. இவ்வளவுக்கு அப்புறமும் 
இதில் playing victim cardக்கு என்ன நியாயம் உள்ளது?

7)  அமலாக்கப் பிரிவின் விசாரணைக்குத் தன்னை 
உட்படுத்திக் கொள்ளாமல், மிகுந்த கயமைத் 
தனத்தோடு நாடு முழுவதும் வன்முறையைக் 
கட்டவிழ்த்து விட்டார் ராகுல் காந்தி. சோனியாவோ 
ஒரு இழிந்த கோழையைப்போல, கொரோனா வந்து 
விட்டது என்று சொல்லிக்கொண்டு மருத்துவ 
விடுப்பு போட்டு விட்டார்.

8) மனிதகுல வரலாற்றின் மிகவும் கேவலமான 
ஜென்மங்களை நம் சமகால வரலாற்றில் நாம் 
பார்த்துக் கொண்டிருக்கிறோம். சோனியா, 
ராகுலை விட இழிந்த அருவருக்கத்தக்க 
அரசியல்வாதிகள் இந்த மொத்தப் பிரபஞ்சத்திலும் 
கிடையாது.
------------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
மோடியோடு ஒரு quid pro quo தன்மையிலான 
agreement மேற்கொள்ளப் படலாம் என்று அரசியல் 
நோக்கர்கள் கருதுகின்றனர். ஏனெனில் இந்த 
வழக்கு ஒரு open and shut case. இதன் பொருள் 
என்ன? தெரிந்து கொள்ளுங்கள். spoon feeding
இவ்விடம் செய்யப் பட மாட்டாது.
*************************************************  
     
   

   
  
           
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக