communist education lenin
------------------------
நம்முடைய கல்வியை கம்யூனிஸ்ட் முடிவுகள், தீர்மானங்களைப் பயிலுவதுடன், கம்யூனிஸ்ட் கோஷங்களைக் கற்றறிவதுடன் மட்டும் கட்டுப்படுத்திக்கொள்ள வேண்டுமென்பதில்லை.
அந்த வழியில் நீங்கள் கம்யூனிசத்தை உண்டாக்க முடியாது.மனிதகுலம் உருவாக்கிய சகல அறிவுச் செல்வக் கருவூலங்களைக் கொண்டு உங்களுடைய மனதைச் செழுமைப் படுத்திக் கொள்ளும் பொழுதுதான் நீங்கள் ஒரு கம்யூனிஸ்ட் ஆக முடியும்.
நாம் உருப்போட வேண்டிய அவசியமில்லை.ஆனால் நாம் ஒவ்வொரு மாணவனுடைய மனதையும் அடிப்படையான உண்மைகளைக் கொண்ட அறிவின் மூலம் வளர்க்க வேண்டியதும், முழு நிறைவாக்க வேண்டியதும், அவசியமாகும்.
ஒருவன் அடைந்துள்ள அறிவனைத்தையும் அவனுடைய மனதில் முழுமையாகக் கிரகித்துக் கொள்ளாவிட்டால் கம்யூனிசம் என்பது ஒரு வெறும் சொல்லாகிவிடும்.அது வெறும் விளம்பரப் பலகை யாகிவிடும்.அவன் வெறும் தற்பெருமை காரராகத்தான் இருக்க முடியும்.அறிவை வெறுமனே கிரகித்தால் மட்டும் போதாது. அந்த அறிவை திறனாய்ந்து கிரகித்துக் கொள்ள வேண்டும்.தேவையற்ற குப்பைக் கூளங்களைக் கொண்டு உங்கள் மனதில் உருப்போட்டுக் கொண்டிராமல், நன்கு கல்வி அறிவு பெற்றுள்ள இன்றைய மனிதனுக்கு அத்தியாவசியமாகக் கட்டாயம் தேவைப்படும் உண்மை விவரங்கள் அனைத்தையும் கொண்டு செழுமைப் படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு கம்யூனிஸ்ட், தான் அடையப் பெற்றுள்ள முன்னேற்பாடாகச் செய்யப்பட்ட முடிவுகளினால் கருத்தாழமுடைய,
கடுமையான உழைப்பைச் செலுத்தாமல் உண்மைகளைப் புரிந்து கொள்ளாமல் அவைகளைத் தனது மண்டையில் ஏற்றிக் கொண்டு, அவருடைய கம்யூனிசத்தை பெருமையடித்துக் கொண்டிருந்தால், அவர் தன்னைத் தானே திறனாய்ந்து, பரிசீலனை செய்து கொள்ள வேண்டும். அவர் உண்மையில் ஒரு பரிதாபகரமான கம்யூனிஸ்ட்டா கவே இருப்பார். அத்தகைய மேலெழுந்தவாரியான தன்மை மிகவும் அபாயகரமானது. தீர்மானமான சாவுக்கு சமமானது.அதை நான் அறிந்திருந்ததால், நான் கொஞ்சம் அறிந்திருக்கிறேன் என்று பொருள். நான் இன்னும் அதிகமாக கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். ஆனால் ஒரு மனிதன் தான் கம்யூனிஸ்ட் என்று கூறிக்கொண்டு தான் எதையும் பூர்த்தியாக தெரிந்துகொள்ள வேண்டிய அவசியமில்லை என்று கூறினால்,அவர் ஒரு கம்யூனிஸ்டாக எப்போதும் ஆக மாட்டார்.
----------லெனின்-------
Am I a Communist ????
- * - * - * - * - *
Our education should not be limited to studying communist decisions and resolutions and learning communist slogans.
You can not create communism in that way. You can become a communist only when you enrich your mind with all the intellectual treasures created by mankind.
We do not need to be molded.
If one does not fully comprehend the knowledge one has attained in one's mind, communism will become a mere word. It will become a mere bulletin board.
You need to be able to grasp that knowledge efficiently.
A communist, conceived of as a prelude to what he has achieved,
If he loads them into his skull without understanding the facts without paying hard labor and boasting of his communism, he must examine and examine himself.
He would be a really pathetic communist cowboy.
Such superficiality is very dangerous.
Equivalent to definite death.Because I knew it, it meant I knew little.
I will try to learn more.
But if a man claims to be a communist and says that he does not need to know anything completely, he will never become a communist.....................lenin...................
------------------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக