புதன், 14 ஏப்ரல், 2021

 தமிழ்ப் புத்தாண்டு சித்திரையா தையா?

-----------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

------------------------------------------------------ 

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தமிழ்ச் 

சமூகம் மேய்ச்சல் சமூகமாக இருந்தது.

பின்னர் படிப்படியாக வேளாண் சமூகமாக 

பரிணாம வளர்ச்சி அடைந்தது. ஆண்டாளின் 

திருப்பாவை மேய்ச்சல் சமூகத்து 

வாழ்க்கையை, வேளாண்மையைப் 

புதிதாகக் கற்றுக் கொண்டுள்ள ஒரு 

சமூகத்தின் வாழ்க்கையை படம் 

பிடித்துக் காட்டுகிறது.


ஒரு வேளாண்மைச் சமூகத்துக்கு 

வானியல் அறிவு தேவை. சூரியனின் 

இயக்கம் குறித்தும் பூமியின் மீதான 

அதன் விளைவுகள் குறித்தும் தெளிவான 

வானியல் அறிவு தேவை. இந்த வானியல் 

அறிவைப் பெறாமல் வேளாண்மை 

செய்ய இயலாது.


விதைப்பதையும் அறுப்பதையும் பிற வேளாண் 

செயற்பாடுகளையும் எந்தெந்தக் காலத்தில் 

மேற்கொள்ளுவது என்பதைச் சரியாகத் 

தீர்மானிப்பதே அன்றைக்கு குழந்தைப் 

பருவத்தில் இருந்த வேளாண் சமூகங்களின் 

முன்னிருந்த சவாலாக இருந்தது..


சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து 

ஓராண்டில் நான்கு நாட்கள் முக்கியமானவை. 

பூமி-சூரியன் சார்ந்த, திரும்பத் திரும்ப 

ஏற்படும் வானியல் நிகழ்வுகள்  (recurring events) 

மானுட வாழ்க்கையில் பாதிப்பை ஏற்படுத்தக் 

கூடியவை. அவை எப்போதெல்லாம் நிகழும் 

என்பது பற்றிய தெளிவு  ஒரு சமூகத்துக்குத் 

தேவை. 


சூரியனின் இயக்கத்தைப் பொறுத்து 

ஓராண்டில் நான்கு நாட்கள் முக்கியமானவை.


1) சம இரவு நாட்கள் இரண்டு (2 equinoxes)

2) கதிர்த் திருப்ப நாட்கள் இரண்டு (2 solstices).


இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு, 

தொலைநோக்கி கூட கண்டுபிடிக்கப் 

பட்டிராத அக்காலத்தில், வானியல் 

நிகழ்வுகளை அறிந்து கொள்வதும் அவை 

எந்தெந்த நாட்களில் ஏற்படும் என்று 

முன்கணிப்பதும் எளிதல்ல. 


முக்கியமான இந்த நான்கு நிகழ்வுகளும் 

எந்தெந்த நாட்களில் வரும் என்று 

முன்கூட்டியே அறிந்திட இன்றுள்ள 

பஞ்சாங்கம் போல ஒரு தயார்நிலை 

அட்டவணை (Ready reckoner) அன்று 

உண்டாக்கப் பட்டிருக்கவில்லை. 


ஓராண்டில் இந்த நான்கு நாட்களும் 

என்றென்று நிகழும் என்று பார்ப்போம்.


மார்ச் 20 சம நாள் (vernal equinox)

ஜூன் 21 கோடைகாலக் கதிர்த்திருப்பம் 

(summer solstice)

செப்டம்பர் 22 சமநாள் (autumnal equinox)  

டிசம்பர் 21 குளிர்காலக் கதிர்த்திருப்பம் 

(winter solstice)

   

இன்றைக்கு இந்த 2021ஆம் ஆண்டில் 

மேற்கூறிய நான்கு நாட்களும் என்றென்று 

வரும் என்று முன்கூட்டியே கணிக்க இயலும்.

ஆனால் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு,

மேற்கூறிய நான்கு நாட்களையும், அவை 

என்று நிகழும் என்று கண்டறிவது எப்படி?


தமிழ்ப்புத்தாண்டு எது? சித்திரையா, தையா? 

இந்தக் கேள்விக்கு விடையளிக்க வேண்டுமெனில் 

மேற்கூறிய நான்கு நாட்கள் அல்லது அவற்றில் 

ஏதேனும் ஒன்று என்று நிகழும் என்று 

ஒரு சமூகம் அறிந்திருக்க வேண்டும். 

   

மார்ச், ஜூன், செப்டம்பர், டிசம்பர் ஆகிய

நான்கு மாதங்களில் மேற்கூறிய நான்கு 

நாட்களும் வருகின்றன. பண்டைய தமிழ்ச் 

சமூகம் மேற்கூறிய நான்கு நாட்களில் 

புத்தாண்டுக்கான நாளாக எந்த நாளைத் 

தேர்ந்தெடுத்தது?


எந்த நாளை 2000 ஆண்டுக்கு முந்திய 

தமிழ்ச் சமூகத்தால் தேர்ந்தெடுக்க 

முடிந்தது? இந்தக் கேள்விக்கு விடை 

தெரிந்தால், தமிழனின் புத்தாண்டு எது 

என்ற கேள்விக்கு விடையளிக்க இயலும்.

தையா, சித்திரையா என்ற கேள்விக்கு 

விடையளிக்க இயலும்.  

---------------------------


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக