வியாழன், 8 ஏப்ரல், 2021

அண்ணாமலை ரெட்டியார் காவடிச் சிந்து!

-----------------------------------------------------------------

(நெல்லை மாவட்டம் கழுகுமலை முருகன் மீது

பாடப் பெற்றது)

--------------------------------------------------------------

சென்னி குளநகர் வாசன், - தமிழ்

தேறும் அண்ணாமலை தாசன் - செப்பும் செகமெச்சிய மதுரக்கவி யதனைப்புய வரையில்புனை தீரன்; அயில் வீரன். வன்ன மயில்முரு கேசன், - குற வள்ளி பதம்பணி நேசன் - உரை வரமேதரு கழுகாசல பதிகோயிலின் வளம்நான்மற வாதே சொல்வன் மாதே! கோபுரத் துத்தங்கத் தூவி, - தேவர் கோபுரத் துக்கப்பால் மேவி, - கண்கள் கூசப்பிர காசத்தொளி மாசற்று விலாசத்தொடு குலவும் புவி பலவும். நூபுரத் துத்தொனி வெடிக்கும் - பத நுண்ணிடை மாதர்கள் நடிக்கும் - அங்கே நுழைவாரிடு முழவோசைகள் திசைமாசுணம் இடியோ என நோக்கும் படி தாக்கும். சந்நிதி யில்துஜஸ் தம்பம், - விண்ணில் தாவி வருகின்ற கும்பம் - எனும் சலராசியை வடிவார்பல் கொடிசூடிய முடிமீதிலே தாங்கும்; உயர்ந் தோங்கும். உன்னத மாகிய இஞ்சி,-பொன்னாட்டு உம்பர் நகருக்கு மிஞ்சி - மிக உயர்வானது பெறலால், அதில் அதிசீதள புயல்சாலவும் உறங்கும்; மின்னிக் கறங்கும். அருணகிரி நாவில் பழக்கம் - தரும் அந்தத் திருப்புகழ் முழக்கம், -பல அடியார்கணம் மொழிபோதினில் அமராவதி இமையோர்செவி அடைக்கும்; அண்டம் உடைக்கும். கருணை முருகனைப் போற்றித்-தங்கக் காவடி தோளின்மேல் ஏற்றிக் - கொழும் கனல்ஏறிய மெழுகாய்வரு பவர் ஏவரும், இகமேகதி காண்பார்; இன்பம் பூண்பார்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக