திங்கள், 19 ஏப்ரல், 2021

 நடிகர் விவேக்கின் மரணத்திற்குப்பின் 

தமிழ்நாட்டில் அதீத வேகத்தில் பரவும் வைரஸ்!

-----------------------------------------------------------------------

நியூட்டன் அறிவியல் மன்றம் 

---------------------------------------------------------------

தமிழ்நாட்டில் மட்டும் ஒரு கொடிய வைரஸ் 

எலக்ட்ரானின் வேகத்தில் பரவி வருகிறது.இந்த  

வைரசின் பெயர் "போமுப்போ வைரஸ்" ஆகும். இது 

உயிர்க்கொல்லி நோயுடன் அறிவுக்கொல்லி 

நோயையும் உண்டாக்கும். 


போமுப்போ வைரஸ் என்பது போலிமுற்போக்கு 

வைரஸ் என்று பொருள்படும். உலகிலேயே 

அதிக அளவில் போலி முற்போக்குகள் என்னும் 

SPECIES வாழ்ந்து வரும் இடம் தமிழ்நாடே ஆகும்.


கொரோனா வந்தவுடன்தான் தடுப்பூசி எதிர்ப்பும் 

வந்தது என்று யாராவது நினைத்தால் அது பிழை.

கொரோனாவுக்கு வெகுகாலம் முந்தியே 

தடுப்பூசி எதிர்ப்பானது தமிழ்நாட்டில் கொழுந்து 

விட்டு எரிந்தது.   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக