புதன், 7 ஏப்ரல், 2021

 காவடிச் சிந்து!

கழுகுமலை முருகன் மீது பாடப்பெற்ற பாடல்!

-------------------------------------------------------------------

வீரை பி இளஞ்சேட்சென்னி

---------------------------------------------- 

அருணகிரிநாதரின் திருப்புகழில் உள்ள 

சந்த அமைப்பால் கவரப்பட்டு அண்ணாமலை 

ரெட்டியார் தமது காவடிச்சிந்தை இயற்றினார்.

முருகன் கோவில்களில் திருப்புகழும் காவடிச் 

சிந்தும் இணையான இலக்கியங்களாகக் 

கருதப்பட்டு பாடப்பெறும்.


சென்னி குளநகர் வாசன் தமிழ் 

தேறும் அண்ணாமலை தாசன்-செப்பும் 

ஜெகம் மெச்சிய மதுரக்கவி

யதனைப் புதுவரையில் புனை தீரன் 

அயல் வீரன்.


இந்தப் பட்டை சந்தத்தோடு பாட வேண்டும்

அல்லது படிக்க வேண்டும்.

அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் சிந்தை 

சந்த நயம் ஓசைநயத்துடன்

பாடக் கூடியவர்கள் தமிழ்நாட்டிலேயே 

நாலைந்து பேர்தான். அந்த நாலைந்து பேரில் 

அடியேன் இடம் பெற்றது பேறு.


திருப்புகழ் சந்தம் எளியது.

ஒரு எளிய உதாரணம் பார்ப்போம்.


:"முட்டுப் பட்டுக் கதிதோறும்

முற்றச் சுற்றிப் பலநாளும்"              

இது திருப்புகழ்.


இதன் சந்தம் வருமாறு:-

தத்தத் தத்தத் தன தான 

தத்தத் தத்தத் தன தான.


ஏதாவது புரிந்ததா? புரிந்து கொள்ள முயலவும்.


காவடிச்சிந்தின் சந்தம் இனியது, நீண்டது.

மேலே கூறிய காவடிச் சிந்தைப் பார்ப்போம்.


"ஜெகம் மெச்சிய மதுரக்கவி

யதனைப் புதுவரையில் புனை தீரன் 

அயல் வீரன்".

  

இதன் சந்த அமைப்பைப் பாருங்கள்.

தனனத்தன  தனனத்தன  

தனனத்தன   தனனத்தன  

தானா தன தானா.


சந்தத்தைப் புரிந்து கொள்ள முடிந்ததா?

ஜெகம் மெச்சிய மதுரக்கவி 

(தனனத்தன  தனனத்தன)


யதனைப் புதுவரையில் புனை 

(தனனத்தன தனனத்தன)


தீரன் அயல் வீரன் ( தானா தன தானா).


சந்த நயத்தோடு ஓசை நயத்தோடு 

வாய்விட்டுப் படியுங்கள். இல்லையேல் 

பயனில்லை.


தூக்கி வைத்த கால்களுக்கு முருகையா 

துத்திப்பூ ஜல்லடமாம் முருகையா

எடுத்து வைத்த கால்களுக்கு முருகையா 

எருக்கம்பூ ஜல்லடமாம் முருகையா!  




அண்ணாமலை ரெட்டியாரின் காவடிச் 

சிந்தை எப்படிப் பாட வேண்டும்? இதோ 

பாடிக் காட்டுகிறார் இடைச்சியூரணி முருகேசன்.

இதன்படி படியுங்கள். 





அன்புக்குரிய டாக்டர் ஷோபனா விக்னேஷ் 

பாடிய காவடிச் சிந்து 

"சென்னி குள நகர் வாசன்".

கேளுங்கள். தமிழை வளருங்கள். 


இலக்கியச் சிற்றுரை கேளுங்கள்!

----------------------------------------------------

நயம் மிகுந்த ஒரு இலக்கியச் சிற்றுரையை 

செய்தித்தமிழ் என்னும் யூடியூப் சானல் 

வெளியிட்டு உள்ளது. 11 நிமிட வீடியோ இது.


ஒரு புறநானூற்றுப் பாடலுக்கான 

விளக்கம் இது. கேளுங்கள்! நீங்கள் 

கேட்டால் பார்த்தால் தமிழுக்கு 

ஏற்றம். இல்லையேல் தமிழுக்குத் தாழ்வு!


சமர்ப்பணம்:

இந்த இலக்கியச் சிற்றுரை என்னுடைய 

தமிழ்த்தாய்க்குச் சமர்ப்பணம்.

--------------------------------------------------------   

 

 


 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக