பூமி சூரியனைச் சுற்றுகிற
சுற்றுப்பாதையில் (orbit) இரண்டு
புள்ளிகள் உண்டு.
ஒன்று:சூரிய அண்மைப்புள்ளி (perihelion).
இன்னொன்று: சூரியச் சேய்மைப்புள்ளி
(aphelion).
அண்மைப்புள்ளியின்போது, பூமி
சூரியனுக்கு நெருக்கமாக வரும்.
அப்போது சூரியனின் ஈர்ப்புச் சக்தியானது
தன்னை இழுத்து விடாமல் இருக்கும்பொருட்டு
பூமி வேகமாகச் சுற்றும். இதன் மூலம்
சூரியனால் இழுக்கப் படாமல் தப்பிக்கும்.
சேய்மைப் புள்ளியில் பூமி சூரியனை விட்டு
நன்கு விலகி இருக்கும். எனவே சூரியனின்
ஈர்ப்புச் சக்தியால் பூமியை இழுக்க முடியாது.
இதனால் கவலை இல்லாமல், பூமியானது
குறைவான வேகத்தில் சுற்றும்.
அண்மைப் புள்ளியில் (perihelion) பூமியின்
வேகம் = 30300 meter per second. அதாவது
1,08,000 கிமீ/மணி. அதாவது மணிக்கு
ஒரு லட்சத்து எட்டாயிரம் கிலோமீட்டர்.
சேய்மைப்புள்ளியில் (aphelion) பூமியின்
வேகம் 29,300 மீட்டர்/வினாடி. அதாவது
1,04,400 கிமீ/மணி. அதாவது மணிக்கு
ஒரு லட்சத்து நாலாயிரத்து நானூறு
கிலோமீட்டர்
---------------------------------------------------
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக