வியாழன், 10 அக்டோபர், 2024

 ஹரியானாவில் காங்கிரஸ் தோல்வி ஏன்?
-----------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
---------------------------------------------------------------
2024 அக்டோபரில் முடிவுகள் அறிவிக்கப்பட்ட 
ஹரியானா சட்டமன்றத் தேர்தலில் பாஜக வென்று 
ஆட்சியைத் தக்க வைத்துக் கூடாது. இது 
பாஜகவுக்கு ஹாட் டிரிக் வெற்றி ஆகும். கடந்த 
மூன்று தேர்தல்களாக பாஜக ஹரியானாவில் 
வெற்றி பேரருட் கொண்டே இருக்கிறது.

ஹரியானா சட்ட மன்றத்தில் 90 இடங்கள். 
இதில் 48 இடங்களில் பாஜக வென்றுள்ளது.
காங்கிரஸ் 37 இடங்களுடன் தோல்வியைத் 
தழுவியது. வாக்கு சதவீதம்: பாஜக = 39.94. 
காங்கிரஸ் = 39.09. வாக்கு சதவீதத்தைப் 
பொறுத்து பாஜக காங்கிரசை விட 0.83 சதவீதம் 
மட்டுமே அதிகம். இது ஒரு சதவீதத்திற்கும் குறைவு.
ஆம் ஆத்மியின் வாக்கு சதவீதம் = 1.79. ஆம் ஆத்மீ 
குறித்து பின்னர் பார்ப்போம்.
 
தேர்தலுக்கு முன்பே தாங்கள் வெற்றி பெறுவோம் 
என்ற மிதப்பில் இருந்தது காங்கிரஸ். எக்சிட் போல் 
முடிவுகளும் காங்கிரஸ் ஆட்சிதான் என்று கூறி 
இருந்தன. இதனால் எல்லாம் காங்கிரஸைக் கையில் 
பிடிக்க முடியவில்லை.

ஆனால் தேர்தல் முடிவுகள் காங்கிரசின் முகத்தில் 
கரியைப்  பூசின.காங்கிரசின் தலைக்கனம் 
தாளாமல் அதன் மண்டை வெடித்துச் சிதறியது.

காங்கிரசின் தோல்விக்கு காரணங்கள்:
------------------------------------------------------------ 
கடந்த மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் 
(2014, 2019, 2024) காங்கிரசுக்கு இரண்டு இலக்க
இடங்கள்தான். 543 இடங்களைக் கொண்ட இந்திய 
மக்களவையில் மூன்று இலக்க இடங்களைக் கூட 
காங்கிரசால் பெற இயலவில்லை. 2024 தேர்தலில் 
99 இடங்களை பெற்ற காங்கிரஸ் 99 சதம் 
இடங்களைப் பெற்று விட்ட மமதையுடன் திரிந்தது.

கூட்டணிக் கட்சிகளை காங்கிரஸ் மதிக்கவில்லை. 
கிள்ளுக் கீரையாகவே நடத்தியது. இண்டி கூட்டணியின் 
அங்கமான ஆம் ஆத்மி  கட்சி காங்கிரஸசிடம் 
10 இடங்களைக் கேட்டது. திமிர் பிடித்த காங்கிரஸ் 
தர மறுக்கவே, கெஜ்ரிவால் தனித்துப் போட்டியிட்டார்.

தேர்தலில் ஆம் ஆத்மி  வெற்றி பெறவில்லை. எனினும் 
அக்கட்சி காங்கிரசுக்கு ஒரு spoiler ஆக மாறியது.
1000 ஒட்டு மார்ஜினில் பாஜகவிடம் காங்கிரஸ் 
தோற்ற தொகுதிகளில் எல்லாம் ஆம் ஆத்மி 
ஓட்டைப் பிரித்து காங்கிரசின் தோல்விக்கு வழி 
வகுத்தது.

ஆம்ஆத்மி கட்சிக்கு 10 இடங்களை காங்கிரஸ் 
கொடுத்திருந்தால், இத்தேர்தலில் காங்கிரஸ் 
ஆட்ச்சியைப் பிடித்திருக்கக் கூடும். இல்லாவிடினும் 
பாஜகவை ஆட்சிக்கு வர விடாமல் தடுத்து   
தொங்கு சட்டமன்றம் என்ற திரிசங்கு நிலையை 
ஏற்படுத்தி இருக்கலாம்.

ஜாட் ஜாதி வெறி பிடித்த காங்கிரசின் பூபேந்தர் சிங் 
ஹோடாவும் கோமாளி ராகுல் காந்தியுமே 
காங்கிரசின் இத்தோல்விக்குப் பொறுப்பு.

தலைமைப் பண்பு உள்ளவராக ராகுல் காந்தியை 
மக்கள் கருதவில்லை. மோடியை எதிர்த்து நிற்கும்
ஆற்றல் எதுவும் ராகுலிடம் இல்லை என்பதே 
மக்களின் கருத்தாக இருக்கிறது.

மோடி கடும் உழைப்பாளி. நாளில் 18 மணி நேரம் 
உழைக்கக்கூடியவர் மோடி.ராகுல் காந்தி 
சீமைப்பசு, கோவில் காலை, இளவரசர்; மோடியின் 
உழைப்பில் 5 சதவீதம் கூட ராகுலிடம் கிடையாது.
ஹரியானாவில் போதிய அளவு பிரச்சாரக் 
கூட்டங்களில் ராகுல் காந்தி கலந்து கொள்ளவில்லை.

ஹரியானாவில் ஜாட் சாதியினர் 22 சதவீதம் உள்ளனர்.
மீதி 78 சதவீதம் ஜாட் அல்லாதவர்கள். காங்கிரசின் 
ஹூடா ஜாட் இனத்தவர். தேர்தலில் போட்டியிட 
ஹூடா ஜெட் சமூகத்தினருக்கே அதிக வாய்ப்பு 
அளித்தார்.

காங்கிரசின் ஆட்சி  என்பது முற்பட்ட சாதியான 
ஜாடடுக்களின் ஆதிக்கமே என்று மனம் கசந்த 
78 சதவீதம் உள்ள பிற சாதியினர் காங்கிரசைப்
புறக்கணித்து பாஜகவுக்கு வாய்ப்பளித்தனர்.

பாஜகவின் முதல்வர் நாயப் சிங் சைனி பிற்பட்ட 
வகுப்பைச் சேர்ந்தவர். மனோகர் லால் கட்டார் 
என்ற ஜாட் முதல்வரை ஓராண்டுக்கு முன்பே 
அகற்றி விட்டு பாஜக OBC இனத்தைச் சேர்ந்த 
சைனியை முதல்வர் ஆக்கியது. ஜாட்டுகளையும் 
பகைக்காமல் அதே நேரத்தில் ஜாட் அல்லாத 
78% உள்ள பிற சாதியினரின் அபிமானத்தையும் 
பெற்றிருந்தது பாஜக.இதனால்தான் ஹரியானாவின்  
ஜாட் தொகுதிகளாக அறியப்பட்ட  36 தொகுதிகளில் 
19 தொகுதிகளை பாஜக கைப்பற்றியது.

ஜாட், தலித், முஸ்லலிம் என்ற மூன்று பிரிவினரை
ஒன்றிணைத்து வாக்குகளை பெறலாம் என்ற 
காங்கிரசின் திட்டம் கைகூடவில்லை. ஜாதி 
ஆதிக்கம் நிறைந்த முற்பட்ட வகுப்பினரான 
ஜாட்டுகளும் தலித்துகளும் எப்படி ஓர் அணியில் 
ருக்க முடியும்? ஜாட்-தலித் ஒற்றுமை ஏற்படாத 
நிலையில் முஸ்லிம்களை எப்படி அந்த உருவாகாத 
அணியில் சேர்க்க முடியும்? இதெல்லாம் காங்கிரசின் 
படுதோல்வியை உறுதி செய்த காரணிகள்.

1) தலைமைப் பண்பற்ற உழைக்கத் தயங்குகின்ற 
ராகுல்காந்தியின் பலவீனமான தலைமை 
2) ஜாட் ஜாதி ஆதிக்கத்தை உறுதி செய்யும் 
காங்கிரசை 78% உள்ள ஜாட் அல்லாத பிற 
சாதியினர் ஏற்க மறுத்தது .
3) ஊழல் பெருச்சலையும் ஜாட் ஆதிக்க வெறியனும் 
ஆகிய பூபேந்தர் சிங் ஹூடாவின் ஆடசி மீண்டும் 
வந்து விடக்  கூடாது என்ற ஹரியானா வாக்காளர்களின் 
மனப்பாங்கு.
4) தலித் தலைவரும் முன்னாள் அமைச்சருமான 
செல்ஜா குமாரியை காங்கிரஸ் ஒதுக்கியது.
ஹூடா அவரைத் தொடர்ந்து புறக்கணித்து வந்தார்.
அவரும் கடைசி நேரத்தில் மட்டுமே தேர்தல் 
பிரச்ச்சாரத்தில் பங்கேற்றார்.                     
         
மேற்கூறிய காரணிகள் ஹரியானாவில் காங்கிரஸ் 
படுதோல்வி அடைந்ததற்குக் காரணமாக அமைத்தன.
******************************************************* 

கொண்டது.  பெற்றுக்    கடசியானது   ட்    சாளி   ட் 

போன தேர்தலில் வாங்கிய 10 சி, இந்தத் தேர்தலில் 
வாங்கிய 20 சி. இதெல்லாம் அவரைப் பேச விடுமா?
CPM விலை போன கடசி. வித்த மாட்டுக்கு விலை ஏது?

மமதை   ளை   ஆதரவாளர்   உயர்சாதி       ஐ   இ 

மக்களின் வெறுப்பைச் சம்பாதித்தவருமான  





 
 
  
     

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக