வியாழன், 10 அக்டோபர், 2024


திரிசூலமாக ரிலேட்டிவிட்டி தியரி!
-----------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
----------------------------------------------------
பொருட்களுக்கு அலகு வேண்டும். அப்போதுதான் 
அவற்றை அளவிட முடியும். அறிவியலின் தொடக்க 
காலத்தில் மூன்று அடிப்படை அலகுகள் 
 (Three fundamental units) மட்டுமே சொல்லப்பட்டன.
அவை: நீளம், நிறை, காலம் (Length, mass and time)

இன்று அறிவியலின் வளர்ச்சியில் Length, Mass 
and Time மட்டுமின்றி ஏழு அடிப்படை அலகுகள் 
கொண்டு வரப்பட்டுள்ளன. அவை:
1) நீளம் 
2) நிறை 
3) காலம் 
4) மின்னோட்டம் (electric current)
5) வெப்பநிலை (temperature)
6) ஒளியின் செறிவு (luminous intensity)
7) பொருளின் சாரம் (amount of substance)
இது எவ்வளவு mole இருக்கிறது என்று அளக்கப்படும்.        

1905ல் Special theory of Relativityஐ வெளியிட்டார் 
ஐன்ஸ்டின். இது ஒரு திரிசூலம் போல 
Length, Mass and Time  என்னும் மூன்று அடிப்படை 
அலகுகளையும் தாக்கியது. 

ஒளியின் வேகத்தை ஒட்டிய வேகத்தில் ஒரு பொருள் 
பயணம் செய்தால், அதன் நீளம் சுருங்கி விடும் 
என்கிறார் ஐன்ஸ்டின். 10 அடி நீளமுள்ள கம்பி 
ஒளியின் வேகத்தில் சென்றால் என்ன ஆகும்? 
அதன் நீளம் எட்டடியாகச் சுருங்கி விடும்.
இது Lenth contraction (நீளச்சுருக்கம்) எனப்படுகிறது.
நீளம் எவ்வளவு சுருங்கும் என்று துல்லியமாகக் 
கணக்கிட ஒரு ஃ பார்முலா உள்ளது.

Denominatorல் square root of 1 minus v squared 
divided by c squared என்று வருமே அந்த ஃபார்முலாதான்.

அடுத்து mass எனும் நிரையைப் பற்றிப் பார்ப்போம்.
அதீத வேகத்தில் அதாவது ஒளியின் வேகத்தை 
ஒட்டிய வேகத்தில் செல்லும்போது நிறை மாறும்; 
அதாவது அதிகரிக்கும்       

இங்கு கவனம் தேவை. Rest mass Relativistic mass 
என்ற இரண்டில் rest mass அதிகரிக்காது என்றும் 
relativistic massதான் அதிகரிக்கும் என்பதையும் புரிந்து 
கொள்ள வேண்டும். (Rest mass என்பது Newtonian mass
என்றும் Relativistic mass என்பது ஐன்ஸ்டினின் mass
என்றும் வாசகர்கள் அறிவார்கள் என்று நம்புகிறேன்).     .

ஆக இவ்வாறு ரிலேட்டிவிட்டி தியரி mass increaseஐ 
ஏற்படுத்துகிறது. அதாவது relativistic massஐ 
ஏற்படுத்துகிறது.

இறுதியாக காலத்தையும் தாக்கி விடுகிறது 
Special relativity. ஒளியின் வேகத்தை ஒட்டிய 
வேகத்தில் ஒருவர செல்லும்போது, அவரைப் 
பொறுத்தமட்டில் காலம் மிகவும் மெதுவாகச் 
செல்கிறது. இது Time dilation எனப்படுகிறது.

ஆக ரிலேட்டிவிட்டி தியரி  திரிசூலமாக மாறி 
Length mass and time என்ற மூன்றையும் பதம் 
பார்த்து விடுகிறது. Newtonian physics இங்கு 
செல்லுபடி ஆகவில்லை. அதாவது length mass 
and timeல் செல்லுபடி ஆகவில்லை.

இந்த மாற்றம் புரிகிறதா? இது புரிந்தால்தான் 
ரிலேட்டிவிட்டி தியரி புரியும்.
****************************************          

ஐன்ஸ்டினின் ரிலேட்டிவிட்டி தியரி திரிசூலமாக 
மாறி length, mass and time என்னும் அடிப்படைகளை 
எப்படித் தாக்குகிறது என்பதன் பட விளக்கம்.

படங்களை புரிந்து கொள்ள முயலுங்கள்.



   
  


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக