புதன், 9 அக்டோபர், 2024

 இயற்பியல் நோபல் பரிசு 2024.
----------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம் 
-------------------------------------------------
2024ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபல் பரிசு 
1) அமெரிக்க விஞ்ஞானியான பிரின்ஸ்டன் பல்கலை
 பேராசிரியர் ஜான் ஹாப்ஃபீல்டு (வயது 91) 
2) இங்கிலாந்தில் பிறந்து கனடாவில் வாழும் 
 விஞ்ஞானியான  டொரொன்டோ பல்கலை 
பேராசிரியர்  ஜியோஃப்ரி ஹிண்டன் (வயது 77)
ஆகிய இருவருக்கும் அறிவிக்கப் பட்டுள்ளது.

பரிசுத் தொகையான 11 மில்லியன் ஸ்வீடிஷ் 
குரரோனார், (இந்திய மதிப்பில் ரூ 9 கோடி 
சற்றுத் தோராயமாக)  இருவருக்கும் சமமாகப் 
பகிர்ந்தளிக்கப்படும். 

டிசம்பர் 10 ஆம் நாளில் சுவீடனில் நோபல் பரிசு 
வழங்கும் விழா நடைபெறும். அன்றுதான் நோபல் 
பரிசின் நிறுவனர் அல்பிரட் நோபலின் நினைவுநாள் 
ஆகும்.

பரிசு வழங்கும் விழா ராயல் சுவீடிஷ் அகாடமியயால் 
நேரடி ஒளிபரப்பு செய்யப்படும். டிவி சானல்கள்,
யூடியூப் மூலம் எவரும் நேரடியாகக் கேட்கலாம்;
பார்க்கலாம். கடந்த பல ஆண்டுகளாக நான் 
கேட்டு வருகிறேன். ஆங்கிலத்திலும் பேசுவார்கள்; 
அவர்களின் மொழியிலும் பேசுவார்கள்.

நேற்று (08-10-2024) இயற்பியல் நோபல் பரிசு 
அறிவிக்கப்படும்போது எனக்கு டயாலிசிஸ் 
நடந்து கொண்டிருந்தது. டயாலிசிஸ் மையத்தில் 
உள்ள டிவியில் செய்தி சானல் வைக்கச் சொல்லி 
இருந்தேன். படுத்திருந்தபடியே டிவி பார்த்தேன்.

டிசம்பர் 10ல் டிவி சானலில் விழாவை முழுமையாகப் 
பார்க்க வேண்டும் என்று எண்ணினேன். அன்று 
செவாய்க் கிழமை.அன்றும் எனக்கு டயாலிசிஸ்
நடைபெறும் நாள்.

நோபல் பரிசு பெற்ற விஞ்ஞானிகளை வணங்கி 
மகிழ்கிறேன். நோபல் பரிசுத் தொகை வெறும் 
9 கோடிமட்டும்தானா? பிக் பாஸ் நிகழ்ச்சியை 
நடத்திய நடிகர் கமல் ஹாசன் ஒரு நாள் 
நிகழ்ச்சிக்கு மட்டும் ரூ 12 கோடி சம்பளம் 
(for one episode only) பெற்றார் என்று தெரிய வருகிறது.

இன்று பிக் பாஸ் நடத்தும் கூத்தாடி விஜய் சேதுபதி 
என்பவன் ரூ 12 கோடி வாங்குவான். ஒரு சினிமாவில் 
நடிக்க கூத்தாடிப் பயல்கள் ஜோசப் விஜய் போன்றோர் 
ரூ 50 கோடி வாங்குவதாக அறிகிறேன்.

படிப்பறிவற்ற தற்குறிகளான கூத்தாடிப் பயல்கள் 
ரூ 50 கோடி வாங்கும்போது நோபல் பரிசு பெறும் 
விஞ்ஞானிகளுக்கு ஆளுக்கு நாலு கோடி ரூபாய்தானா?
இந்த நாடு உருப்படுமா? இந்த உலகம் உருப்படுமா?

ஆல்பிரட் போபால் நீடு வாழ்கிறார். நீடு வாழ்தல் 
என்பது இதுதான்.

பின்குறிப்பு:





ரிலேட்டிவிட்டி தியரியை அதன் Time dilationஐ 
அற்புதமாக விளக்கும் படம் இது. பாருங்கள்.
புரிந்து கொள்ளுங்கள்.

பூமியில் உள்ள கடிகாரம் எப்படி ஓடி இருக்கிறது?
விண்கலனில் உள்ள கடிகாரம் எப்படி ஓடி 
இருக்கிறது? இரண்டையும் பாருங்கள்.
இதுதான் time dilation.



   



இயற்பியல் நோபல் பரிசு 2024 பற்றிய எனது விளக்கக் 
கட்டுரை நாளை வெளியாகும்.




***********************************************     
         

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக