பாட்டரிகளின் அறிவியல்!
பகுதி-.1
---------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------
மின்சாரம் பற்றி நன்கறிந்தவர்களுக்கு மின்சாரம்
பற்றிய ஒரு பேருண்மை தெரிந்திருக்கும். மின்சாரத்தை
சேமித்து வைக்க முடியாது என்பதுதான் அது.
உணவு தானியங்களை டன் டன்னாகசேமிக்கிறோம்.
100 டன் அரிசி, 200 டன் கோதுமை, 100 டன் பருப்பு
என்று நம்மால் மாதக்கணக்கில் சேமித்து வைக்க
முடிகிறது.
இது போல 1000 மெகாவாட் மின சாரத்தை, 2000 மெகாவாட்
மின்சாரத்தை ஒரு மாத காலம் நம்மால் சேமிக்க முடியுமா?
முடியாது. தயாரிக்கப்பட்ட உடனேயே மின்சாரம்
நுகரப் பட்டுவிட வேண்டும் (immediate consumption
after production). இது மின்சாரத்தின் பண்பு.
இப்படி நான் சொன்ன உடனேயே புத்திக் கூர்மை உள்ள
திருநெல்வேலி சைவப் பிள்ளைமார் சமூகத்தை
அல்லது பிராமண சமூகத்தைச் சேர்ந்த CBSE ஒன்பதாம்
வகுப்புச் சிறுவன் குறுக்கிட்டு, "மின்சாரத்தைச்
சேமிக்க முடியும் சார், என் அறிவியல் பாடப்
புத்தகத்தில் சேமிப்பு மின்கலங்கள் (batteries)
என்று ஒரு பாடமே இருக்கிறது" என்பான்.
பையன் சொல்வதும் சரிதான். மின்சாரத்தை மிகக்
குறைந்த அளவில் மட்டுமே சேமிக்க முடியும். அப்படி
மிகக் குறைந்த அளவில் சேமிக்கப்பட்ட மின்சாரம்தான்
பாட்டரிகளில் கிடைக்கிறது.
1.5 வோல்ட், 3 வோல்ட், 6 வோல்ட், 12 வோல்ட், 24 வோல்ட்
என்றெல்லாம் பாட்டரிகள் கடைகளில் கிடைக்கின்றன.
ஸ்கூட்டர், கார் வைத்திருப்பவர்கள் அவற்றுக்கு உரிய
பாட்டரியை வாங்கிப் பயன்படுத்துவார்கள்.
சாதாரண சுவர்க் கடிகாரத்தில் பயன்படும் பாட்டரி
1.5 வோல்ட் பாட்டரி ஆகும்.
1991ல் நிகழ்ந்த ராஜிவ் காந்தி படுகொலையில்
பெல்ட் வெடிகுண்டை (belt bomb) வெடிக்க வைப்பதற்கு
பேரறிவாளன் வாங்கிய பாட்டரி 9 வோல்டதான்.
கோல்டன் பவர் 9 V பாட்டரிகள் இரண்டை வாங்கி
கொலையாளி சிவராசனுக்குக் கொடுத்தார்
9 வோல்ட் பாட்டரியின் மதிப்பு என்ன என்பது
பேரறிவாளனுக்குத் தெரியும். அவர் Electrical and
Electronicsல் டிப்ளமா படித்தவர்.
-----------------------தொடரும்---------------------------
*****************************************************
அடுத்து வருவன:
ஓம் விதி (Ohm's law), Alkaline battery, லிட்மஸ் பரிசோதனை.
.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக