EVM மீது காங்கிரசின் பொய்யான புகார்களும்
புகார்களின் முதுகெலும்பை முறிக்கும் பதில்களும்!
----------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------------
ஹரியானா சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் அக்டோபர்
2024ல் வெளியாயின. பாஜக வெற்றி பெற்று ஆட்சியைத்
தக்க வைத்துக் கொண்டது. பாஜகவுக்கு இது ஹாட்-டிரிக்
வெற்றி ஆகும்.2014, 2019, 2024 ஆகிய மூன்று
தேர்தல்களிலும் தொடர்ந்து வெற்றி பெற்று
வருகிறது பாஜக.
ஹரியானா தேர்தல் முடிவ்கள :
மொத்த இடம் = 90
பாஜக =48
காங்கிரஸ் = 37
லோக்தளம் = 3
பிறர் =2.
ஹரியானாவில் பாஜக வெற்றி பெற்ற தொகுதிகளில்
உள்ள EVMகளில் battery charge 99 சதவீதம் காட்டுவதாகவும்,
ஆனால் காங்கிரஸ் வெற்றி பெற்ற தொகுதிகளில் உள்ள
EVMகளில் Battery charge 70 சதவீதம் மட்டுமே காட்டுவதாகவும்
ஜெய்ராம் ரமேஷ் விசித்திரமான புகார்களை முன்வைத்தார்.
ஐஐடியில் படித்தவர் ஜெயராம் ரமேஷ். பாட்டரி குறித்த
அடிமுட்டாள்தனமான ஓர் கருத்தை நாணமே இன்றிச்
சொல்ல மனச்சாட்சியைக் கொன்றவர்களால்தான் முடியும்.
பாம்புக்கறி தின்கிற ஊரில் வாழ நேர்ந்தால்
நடுத்துண்டம் எனக்கு என்று சொல்லி விடுவதுதான்
நல்லது என்ற யதார்த்தத்தை உணர்ந்தவர் ஜெயராம்
ரமேஷ். காங்கிரசில் காலம் தள்ள வேண்டுமானால்
அறிவியலுக்கு எதிராகவும் தர்க்க சாஸ்திரத்துக்கு
எதிராகவும் நடந்து கொள்ள வேண்டும் என்று .
அறிந்தவர் ஜெயராம் ரமேஷ்.
ஹரியானாவில் 90 தொகுதிகளிலும் சேர்த்து 20,000
வாக்குச்சாவடிகள் (polling booths) இருக்கின்றன. இந்த
20,000 பூத்துகளையும் நேரில் சென்று பார்த்தோ அல்லது
ஏதேனும் சர்வே நடத்தியோ ஜெயராம் ரமேஷ்
இப்புகாரைக் கூறவில்லை. தெரிந்தே சொல்கிற
பொய்தானே இதற்கு ஏன் ஆதாரம் தர வேண்டும் என்று
ஜெயராம் ரமேஷ் நினைத்திருக்கக் கூடும்.
ஆரம்ப கால EVMகள் வெறும் 6 வோல்ட்டில் செயல்பட்டன.
VVPAT வந்ததுமே வோல்டேஜ் அதிகமுள்ள பாட்டரிகள்
தேவைப்பட்டன. தற்போதைய VVPATகள் 22.5 வோல்ட்
பாட்டரியில் இயங்குகின்றன. கண்ட்ரோல் யூனிட்டிலும்
பழைய 6 வோல்ட் பாட்டரி அகற்றப்பட்டு 7.5 வோல்ட்
கொண்ட புதிய பாட்டரி புகுத்தப் பட்டுள்ளது.
EVMகளி ல் பொருத்தப்படும் பாட்டரிகள் alkaline வகை
பாட்டரிகள் ஆகும். அவை acid வகை பாட்டரிகள் அல்ல.
மேலும் அவை பிரைமரி பேட்டரிகள் ஆகும். இவற்றை
recharge செய்ய இயலாது. செல்போனில் பயன்படும்
லித்தியம் அயான் பாட்டரிகள் secondary பாட்டரிகள் ஆகும்.
அவற்றை recharge செய்ய இயலும்.
தேர்தல் நடைபெறும் நாளுக்கு ஆறு நாட்கள் முன்னதாக
EVMகளில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தப் படும்.
அப்போது கூடவே புதிய பாட்ட ரியும் கண்ட்ரோல் யுனிட்டில்
பொருத்தப்படும். இது வேட்பாளர்களின் ஏஜெண்டுகள்
முன்னிலையில் செய்யப்படும். பொருத்தப்படும் புதிய
பாட்டரியில் வேபாளர்களின் ஏஜண்டுகளின்
கையொப்பம் பெறப்படும். வேட்பாளர்களின்
ஏஜண்டுகளுக்குத் தெரியாமலோ அவர்களின் கையொப்பம்
பெறாமலோ பாட்டரிகளைப் பொருத்தவோ, மாற்றவோ
அகற்றவோ முடியாது.
எனவே EVMகளில் பாட்டரிகள் மாற்றப் பட்டிருக்கலாம்
என்கிற காங்கிரசின் ஐயம் வெறும் மனப்பிராந்தியே
என்பது உறுதி செய்யப் படுகிறது.
பாட்டரியை மாற்றுவதற்கான தேவை எப்போதெல்லாம்
ஏற்படும்? இதை அறிவது எப்படி? பயன்படுத்தப் பயன்படுத்த
பாட்டரிகளின் சார்ஜும் கூடவே வோல்டேஜும்
குறைந்து கொண்டே வரும். 22.5 வோல்ட் கொண்ட
VVPATயின் பாட்டரி 10 வோல்ட் என்று குறைந்து விட்டால்
அதை மாற்ற வேண்டும். அதற்கான change the battery
என்ற அறிவிப்பு display unitல் வரும். அப்போது
வேட்பாளர்களின் ஏஜெண்டுகள் முன்னிலையில்
புதிய பாட்டரி பொருத்தப்படும்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரின்போது பேஜர்கள் வெடித்தன.
பேட்டரிகள் மூலம் பேஜர்கள் வெடிக்க வைக்கப் பட்டன.
பேஜர்களை வெடிக்க வைத்தது போல EVMகளையும்
பாட்டரிகள் மூலம் வெடிக்க வைக்க முடியும் என்னும்
காங்கிரசின் கருத்து தற்குறித் தனமானது. பேஜர்கள்
வலைப்பின்னலுடன் இணைக்கப் பட்டவை
(network connected) .எனவே அவற்றை ஹேக் பண்ண முடியும்.
ஆனால் EVMகள் stand alone வகையைச் சேர்ந்தவை.
எந்த நெட்வொர்க்குடனும் இணைக்கப் படாதவை.
இவற்றை ஹேக் பண்ணவோ வெடிக்க வைக்கவோ
எவராலும் இயலாது.
தொடர்ந்த தோல்வி காரணமாக ராகுல் காந்திக்கு
புத்தி பேதலித்துக் கொண்டே வருகிறது. எல்லாம்
சிவமயம் என்பது போல எல்லாம் பயமயம் என்றாகி
விட்டது அவருக்கு. பேஜர் வெடித்தது போல, EVM
வெடித்து விடும் என்ற பயம். EVMகளின் பாட்டரிகளில்
சார்ஜ் குறைந்து காங்கிரஸ் தோற்று விடுமோ
என்ற பயம்.
காங்கிரசின் புகார்களில் உண்மையில்லை என்பதை
விடுங்கள்! இவ்வளவு பைத்தியக்காரத் தனமாகவா
புகார் கொடுப்பது? காங்கிரசின் கூட்டணிக் கட்சிகளே
காங்கிரசின் புகார்களை ஏற்கவில்லை!
இந்தப் புகார்களில் என்ன லாபம்? இவற்றால் காங்கிரஸ்
அடைந்த ஆதாயம் என்ன? ராகுல் காந்தி ஒரு கோமாளி
என்று நிரூபிப்பதற்கு பய்னபடுவதல்லாமல் இவற்றால்
என்ன பயன்?
********************************************************
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக