புதன், 15 ஏப்ரல், 2020

தை யா..? சித்திரையா..?
ஒவ்வொறு வருட ஏப்ரல் மாதம் இச்சர்ச்சை எழும்.
எது தமிழர் புத்தாண்டு.?
தை 1...? சித்திரை 1..?
நிறையவே கருத்து விவாதங்கள், தரவுகள், சூரியவட்டம், வியாழ வட்டம், இராசி, சக்கரம், சங்க இலக்கியத்தில் தொடங்கி சமூக நிலை வரை ஆய்வு செய்து நிறையவே பதிவுகள் வெளிவந்தன..
இந் நிகழ்வு குறித்து ஒரே ஒரு விளக்கம் மட்டும்..
சித்திரையை தமிழ் புத்தாண்டாக ஏற்க எதிர்ப்பவர்கள் வைக்கும் முதல் காரணம்..
பிரபவ - அட்சய வரை உள்ள தமிழ் ஆண்டுகள் தமிழில் இல்லையே.. சமஸ்க்ருதம்தானே..
என்று சொல்லி ஒரு ஆபாசக் கதையும் கையோடு எடுத்து வருவார்கள்..
நாரதரும், கிருஷ்ணரும் கூடி பெற்ற பிள்ளைகள்தான் இந்த அறுபது வருடங்கள் என்பார்கள். இந்த ஆபாசத்தையா தமிழ் வருடம் என்பது..? என்று வலுவாகக் குரல் குடுக்கிறார்கள்.
இந்தக் கதை எங்குள்ளது..?
அபிதான சிந்தாமணி என்னும் இலக்கிய கலைக் களஞ்சிய நூலில் உள்ளது.
1910 ல் முதல் பதிப்பாக ஆ.சிங்காரவேலு முதலியார் என்பவரால் அபிதான சிந்தாமணி பதிப்பிக்கப்பட்டது. அப்போது இக்கதை அந்த நூலில் இல்லை. அவரது மகனால் மீண்டும் 1934 ஆம் ஆண்டு மீண்டும் பதிப்பிக்கப்பட்டது.. அப்பதிப்பில் இக்கதை சேர்ந்தது.17 ஆம் நூற்றாண்டைச்சேர்ந்த தேவி பாகவதம், நாரதர் புராணம் என்ற நூல்களில் இருந்த கதை என்று குறிப்பிட்டார்கள்..
அதாவது 17 ம் நூற்றாண்டுக்குப் பின்தான் இக்கதை எழுதப்படுகிறது. அது 1934 இல்தான் அனைவருக்கும் சொல்லப்படுகிறது..
ஆனால்..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள ஆண்டுகள் எப்போதிருந்து நம்மிடையே வழக்கத்தில் உள்ளன.?
வராகமிகிரர் என்பவர் கி.பி. 5 ம் நூற்றாண்டைச் சேர்ந்தவர். மிகச்சிறந்த கணிதவியல், வாணவியல், ஜோதிட அறிஞர்.. இவர் எழுதிய பிருகத் ஜாதகம் என்னும் நூலில் இந்த 60 ஆண்டு விபரங்கள்
உள்ளன..
தமிழகத்தின் மிகப் பழம்பெறும் சித்தர் போகர். இவரது சீடர் புலிப்பாணி என்பவர். இவர் எழுதிய புலிப்பாணி ஜோதிடம் என்னும் நூலில் இவ்வாண்டுக் குறிப்புகள் உள்ளது.
இடைக்காடர் என்ற இடைக்காட்டுச் சித்தர் 60 தமிழ் ஆண்டு வெண்பா என்று ஒவ்வொறு ஆண்டுக்கும் ஒவ்வொறு வெண்பா எழுதியுள்ளார்..
ஆக..
இந்த பிரபவ முதல் அட்சய வரை உள்ள வருடங்கள் தமிழ் பாரம்பரிய ஜோதிட வாணவியல் கணித பயன்பாட்டில் இருந்தது..
இருக்கிகறது.
நேற்று எழுதி, இன்று ஒரு கதையைக் கூறி ..
ஆயிரமாயிரம் ஆண்டு பாரம்பரியத்தை வீழ்த்த இயலாது..
அன்புடன்
மா.மாரிராஜன்..





Interstellar
-----------
ஒரு பேரிடர் சூழலில் இப்போது வாழ்ந்துக் கொண்டிருக்கிறோம். இச்சமயத்தில் Interstellar படம் பார்த்ததில்.. மனித ஆற்றலின் மீதும் , இயற்கையின் மீதும் அபார நம்பிக்கை ஏற்பட்டு மனதின் அழுத்தம் குறைந்ததென்றால் அது மிகையல்ல.
Interstellar படத்தின் இயற்பியல் நுண்விவரங்களை எழுத தனித்தனியாக 10 பதிவுகள் வேண்டும். முக்கிய இயற்பியல் விவரங்கள் , கதை , படத்தின் தாத்பரியம் , திரைமொழி குறித்த எனது உணர்வுகளை பகிர்ந்துள்ளேன்.
Interstellar
--------
கதை
---
நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கும் கொரோனா பேரிடரை விட 100 மடங்கு அபாயகரமான கட்டத்தை பூமி ’இண்டர்ஸ்டெல்லார் ‘ படத்தில் சந்தித்துக் கொண்டிருக்கிறது. பூமி வாழத் தகுதியற்ற ஒரு கோளாக ஆகிக் கொண்டிருக்கிறது. பூமியின் வளிமண்டலத்தில் ஆக்சிஜன் குறைந்து நைட்ரஜன் வாயு அதிகமாயிருக்கிறது. இருக்கும் கொஞ்சம் ஆக்சிஜனை சுவாசித்து வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் பூமி மக்கள். பூமியின் கடைசி மனித தலைமுறை இதுதானோ என்ற அச்சம் மேலோங்கி இருக்கிறது.
பூமி மனிதர்கள் சுவாசிக்க முடியாமல் மடிந்துப் போகக் கூடும் என்ற நிலையில் , சிறந்த விண்கப்பல் பைலட்டான கூப்பரை அவர்கள் தேர்ந்தெடுத்து நாசா விஞ்ஞானிகள் குழுவை சந்திக்குமாறு செய்கின்றனர். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . ஒரு புழுதிப்படலத்தில் வீட்டிற்குள் விழும் மண் துகள்களை பைனரி முறையில் டீகோட் செய்ததில், கூப்பருக்கு ஒரு location கிடைத்து.. இவ்வாறாகா நாசாவை அடைகிறான் கூப்பர்.
நாசா விஞ்ஞானிகள் குழு மனித இனத்தைக் காப்பாற்றுவதற்கான திட்டம் தீட்டிக் கொண்டிருக்கின்றனர். பூமியிலிருந்து மனித சமூகத்தை விண்கப்பல் மூலமாக புதியதொரு கோளுக்கு கொண்டு செல்ல வேண்டுமென்பது திட்டம் A. ஆனால் , பூமியின் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு அவ்வளவு மனிதர்களை விண்வெளிக்கு கொண்டு செல்வதென்பது இயலாத காரியம். எனவே பூமியின் ஈர்ப்பு விசையையே அதற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும். அதற்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வேண்டும்.
பூமியில் மனிதர்கள் அழிந்தாலும் , பிரபஞ்சத்தில் வேறு ஏதேனும் ஒரு கோளில் மனித இனம் தழைத்து விட வேண்டும் . ஆயிரக்கணககான மனித கருமுட்டைகளை அங்கு வள்ர்த்து மனித இனம் புதிய கோளை தனது வீடாக்க வேண்டுமென்பது திட்டம் B.
இதற்காக வேறொரு கேலக்சியில் விஞ்ஞானிகள் குழு ஒன்று வாழத்தகுந்த கோளை ஆராய்ந்துக் செய்தி அனுப்பிக் கொண்டிருக்கிறது. இந்த விண் பயண திட்டத்திற்கு தயங்கும் கூப்பர் பின்னர் சம்மதிக்கிறான்.
ஆரம்ப காட்சிகளிலேயே கூப்பரின் மகள் மர்ஃபியின் அறையில் புத்தக அலமாரியிலிருந்து புத்தகம் தானாக விழுகிறது. இதனை அமானுஷ்ய செயலென கூப்பரிடம் கூறுகிறாள் மர்ஃபி. அதனை மறுக்கிறான் கூப்பர். ஆனால் , புத்கம் விழுந்த செயலை morse முறையில் மர்ஃபி தீர்த்த போது அது STAY என்ற வார்த்தையாக வருகிறது.
இந்நிலையில் நாசாவின் மிஷனில் இணைந்துக் கொண்டு விண் பயணம் செய்யவிருப்பதாக மர்ஃபியிடம் கூப்பர் சொல்ல.. அதனை ஏற்றுக் கொள்ள மறுக்கிறாள் மர்ஃபி. STAY என்ற வார்தையை முன்வைத்து தந்தை போக வேண்டாமென அடம் பிடிக்கிறாள். பெரும் உணர்வுப் போராட்டங்களுக்கிடையே குடும்பத்திடமிருந்து விடைபெறுகிறான் கூப்பர். மர்ஃபிக்கு ஒரு வாட்சை தந்து விட்டு செல்கிறான்.
விண் பயணம் ஆரம்பிக்கிறது. கூப்பர் , பிராண்ட் , டார்ஸ் ரோபோ , ரோம் உள்ளிட்ட அஸ்ட்ரானெட் குழு Endurance இல் ( விண் கப்பல் ) 2 வருட பயணத்துக்குப் பிறகு சனி கோளின் அருகே அவர்கள் உருவாக்கியிருக்கும் worm hole ஐ அடைகிறார்கள். ( அவர்கள் என்பவர்கள் யார் ? ) . கூப்பர் குழுவினரின் விண் கப்பலில் ஆயிரக்கணக்கான மனித கருமுட்டைகளும் உடன் வருகின்றன.
Worm hole என்பது விண்வெளியை தனது ஈர்ப்பு விசையால் வளைத்து.. விண்வெளியின் தூரத்தை குறைக்கும் ஒரு செயற்கை பாதை. Worm hole இற்குள் பயணம் தொடர்கிறது. இப்பயணத்தின் போது காலத்திற்கிடையேயான சந்திப்பு நடக்கிறது. அஸ்ட்ரேனெட் பிராண்ட் வேறொரு காலத்தை சந்தித்து கை கொடுக்கிறாள்.
பின்னர் , வார்ம் ஹோலின் வழியே வேறொரு கேலக்சியை அடைகிறார்கள் கூப்பர் குழுவினர். ஏற்கனவே அந்த கேலக்சியில் சில கோள்களை ஆராயச் சென்ற நாசா விஞ்ஞானிகள் அனுப்பியத் தகவலின் அடிப்படையில் 2 கோள்களை ஆராய்கின்றனர் கூப்பர் குழுவினர். ஆனால் , இரண்டும் கோளிலிலுமே அவர்களுக்கு நல்ல செய்தி இல்லை.
கூப்பர் குழுவினர் முதலில் இறங்கும் நீர் கோளின் ஒரு மணி நேரம் என்பது பூமியின் 7 வருடத்திற்கு சமம். ஆம், மாமேதை ஐன்ஸ்ட்டீன் அவர்கள் சொன்ன relativity. காலம் சார்புத் தன்மை கொண்டது. ஒரு கோளின் நிறை , தனது நட்சத்திலிருந்து அது கொண்டுள்ள தூரம் இவைகளால் ஒரு கோளின் கால அளவு தீர்மானிக்கபப்டுகின்றது.
பூமியின் நிறை ( mass ), ஈர்ப்பு விசை , சூரியனிலிருந்து அதன் தொலைவு போன்ற தன்மைகளால் பூமியின் காலமானது ஒரு நாளைக்கு 24 மணி நேரமாக இருக்கிறது. இதே, சூரியனிலிருந்து பூமியை விட வெகு தொலைவில் இருக்கும் வியாழன் கோளில் ஒரு நாள் என்பது 10 மணி நேரம் . சனி கோளின் ஒரு நாள் என்பது 11 மணி நேரம் . இதே வெள்ளி கோளில் ஒரு நாள் என்பது பூமி கணக்கில் 116 நாள். வெறும் space இல் உள்ளப்டியே காலம் மிக மெதுவாக நகரும்.
இப்போது புதிய கேலக்சியின் நீர் கோளில் இறங்கும் கூப்பர் குழுவினர் அங்கு மூன்று மணி நேர போராட்டத்திற்குப் பிறகு , குழுவில் ஒருவரை இழந்த நிலையில் திரும்பி Endurance க்கு வருகின்றனர். நீர்க் கோளில் 3 மணி நேரம் காலத்தை செலவிட்டதால் பூமி காலத்தின் படி 21 வருடங்கள் கழித்து விண் கப்பலுக்கு திரும்பி வருகின்றனர். விண்கப்பலில் இருக்கும் ரோம் மத்திய வயதுக்காரனாக மாறி விட்டிருக்கிறான்.
இந்த இடைவெளியில் தனது மகனிடமிருந்து வந்திருக்கும் தகவல்களை பார்க்கிறான் கூப்பர். மகன் பெரியவனாகி தனக்கு ஒரு பேரக் குழந்தையை பெற்றுக் கொடுத்திருப்பது , தனது தந்தை இறந்து விட்டிருப்பது உள்ளிட்ட செய்திகளையும் அறிந்து வாழ்க்கையின் முக்கிய கட்டங்களைத் தான் தொலைத்திருப்பதை உணர்ந்து அழுகிறான் கூப்பர்.
இதற்கிடையே நாசாவில் தலைமை விஞ்ஞானி இறந்த செய்தியை வீடியோ மெசேஜாக சொல்லுகிறாள் மர்ஃபி. திட்டம் A என்பது எப்போதும் சாத்தியமில்லை. திட்டம் B யை செயல்படுத்துவதற்காகவே கூப்பர் குழுவினர் விண்பயணம் மேற்கொண்டிருப்பதையும் கூறுகிறாள். தலைமை விஞ்ஞானி இதனை மறைத்து விட்டதையும் , கூப்பர் குழுவினன் பூமி மனிதர்களை காப்பற்றப் போவதில்லை என்றும் கூறுகிறாள்.
ஆனால் , இச்செய்தியை பார்க்கும் முன்னரே கூப்பர் குழுவினர் மற்றொரு ஐஸ் கோளில் சென்று விட்டிருக்கின்றனர். விஞ்ஞானி மன் தங்களை ஏமாற்றி விட்டதை உணர்கின்றனர். Endurance திரும்பும் போராட்டத்தில் கூப்பர் தரப்பின் விஞ்ஞானி ரோம் மற்றும் பொய் கூறிய விஞ்ஞானி மன் ஆகியோர் மரணம் அடைகின்றனர்.
விண்கப்பல் திரும்பி மர்ஃபி கூறிய செய்தியை அறியும் கூப்பர் அதிர்கிறான்.
இப்போது கூப்பர் , பிராண்ட் மற்றும் ரோபோ டார்ஸ் ஆகிய மூவர் மட்டுமே இருக்கிறார்கள். கர்காங்ட்டுவா என்ற மாபெரும் கருந்துளையின் அருகில் இருக்கும் ஒரு கோளை ஆராய அவர்கள் இப்போது விரைகிறார்கள். கருந்துளையின் வெளியே அதன் Event Horizon இல் ( எல்லைகளில் ) இருக்கும் ஈர்ப்பு விசையை எதிர்கொண்டு என்டியூரன்ஸ் பயணிக்கும் பொருட்டு, எடைகளை குறைக்க திட்டமிடுகிறான் கூப்பர்.
இதற்கிடையே கூப்பருக்கு மற்றமொரு திட்டமும் இருக்கிறது. அது கருந்துளை என்பது பிரபஞ்சத்தின் ஒளி , வெளி , காலம் அனைத்தையும் வளைக்கவல்லது. அப்படியெனில் கருந்துளைக்குள் செல்வதால் தான் இழந்த காலத்திற்குள் போய் வரலாற்றை மாற்றி விடலாமா ? தன் மகளுடனேயே தங்கி விடலாமா என்று நினைக்கிறான் கூப்பர்.
அதன்படி ரோபோ டார்ஸ் முதலில் தன்னை விண்கப்பலில் இருந்து துண்டித்துக் கொண்டு கரந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்க , தொடர்ந்து கூப்பரும் தன்னைத் துண்டித்துக் கொண்டு கருந்துளையின் ஈர்ப்பிற்குள் சிக்குகிறான். பிராண்ட் கன்ணீருடன் கூப்பரை பிரிந்து பயணத்தை தொடர்கிறாள். தான் மானசீகமாக காதலித்திருக்கும் விஞ்ஞானி எட்மாண்ட் ஆராய்ச்சி செய்த கோளை நோக்கி பயணிக்கிறாள் பிராண்ட்.
கருந்துளைக்குள் சிக்கும் எந்தப் பொருளும் அந்தப் பொருளாக இருக்க முடியாது. கருந்துளையின் அதிபயங்கர ஈர்ப்பு விசை எந்த matter வடிவத்தையும் இல்லாமல் ஆக்கி விடும். ஏன் , ஒளியையும் , வெளியையும் கூட வளைக்கவல்லது அல்லவா கருந்துளை !!
இந்நிலையில் கருந்துளைக்குள் இறங்கிக் கொண்டிருக்கிறான் கூப்பர். அவன் கருந்துளையின் ஆழ் பகுதியை அடையுமுன்.. ஒரு டெசராக்ட் அவனை தடுத்து காப்பாற்றுகிறது. அந்த டெசராக்ட் அவர்களால் உருவாக்கப்பட்டது. ( அவர்கள் என்பவர் யார் ? ) . இங்கு டெசராக்ட் கூப்பர் வீட்டில் மர்ஃபி அறையின் புத்தக அலமாரி வடிவில் இருக்கிறது.
அந்த டெசராக்ட்டில் நிகழ்கிறது ஓர் அற்புதம். கூப்பர் அங்கு காலத்தை ஒரு matter dimension ஆக , அதாவது ஒரு பருப்பொருள் பரிமாணமாக பார்க்கிறான். அவனது கடந்த காலம் ஒரு பருப்பொருள் பரிமாணமாக அவன் முன் நிற்கிறது. கடந்த காலத்தோடு தொடர்புக் கொள்ள முயற்சிக்கிறான் கூப்பர். தான் வெளியேறுவதை தடுக்குமாறு கருந்துளைக்குள் இருந்து மர்ஃபியிடம் மன்றாடுகிறான். காலத்தோடு முட்டுகிறான் மோதுகிறான். அந்த முயற்சியில் தான் முன்பு புத்தகம் விழுந்தது. STAY என்ற வார்த்தையை சொல்லியது.
இதற்கிடையே தனது தந்தை தங்களை கைவிட்டுசென்றதாக எண்ணிக் கொண்டிருக்கும் மர்ஃபி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் முயற்சியில் இருக்கிறாள். தனது அறையில் புத்தக அலமாரியில் அப்பா கொடுத்த வாட்சை வைத்துக் கொண்டு சிந்தித்துக் கொண்டிருக்கிறாள் மர்ஃபி.
இதற்கிடையில் கருந்துளையின் டெசராக்ட்டில் இருக்கும் கூப்பர் கடந்த காலத்தை மாற்றுவதற்காக அவர்கள் நம்மை அனுப்பி வைக்கவில்லை என்பதை உணர்கிறான். தன் மகளுக்கு ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க உதவி செய்வது தான் இப்போது முடியும் என்பதையும் உணர்கிறான்.
பிரபஞ்சத்தின் பிரம்மாண்ட கால , தூர அளவுகள் கடந்து தன் மகளுக்கும் தனக்குமான அன்பின் மூலம் மர்ஃபிக்கு தான் உதவுவதை புரிய வைக்க முடியும் என்பதை உணர்கிறான். அந்த வகையில் காலங்களுக்கிடையிலான தகவல் பரிமாற்றம் வேறொரு பரிமாணத்தில் நடக்கிறது. முன்பு புத்தகத்தை விழ வைத்த அமானுஷ்யமும் , இப்போது கடிகாரத்தின் வழி சங்கேத மொழியில் பேசுவதும் வேறு யாருமல்ல தனது தந்தை தான் என்பதை உணர்கிறாள் மர்ஃபி. My dad is the ghost ந்று உணர்ந்த நிலையில் வாட்ச்சில் நிகழும் மாற்றத்தை வைத்து , அதனை டீகோட் செய்துஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கிறாள் மர்ஃபி.
இந்நிலையில் 'அவர்கள் என்பவர்கள் யார்' ? என்று உணர்கிறான் கூப்பர். அவர்கள் என்பவர்கள் கடவுளோ , ஏலியன்களோ அல்ல. அவர்கள் என்பவர்கள் தமது சந்ததியான எதிர்கால மனிதர்கள் என்பதை உணர்கிறான் கூப்பர்.
நான் எப்படி என் மகளோடு காலம் கடந்த தொடர்பு கொண்டேனோ , அதே போல் தான் எதிர்கால மனிதர்கள் நம்முடன் இப்போது தொடர்புக் கொள்கிறார்கள். என்று ரோபோ டார்சுக்கு விளக்குகிறான் கூப்பர்.
எதிர்கால மனிதர்கள் மனித இனத்தை காப்பாற்றுவதற்கு தன்னைத் தேர்ந்தெடுக்கவில்லை , தன் மகள் மர்ஃபியைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்பதையும் டார்சிடம் விளக்குகிறான் கூப்பர்.
இதனையடுத்து நோக்கம் நிறைவேறிய நிலையில் கால டெசராக்ட் சரிகிறது. கூப்பர் கருந்துளையின் வழியே மீண்டும் கடந்த கால பாதையில் பயணிக்கிறான். அப்போது கடந்த காலத்தில் விண்கப்பலில் தன்னுடன் வந்துக் கொண்டிருக்கும் பிராண்ட்டிடம் கைக் குலுக்குகிறான். கருந்துளை மீண்டும் நமது Milkyway கேலக்சியோடு இணைகிறது. காலங்களுக்கிடையேயான சந்திப்பு இப்போது கூப்பரின் point of view வில் நிகழ்கிறது.
கூப்பர் மயக்க நிலைக்கு செல்கிறான். பின்னர் கண்விழிக்கையில்.. ஒரு மருத்துவமனையில் பாதுகாப்பாக இருக்கிறான். அவர்கள் அதாவது எதிர்கால மனிதர்கள் கூப்பரை கருந்துளையினுள்ளிருந்து பாதுகாப்பாக வழியனுப்பி வைத்துள்ளனர்.
கூப்பர் கண்விழிக்கும் கோளானது ஒரு துணைக்கோள். சனி கோளை வட்டமிட்டுக் கொண்டிருக்கும் ஒரு துணைக்கோள். அங்கு தனது மகள் பெயரிலான ஒரு நிலையத்தில் கண் விழிக்கிறான் கூப்பர். ஈர்ப்பு விசை புதிரை விடுவித்து விட்டதால்.. மனிதர்கள் அந்தக் கோளின் ஒரு பகுதியை தங்கள் வசதிக்கேற்ற ஒரு ஆர்க் வடிவில் வளைத்திருக்கிறார்கள்.
கிளம்பும் போதிருந்த அதே வயதில் இருக்கும் கூப்பர், தற்போது 120 வயதைத் தொட்டிருக்கும் தன் மகளை சந்திக்கிறான். அவளது வேண்டுகோளின் பேரில் கர்காங்ட்டுவா கருந்துளையின் அருகே எட்மாண்ட் கோளில் தன்னந்தனியாக ஆய்வுகளை மேற்கொண்டிருக்கும் பிராண்ட்டை சந்திக்க புறப்படுகிறான் கூப்பர். மீண்டும் விண்பயணம் தொடர்கிறது.
வாழத் தகுதியுள்ள இடமான எட்மாண்ட் கோளில் மனித இனத்தின் அடையாளமாக ஒரு நிலையத்தை நிறுவி ஆராய்ச்சிகளை தொடர்ந்துக் கொண்டிருக்கிறாள் பிராண்ட். பூமி கைவிட்ட போதிலும் மனித இனம் பிரபஞ்சத்தில் இப்போது பிழைத்துக் கொண்டுள்ளது.
படத்தின் தாத்பர்யம்
------
இயற்கையின் எந்த பரிமாணத்தையும் விடவும் மிக வலிமையானது உயிர்க்ளுக்கிடையேயான அன்பு என்பதே படத்தின் தாத்பர்யமாக நான் உணர்கிறேன்.
கூப்பருக்கும் - மர்ஃபிக்குமான தந்தை மகள் பாசம் தான் காலங்கள், தூரங்கள் கடந்து அவர்களுக்குள்ளான கருத்து பரிமாற்றத்தை ஏற்படுத்தி , ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்க வைத்து மனித இனத்தைக் காப்பாற்றியது.
விஞ்ஞானி எட்மாண்ட் மீது விஞ்ஞானி பிராண்ட் கொண்டுள்ள காதலால் தான்.. 2 கோள்கள் கை விட்ட போதிலும் எட்மாண்ட் கோளை நம்பி தொடர்ந்து பயணத்தை மேற்கொண்டு இப்போது மனிதர்கள் வாழ வேறொரு கோளை கண்டுபிடித்திருக்கிறாள்.
நேசம் பிரபஞ்சத்தின் எந்த பரிமாணத்தையும் விட வலிமையானது, எந்த இயற்பியல் சமூகவியல் அளவீடுகளுக்குள்ளும் வைக்க முடியாத இயற்கையே அதிசயிக்கும் ஒரு பரிமாணம் நேசம். பூமி உயிர்கள் தங்களுக்கிடையே உண்டு செய்துக் கொண்ட நேசம்.
ஆம் நேசமே மனித இனத்தை பிரபஞ்சத்தின் வலிமையுள்ள இனமாக மாற்றியது. அந்த நேசத்தின் வடிவம் தான் சமூகம்.
திரைக்கதை , திரைமொழி - நோலன் தனித்துவங்கள்
----------
சமகால மனிதர்களின் பிழைத்தலில் தான் எதிர்கால மனிதர்கள் வந்திருக்கக் கூடும். சமகால மனிதர்களை எதிர்கால மனிதர்கள் காப்பாற்றினார்களெனில்... அந்த எதிர்கால மனிதர்களை யார் காப்பாற்றி இருப்பார்கள் ? எதிர்கால மனிதர்கள் என்பது தான் விடை. அந்த எதிர்கால மனிதர்களை ? மீண்டும் எதிர்கால மனிதர்கள் என்பதே விடை. இந்த முடிவற்ற சுழல் போய்க் கொண்டே இருப்பது ஒரு கிறிஸ்ட்டோஃபர் நோலன் தனித்துவம் எனலாம்.
கிட்டத்தட்ட இன்ஸ்செப்ஷனிலும் படத்திலும் , கனவுக்குள் கனவுக்குள் கனவுக்குள் என ஒரு முடிவற்ற சுழல் கான்செப்ட்டை நோலன் செய்திருப்பார்.
அதே போல் , இன்செப்ஷனில் ஆர்க்கிடெக்ட் மாணவியும் , டிகார்ப்பியோவும் தங்கள் கனவுகளில்.. கற்பனையாக நகர அமைப்பினை ஆர்க் வடிவத்தில் மாற்றி கொண்டு வந்து அமைக்கும் விஷயத்தை இண்ட்டர்ஸ்டெல்லாரில் மனிதர்கள் புலம் பெயர்ந்த புதிய கோளின் நகர அமைப்பில் கையாண்டிருப்பார் நோலன்.
அதே போல் , வேறொரு கேலக்சி கோள்களில் விஞ்ஞானிகள் குழுவினரின் போராட்டத்தையும் , பூமியில் பிழைக்க முடியாத சூழலில் மர்ஃபி உள்ளிட்டவர்களின் போராட்டத்தையும் Parallel காட்சிகளாக அமைத்திருப்பார் நோலன்.
இன்செப்ஷனிலும் இதே போல் 3 கனவுக் காட்சிகளையும் parallel ஆக அமைத்திருப்பார்.
எல்லாவற்றையும் விட interstellar இன் முத்தாய்ப்பே கருந்துளையினுள் நடக்கும் காட்சிகள் தான். இந்த க்ளைமேக்ஸ் சீக்வென்சில் முறையே 3 காலங்கள் கையாளப்படுகிறது. ஒன்று , அலமாரியிலிருந்து புத்தகம் விழுதலை அமானுஷ்யமாக கருதும் மர்ஃபியின் பால்ய வயது காலம் , இரண்டு, விஞ்ஞானி மர்ஃபி தனது அறையில் புதிரை விடுவிக்கும் காலம் , மூன்று , கருந்துளையின் டெசராக்ட்டினுள் பருப்பொருள் பரிமாணமாக இருக்கும் இவ்விரண்டு காலத்தினூடும் தொடர்புக் கொள்ள முயற்சிக்கும் கூப்பரின் காலம்.
இந்த 3 கால காட்சியில் ஒரு சுவாரஸ்யமென்னவெனில்... மர்ஃபியின் பால்ய வயது காலமானது கூப்பர் நேரில் வாழ்ந்த கடந்த காலம் , மர்ஃபியின் பால்ய வயது காலத்தை நமக்கு ஏற்கனவே காட்டிச சென்ற திரைக்கதை. மர்ஃபியின் யுவதி காலத்தையும் , கூப்பரின் கருந்துளை காலத்தையும் நிகழ்காலமாக நம்முன் நிறுத்துகிறது. ஆனால் , மர்ஃபி யுவதியாக ஈர்ப்பு விசை புதிரை விடுவிக்கும் காலமானதும் கடந்த காலம் தான். அதனால் தான் அது டெசராக்ட்டினுள் வளைக்கப்பட்டிருக்கிறது. அப்படியெனில் கடந்த முறை யார் மர்ஃபிக்கு புதிரை விடுவிக்க உதவியது ? இதே அவள் தந்தை கூப்பர் தான் .
மீண்டும் அதே முடிவற்ற சுழல். பிரபஞ்சவியலின் தன்மையே இந்த முடிவற்ற சுழல் தான் !!
விண்வெளியின் பெரு நிசப்தம் , முக்கியமான தருணங்களில் ஏற்படும் ஆச்சர்ய உணர்வு , வார்ம் ஹோலில் பயணிக்கும் போது ஏற்படும் உறைந்து போகச் செய்யும் உணர்வு , புதிய கேலக்சிக்கு சென்றடைந்த பின் ஏற்படும் அலாதியான ஆசுவாசம் , நீர்க் கோளில் ஒரு நீரலை அடிப்பதற்கு எடுத்துக் கொள்ளும் நேரம் கொடுக்கும் த்ரில் உணர்வு , விண்கலம் விண்கப்பலோடு dock கும் காட்சிகள் , திட்டம் A என்பதே பொய் என்று மர்ஃபி வீடியே மெசேஜில் கூறுகையில் . கூப்பர் குழுவினர் ஐஸ் கோளை நோக்கி பயணிக்கும் காட்சி , கருந்துளைக்குள் பயணம் ஆரம்பித்த பின் சுற்றத்தை மறக்கும் அளவு நம்மை உறைந்துப் போகச் செய்யும் உணர்வு. என ஒரு விண்பயணத்தின் போது மனித மனம் சந்திக்கும் ஆச்சர்ய உணர்வுகளை எல்லாம் தன் திரைமொழி இலாவகத்தால் துல்லியமாக கடத்தி இருப்பார் கிறிஸ்ட்டோபர் நோலன். ஒரு விண்பயணம் போய் விட்டு வந்த கிறக்கம் இன்னும் தீரவில்லை. ஒலியமைப்பு , படத்தொகுப்பு , CGI காட்சிகள் , பின்னனி இசை , அருமையான ஒளிப்பதிவு , அபார நடிப்புகள் என நோலன் மேஜிக்கிற்கு பின்பு எவ்வளவு உழைப்பு இருந்திருக்க வேண்டும் !!
நீர்க் கோளில் இருந்து அதிவேகமாக வெளியேறும் விண்கலம். அப்போது ஒலியமைப்பும் , இசையும் உச்ச பதட்டத்தில் இருக்கும். விண்வெளியை அடைந்தவுடன் சட்டென ஒரு Extreme wide shot இல் படு நிசப்தத்துடன் விண்கப்பல் நோக்கி சென்றுக் கொண்டிருக்கும் விண்கலம். இப்படியே தேர்ந்த திரைமொழியே படத்தின் அனைத்துக் காட்சிகளிலும் இருக்கும்.
க்ளைமேக்ஸ் சீக்வென்சில் மூன்று காலத்தின் தருணங்களையும் மிகச் கச்சிதமாக எடிட் செய்திருப்பது அசத்தலான திரை மேதைமை. இப்படி பலப் பல காட்சிகளை விவரித்துக் கொண்டே இருக்கலாம். ஆனால் , மிக நீண்ட பதிவாக விடும்.
மிக சிக்கலான கதையமைப்புகள் கொண்ட திரைக்கதையிலும் , திரைமொழியிலும் அபார மேதைமை இருந்தால் தான் இன்ஸ்செப்ஷன் , இண்ட்டர்ஸ்டெல்லார் போன்ற படங்களை உருவாக்கியிருக்க முடியும். கிறிஸ்ட்டோபஃர் நோலன் சமகாலத்தின் திரைமேதை என்றால் அது மிகையல்ல.
- அருண் பகத்
15 / 4 / 20
சீனா அழியப் போவது திண்ணம்!
கொரோனா பற்றிய உண்மைகளை மறைத்த சீனா
போர்க்குற்றம் புரிந்துள்ளது!
----------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------
விடுதலைப் புலிகளை அழித்ததில் இலங்கையானது
போர்க்குற்றம் புரிந்துள்ளது என்ற குற்றச்சாட்டின் மீது
விசாரணை நடந்து வருகிறது.

அதே போல, கொரோனா பற்றிய பல தகவல்களை
திட்டமிட்டே மறைத்து, உலக நாடுகளை ஏமாற்றிய
குற்றத்துக்காக சீனா மீது போர்க் குற்றம் போன்ற
குற்றம் சுமத்தப்பட்டு விசாரணை நடைபெறும்.

இந்தியாவானது ரூ 2 லட்சம் கோடி நஷ்ட ஈடு கேட்டு
சீனா மீது வழக்குத் தொடர வேண்டும்.

போர்க்குற்ற விசாரணையில் இலங்கையை உலக நாடுகள்
அனைத்தும் சீனா உட்பட சேர்ந்து பாதுகாக்கின்றன.
ஆனால் கொரோனா விசாரணையில் சீனாவைப்
பாதுகாக்க நாதி இருக்காது.

எப்படியும் இந்த ஆண்டே விசாரணை தொடங்கி விடும்
என்று எதிர்பார்க்கிறோம்.

மூன்று முன் குறிப்புகள்!
----------------------------------------
1) கொரோனா வைரஸை சீனாவே தனது ஆய்வகத்தில்
செயற்கையாகத் தயாரித்தது என்பது போன்ற
கேடுகெட்ட முட்டாள்தனத்துக்கு இங்கு இடமில்லை.

2) கொரோனா வைரஸ் என்பது ஒரு உயிரி ஆயுதம்
(bio weapon) என்றும் நடப்பது உயிரி யுத்தம் (bio war)
என்றும் பேசும் அடிமுட்டாள்தனங்களுக்கு இங்கு
இடமில்லை.  

3) சீனா ஒரு கம்யூனிஸ்ட் நாடாகவே இன்னமும் இருக்கிறது
என்னும் இழிந்த முட்டாள்தனத்தின் முதுகெலும்பை
குறிப்பது எமது பிரதான வேலை.

போல்ஷ்விக் கட்சியின் வெகுஜன அமைப்பான மஜஇக
(மக்கள் ஜனநாயக இளைஞர் கழகம்) சார்பாக
சீனா ஒரு ஏகாதிபத்திய நாடா என்ற நூல் வெளியிடப்
பட்டுள்ளது. அந்த நூலில் சீனா ஒரு ஏகாதிபத்திய நாடே
என்று ஆணித்தரமாக நிருவப் பட்டுள்ளது. இந்தப்
புத்தகத்தை இன்னும் படிக்காதவர்கள் தாராளமாகத்
தற்கொலை செய்து உயிரை விடலாம்.
***************************************************    





ஞாயிறு, 12 ஏப்ரல், 2020


What is the essence of Trotskyism?” Stalin asks in 1930, and he finds it consisting in the following: “The essence of Trotskyism consists, first of all, in the denial of the possibility of building Socialism in the U.S.S.R., with the forces of the working class and the peasantry of our country. What does this mean? It means that if, in the near future, help does not come in the form of a victorious world revolution, we shall have to capitulate to the bourgeoisie and clear the road for a bourgeois-democratic republic. Consequently, we have here the bourgeois repudiation of the possibility of building Socialism in our country masked by ‘revolutionary’ phrasemongering about the victory of the world revolution. “The essence of Trotskyism consists, secondly, in denying the possibility of drawing the basic masses of the peasantry into Socialist construction in the countryside. What does this mean? It means that the working class is not strong enough to lead the peasantry after it in the task of shunting the individual peasant farms on to collective rails and that, if in the near future the victory of the world revolution does not come to the aid of the working class, the peasantry will restore the old bourgeois system. Consequently, we have here the bourgeois denial of the strength and opportunities of the proletarian dictatorship for leading the peasantry to Socialism, covered with the mask of ‘revolutionary’ phrases about the victory of the world revolution. “The essence of Trotskyism consists, lastly, in the denial of the necessity of iron discipline in the Party, in the recognition of the freedom of factional groupings in the Party, in the recognition of the necessity of constituting a Trotskyist party. For Trotskyism, the Communist Party of the Soviet Union must be not a united and single militant Party, but a collection of groups and factions, each with its own central organization, press and so forth. And what does this mean? It means that following the freedom of political groupings in the Party must come the freedom of political parties in the country, i.e., bourgeois democracy. Consequently, we have here the recognition of the freedom of factional groupings in the Party, leading directly to the toleration of political parties in the country of the dictatorship of the proletariat, and all covered up with phrases about ‘internal Party democracy’ and ‘improving the regime’ within the Party.” (Joseph Stalin, Leninism, Vol. II, English Edition, pp. 391-393.)

சனி, 11 ஏப்ரல், 2020



இதுவரை கொரனா நிதியாக 32-கோடி மக்களின் கணக்கில் - #நேரடி_மான்யமாக 28-ஆயிரம் கோடி ரூபாய் Prathan Manthri Galyan Relief திட்டத்தின் கீழ் வரவு வைக்கப்பட்டுள்ளது.
கியுவில் நிற்காது - ஒரு ரூபாய் கமிஷன் இல்லை நேரடியாக அக்கவுண்டில் வரவு - செலவு!
🌾₹14,000கோடியை - 7 கோடி விவசாயிகளின் கணக்கில் under PM - KISAN scheme
👉₹10,000 கோடியை - 19 கோடி பெண்கள் கணக்கில் under PMJDY
👷₹3,000கோடியை - 2 கோடி கட்டிட தொழிலாளர்கள் கணக்கில்
 ₹1400 கோடிக்கு மேல் - 3கோடி senior citizens and aged widowsன் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டுள்ளது.
====================================
எதிர்வரும் பொருளாதார நெருக்கடியில் புதிய பாராளுமன்ற கட்டிடத்திற்கு ரூ.20000 கோடி செலவு செய்யப் போவதாக வரும் செய்திகள் வதந்திகளாக இருக்க வாய்ப்புகள் அதிகம். அதையும் மீறி பாஜக அரசு நிதியை ஒதுக்கினால் அதை விட கேவலம் இந்த அரசுக்கு வேறு ஒன்றும் இல்லை.
நாடாளுமன்ற உணவகங்களில் வழங்கப்பட்டு வந்த மானிய விலை உணவுகளின் விலையை நட்டமின்றி மாற்றி வரையறை செய்தது பாஜக அரசு தான் என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன்.
படேல் சிலை எதற்கு, புதிய கட்டிடம் எதற்கு என்று முகநூலில் போராடும் போராளிகள் யார் என்று பார்த்தால் எல்லாம் #ஒரே_இடம் தான் "திராவிடம்".
காங்கிரஸ் தலைவர் திருமதி. சோனியா காந்தி கொரானோ நெருக்கடியால் பத்திரிகைகளுக்கு தரும் விளம்பரங்களை சில ஆண்டுகளுக்கு நிறுத்தச் சொல்லி சென்ற வாரம் ஆலோசனை வழங்கியிருந்தார். அதை எடிட்டர்ஸ் கில்ட் ஆட்சேபித்து இருந்தது. எனக்குத் தெரிந்து நல்ல யோசனை. தயவு செய்து உடனடியாக செயல்படுத்தவும்.
தமிழகத்திற்கு நிதி ஒதுக்கீடு குறைவு, பிறமாநிலத்திற்கு அதிகம் என்று செய்திகளைத் திரித்து தினமும் விஷத்தை பரப்பும் கேடுகெட்ட ஊடகங்களுக்கு கூடுதலாக வருமானம் வேறு ஒரு கேடா ?
1. கடந்த ஆறு வருடங்களாக இலங்கை இராணுவம் நம் மீனவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்துவதில்லை.
2. காவிரி விவகாரத்தில் தமிழக கோரிக்கைப்படி அரசிதழில் தீர்ப்பு வெளியாகி உள்ளது.
3. இலங்கைக்கு அண்மையில் கூட மருத்துவ உதவி வழங்கப்பட்டுள்ளது.
4. அரசியல் சாசனப் பட்டியலில் மாநிலங்களே தங்கள் விரும்பும் திட்டங்களை செயல்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
5. மாநில நிதி பங்கீடு 42% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. பத்திரிகைகளிடம் கேட்டு கருவூலத்தை நிர்வகிக்க முடியாது.
6. ரிசர்வ் வங்கி சுற்றறிக்கைப்படி மாநில நிதி ஓவர் டிராஃபட் வசதி காலம் செப்டம்பர் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
7. மருத்துவ உதவிகள் விமானப்படை மூலம் பயணங்கள் கடுமையாக உள்ள வட கிழக்கு மலைப்பிரதேசங்கள், காஷ்மீர், மாலத்தீவு, பிரேசில், ப்ராங்பர்ட் வரை செல்கிறது.
8. தட்டுப்பாடின்றி அத்தாவாசிய பொருள்கள் செல்ல இரயில்வே, துறைமுகம், சரக்கு வாகனங்கள் உதவுகின்றன.
9. நோய்ப்பரவல் பெருமளவு தடுக்கப்பட்டுள்ளது. உயிரிழப்பு வெகுவாக குறைந்திருப்பது மத்திய, மாநில அரசுகளின் ஒத்துழைப்பை, நல்லிணக்கப் போக்கைக் காட்டுகிறது.
இங்கு தமிழ்நாட்டை மட்டும் கவனிக்கவில்லை என்று சில தற்குறிகள் ஜல்லியடித்துக் கொண்டிருக்கின்றன.
பேசாமல் திருவள்ளுவர், சர்வஞ்சர் சிலைகளைத் திறந்து தமிழக - கர்நாடக மாநில நல்லுறவு வளர்ந்து விட்டது என்ற பிம்பத்தைப் போல பாஜகவும் ஏதாவது சிறப்பான முயற்சி செய்து பார்க்கலாம்
ரஷ்யா, சீனா, கிழக்கு ஐரோப்பிய நாடுகள் என்று
எல்லா சோஷலிச நாடுகளும் ஒன்றன் பின் ஒன்றாக
வீழ்ச்சி அடைந்த பின்னால், வலதுசாரி எழுச்சி ஏற்படுவது
இயற்கையே. அப்படி ஏற்படாமல் இருந்தால்தான்
ஆச்சரியம்.  



வரலாற்றுச் சக்கரம் ஒருபோதும் பின்னோக்கித்
திரும்புவதில்லை. எனவே 1917க்கோ பண்டைக்கால
பழமைவாதத்துக்கோ திரும்பிச் செல்ல யாராலும்
இயலாது.

சமகால உலகில், இடதுசாரி வலதுசாரி என்ற
பதங்கள் பாரம்பரியமான அர்த்தத்தை இழந்து
விட்டன. அதாவது மார்க்ஸ் காலத்திய அர்த்தம்
இன்று  பொருந்தாது.

என்ன காரணம்? சமூகமானது தொடர்ந்து மாறிக்
கொண்டும் இயங்கிக் கொண்டும் இருப்பதால்,
சமூகம் advancement என்பதை நோக்கித் தவிர்க்க
இயலாமல் செல்கிறது. அந்த அளவுக்கு 
வலதுசாரித் தன்மையானது, தன் வலதுசாரித் 
தன்மையை இழந்து விடுகிறது.

வலதுசாரித் தன்மையை ஒரு solutionன் strengthஉடன்
ஒப்பிடுவோம். Normality of the solution என்பது
வலதுசாரித் தன்மையின் அடர்த்தியைக்
குறிப்பிடுவதாக வைத்துக் கொள்வோம்.
காலப்போக்கில் சமூகம் முன்னேறி முன்னேறிச்
செல்வதன் விளைவாக, வலதுசாரித் தன்மை
குறைந்து கொண்டே போகும்.
     

இல்லை; இது நிகழ்தகவு பற்றிய கணக்கு.




பொருளானது அலையாக இருக்க முடியுமா?
----------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
நியூட்டன் அறிவியல் மன்றம்
------------------------------------------------
"நீலக் கடலலையே உனது
நெஞ்சின் அலைகளடி."
இது பாரதியின் காவிய வரி. இதில் கடல் அலைகளின்
நிறம் நீலம் என்கிறார் பாரதியார்.

நிறம் என்றால் அலைநீளம் என்றே இயற்பியல் கூறும்.
(Colour means wavelength). வெவ்வேறு நிறங்கள் என்றால்
வெவ்வேறு அலைநீளங்கள் என்கிறது இயற்பியல்.

நீல நிறத்தின் அலைநீளம் என்ன? 420 நானோமீட்டர் முதல்
490 நானோமீட்டர் வரையிலான அலைநீளமே நீலநிறம்
என்று இயற்பியல் கூறும். இங்கு RBG எனப்படும் மூன்று
நிறங்களை (சிவப்பு, நீலம், பச்சை) மட்டும் கருதும்
நிறவெளியே (Colour space) பின்பற்றப் படுகிறது.

ஒளி அலைகள் என்று கேள்விப் பட்டு இருப்போம். ஆனால்
நியூட்டன் ஒளியானது ஒரு அலை என்பதை ஏற்கவில்லை.
ஒளி என்பது துகளே என்றார் அவர். உலகப் புகழ் பெற்ற
அவரின் துகள் கொள்கை (corpuscular theory of light) 12ஆம்
வகுப்பு இயற்பியலில் பாடமாக இருக்கிறது.

கிறிஸ்டியன் ஹைஜென்ஸ் ( Christian Huygens 1629-1695)
என்பவர் நியூட்டன் காலத்து விஞ்ஞானி. இவர் ஒளியானது
அலையாக இருக்கிறது என்றார். நியூட்டனின் துகள்
கொள்கைக்கு முற்றிலும் முரணானது இவரின்
அலைக்கொள்கை!

ஒளி அலையா அல்லது துகளா என்பதைக் கண்டறிய
ஆயிரம் பரிசோதனைகள் நடந்தன. இவற்றில்
முரண்பட்ட முடிவுகள் கிடைத்தன. சில பரிசோதனைகள்
ஒளி அலையாக இருக்கிறது என்பதற்குச் சாட்சியம்
கூறின. சில பரிசோதனைகளில் ஒளி தன்னை துகளாக
மட்டுமே வெளிப்படுத்திக் கொண்டது. இதனால்
அறிவியல் உலகில் ஒரு நிச்சயமற்ற நிலை நீடித்தது.

விஞ்ஞானிகள் இரண்டு கட்சிகளாகப் பிரிந்து, அலை,
துகள் என்று வாதிட்டார்கள். உலகமே இரண்டாகப்
பிளவு பட்டது. இறுதிக்கும் இறுதியான பரிசீலனையில்
விஞ்ஞானிகள் அலையா துகளா என்ற பிரச்சினைக்கு
முடிவு கட்டினார்கள். நூற்றாண்டுகளாக
நீடித்த சர்ச்சைக்கு விஞ்ஞானிகள் வழங்கிய தீர்ப்பு
இதுதான்! ஒளி துகளாகவும் இருக்கிறது; அலையாகவும்
இருக்கிறது. அலை-துகள் இரட்டைத் தன்மையே ஒளி பற்றிய
மெய்ம்மை (wave particle duality) ஆகும்.

பிரசித்தி பெற்ற இந்தத் தீர்ப்பின் மீதுதான் குவான்டம்
தியரி உருவாக்கப் பட்டுள்ளது. ஒளியின் அலை-துகள்
இரட்டைத் தன்மை மீதுதான் குவாண்டம் கொள்கை
கட்டி எழுப்பப் பட்டுள்ளது.

ஆயின் ஒரே நேரத்தில் ஒளியானது துகளாகவும்
அலையாகவும் இருக்குமா? அப்படித் தன்னை
வெளிப்படுத்திக் கொள்ளுமா? கேள்விகள் எழுந்தன.
இதற்குப் பதிலளித்தார் நியல்ஸ் போர் (Niels Bohr 1885-1962).
ஒரு நேரத்தில் ஒரு பண்பு மட்டுமே வெளிப்படும் என்றார்.
அதாவது ஒரு பரிசோதனையின்போது, ஒளியின்
அலைப்பண்பு  வெளிப்படுமானால், அதே பரிசோதனையில்
அதன்  துகள் பண்பு வெளிப்படாது என்றார்.
இவரின் இக்கோட்பாடு "நிரப்புக் கோட்பாடு"
(Principle of complementarity) எனப்படுகிறது.

பருப்பொருளின் அலைப்பண்பு!
-----------------------------------------------
ஒட்டு மொத்தப் பிரபஞ்சத்திலும் பொருள், ஆற்றல் (matter and energy)
என்று இரண்டே இரண்டு விஷயங்கள் மட்டுமே உள்ளன.
இவ்விரண்டைத் தவிர்த்து மூன்றாவது எதுவும் மொத்தப்
பிரபஞ்சத்திலும் கிடையாது.

ஒளி என்பது ஆற்றல் ஆகும். ஆற்றலானது துகளாகவும்
அலையாகவும் இருக்கிறது என்பதைக் கண்டோம். இதை
ஏற்றுக் கொள்வதில் மனித குலத்துக்குப் பெரிய சிக்கல்
எதுவும் இல்லை. ஆனால் லூயி டி பிராக்லி என்னும்
பிரெஞ்சு இயற்பியலாளர் (Louis de Broglie 1892-1987)
பருப்பொருளும் அலையாக இருக்கிறது என்று 1924ல் கூறி
உலகை அதிர வைத்தார்.

பொருள் என்பது அணுக்களாகவும் துகள்களாகவும்
இருக்கிறது என்று நம்பிக் கொண்டிருந்த மனித குலம்
பொருள் என்பது எப்படி அலையாக இருக்க முடியும்
என்று கேள்வி எழுப்பியது.

ஃபெர்மியான்களும் போசான்களும்!
---------------------------------------------------------
இவ்விடத்தில் துகள்கள் பற்றி சிறிது கூடுதலாக அறிந்து
கொள்ள வேண்டும். பொருட்கள் அணுக்களால் ஆனவை
என்றும் அணுக்கள் துகள்களைக் கொண்டவை என்றும்
நாம் அறிவோம்.

ஃபெர்மியான்கள் எனப்படும் பொருள்சார் துகள்கள் மற்றும்  
போசான்கள் எனப்படும் ஆற்றல்சார் துகள்கள் என்பதாக
பொதுவாக துகள்களை இரண்டாகப் பிரிப்பது வழக்கம்.
இத்தாலிய இயற்பியலாளர் பேராசிரியர் என்ரிக்கோ
ஃபெர்மியின் (Prof Enricho Fermi 19901-1954) நினைவாக
பொருள்சார் துகள்களுக்கு ஃபெர்மியான்கள் (Fermions) என்று
பெயரிட்டார் பால் டிரக் (Paul Dirac). இத்துகள்கள் ஃபெர்மி, டிரக்
ஆகிய இருவரின் புள்ளியியல் விதிகளுக்குக் கீழ்ப்படிபவை.

அது போல இந்திய இயற்பியலாளர் சத்யேந்திரநாத் போஸ்
(Satyendra Nath Bose 1894-1974) நினைவாக ஆற்றல்சார் துகள்களுக்கு போசான்கள் (Bosons) என்று பெயரிட்டார் இதே பால் டிரக்.
இத்துகள்கள் போஸ், ஐன்ஸ்டைன் ஆகிய இருவரின் புள்ளியியல்
விதிகளுக்குக் கீழ்ப்படிபவை.

புரோட்டான், நியூட்ரான், எலக்ட்ரான் ஆகியவை பொருள்சார்
துகள்கள்; எனவே அவை ஃபெர்மியான்கள்.
ஒளிமங்கள் எனப்படும் போட்டான்கள் (photons) ஆற்றல்சார்
துகள்கள்; எனவே ஒளிமங்கள் போசான்கள் (photons are bosons) ஆகும்.
பிரசித்தி பெற்ற ஹிக்ஸ் துகள் ஒரு போசான் ஆகும்.

எலக்ட்ரான் ஒரு துகளே!
--------------------------------------
துகள்களிலேயே அதிகம் ஆராயப்பட்ட துகள் எலக்ட்ரான்
ஆகும். ஃபெர்மியான்களின் உட்பிரிவான லெப்டான்களில் (leptons)
வருகிறது எலக்ட்ரான். நிறை குறைவான, இலகுவான துகள்கள்
லெப்டான்கள் எனப்படுகின்றன.

எலக்ட்ரானின் நிறை என்ன? சிறிது தோராயத்துடன் கூறினால்
9.11 x 10^minus 31 கிலோகிராம் ஆகும். ஒரு இயற்பியல்
மாணவனைப் பொறுத்தமட்டில் இந்த நிறை உணரக்கூடிய
நிறையே ஆகும் (humanly perceivable). 10^minus 3 (மில்லி கிராம்)
என்பதில் தொடங்கி, 10^ minus 6 (மைக்ரோ கிராம்) என்றும்,
நானோ கிராம் என்றும் மானசீகமாக உணர்ந்து, வளமான
கற்பனை ஆற்றலுடன் 10^minus 31 கிகி என்பதை மனத்தால்
உணர வேண்டும். வெறுமனே நிறை இவ்வளவு என்று
தெரிந்து கொள்வதுடன் மாணவர்கள் நின்று விடக்கூடாது.

எலக்ட்ரானின் வயது 123 என்று வைத்துக் கொள்ளலாம்.
இத்துகளுக்கு முதன் முதலாக எலக்ட்ரான் என்று பெயரிட்டவர்
அயர்லாந்து இயற்பியலாளர் ஜி ஜே ஸ்டோனி (George Johnstone Stoney).
1897ல்தான் எலக்ட்ரான் ஒரு பரிசோதனையில் கண்டு பிடிக்கப்
பட்டது; கண்டு பிடித்தவர் பிரிட்டிஷ் இயற்பியலாளர்
ஜே ஜே தாம்சன் (J J Thomson 1856-1940). இதற்காக இவருக்கு
1906ஆம் ஆண்டிற்கான இயற்பியல் நோபெல் பரிசு வழங்கப்
பட்டது.

"காத்தோட் கதிர்களில் (cathode rays) மின்சாரத்தைக் கடத்தும்
துகள்கள் இருக்கின்றன என்றும் இத்துகள்களே
எலக்ட்ரான்கள் என்றும் தாம்சன் கண்டறிந்தார். மேலும்
எலக்ட்ரான்கள்  அணுவின் பகுதிகள் என்றும் தாம்சன்
கண்டறிந்தார்" என்று நோபெல் பரிசுக் குறிப்பு (Nobel citation)
தெரிவிக்கிறது. இங்கு எலக்ட்ரான் ஒரு துகள் என்று தாம்சன்
கண்டறிந்தார் என்று நோபெல் பரிசுக் குறிப்பு கூறுவது
குறிப்பிடத் தக்கது. அதாவது எலக்ட்ரான் ஒரு துகள் என்பதை
இங்கு அடிக்கோடு இட வேண்டும்.

எலக்ட்ரான் அலையாக இருக்கிறது!
---------------------------------------------------------
1906ல் ஜே ஜே தாம்சனுக்கு நோபெல் பரிசு வழங்கப் பட்டது போல,
1937ல் ஜே ஜே தாம்சனின் மகன் ஜி பி தாம்சனுக்கு
(G P Thomson 1892-1975) நோபல் பரிசு வழங்கப் பட்டது. இதே
எலக்ட்ரான் மீதான பரிசோதனைக்குத்தான் நோபெல் பரிசு.
எலக்ட்ரான் ஒரு துகள் என்பதற்காக நோபல் பரிசு
பெற்றார் தந்தை. மாறாக, எலக்ட்ரான் ஒரு அலை என்று
காட்டியதற்காக பரிசு பெற்றார் மகன்.

"பருப்பொருளுக்கும் அலைப்பண்பு உண்டு. ஒவ்வொரு
துகளுடனும் இணைந்த ஒரு அலை உள்ளது" (With every particle
of mass m and velocity v a wave is associated) என்றார் லூயி
டி பிராக்லி. 1924ல் அவர் கூறியது 1927ல் பரிசோதனைகள்
மூலமாக நிரூபிக்கப் பட்டது.

பிரசித்தி பெற்ற டேவிசன்-ஜெர்மர் பரிசோதனையில்
(Davisson-Germer) நிக்கல் கிறிஸ்டல்களின் மீது எலக்ட்ரான்
கதிர்கள் செலுத்தப் பட்டபோது விளிம்பு விளைவுகள்
(diffraction) ஏற்பட்டன. எலக்ட்ரான் ஒரு அலையாக இருந்தால்
மட்டுமே விளிம்பு விளைவுகளை ஏற்படுத்த முடியும்.
இதன் மூலம் எலக்ட்ரான் அலையாக இருக்கிறது என்பதை
டேவிசன்-ஜெர்மர் பரிசோதனை நிரூபித்தது.

இப்பரிசோதனையை நிகழ்த்திய இருவரில் டேவிசனுக்கு
(Clinton Joseph Davisson 1881-1958) 1937ஆம் ஆண்டிற்குரிய
நோபல் பரிசு ஜி பி தாம்சனுடன் பகிர்ந்து வழங்கப் பட்டது.
டேவிசனைச் சாராது தமது சுய முயற்சியில் இதே எலக்ட்ரானைக்
கொண்டு குறுக்கீட்டு விளைவுப் பரிசோதனைகளையம்
(interference experiments)  விளிம்பு விளைவு (diffraction) பரிசோதனைகளையும் நிகழ்த்தி, எலக்ட்ரான் அலையாக இருக்கிறது
என்று நிரூபித்தமைக்காக ஜி பி  தாம்சனுக்கு நோபல் பரிசு
பகிர்ந்து வழங்கப்பட்டது.

ஆற்றல் மட்டுமல்ல பொருளும்கூட அலையாகத்தான் இருக்கிறது
என்ற லூயி டி பிராக்லியின் கூற்று பரிசோதனைகள் மூலம்
1927ல் நிரூபிக்கப் பட்டு விட்டதைத் தொடர்ந்து, அவருக்கு
1929ஆம் ஆண்டின் நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதன் மூலம்
பருப்பொருளும் அலையாக இருக்கிறது என்ற  உண்மையை
அறிவியல் உலகம் ஏற்றுக் கொண்டது. எர்வின் ஷ்ராடிங்கர்
இதன் அடிப்படையில் தமது அலை இயந்திரவியலை
(wave mechanics) உருவாக்கினார்.

அலைநீளம் கணக்கிடுதல்!
------------------------------------------
அலை என்றவுடன் அலைநீளம் என்ன என்று கேள்வி எழும்.
துகளான எலக்ட்ரான் ஒரு அலையாக இருக்கிறது என்றால்
அதன் அலைநீளம் என்ன என்ற கேள்விக்கு லூயி டி பிராக்லி
பதிலளிக்கிறார்.

டி பிராக்லியின் அலைநீளமானது ஒரு துகளின்
(எலக்ட்ரானின்) உந்தம் (momentum) எவ்வளவு என்பதைப் பொறுத்தது.
உந்தம் p = m x v.

அலைநீளம் லாம்ப்டா = h/p.
இங்கு h என்பது பிளாங்கின் மாறிலி (Planck's constant) ஆகும்.

தற்போது மிக எளிய ஒரு கணக்கைப் பார்ப்போம். இதன்
மூலம் எலக்ட்ரானின் அலைநீளம் என்ன என்று காணலாம்.

எலக்ட்ரானின் நிறை  m = 9.1 x 10^ minus 31 kg
எலக்ட்ரானின் வேகம் v = 10^6 m/s
பிளாங்கின் மாறிலி h = 6.6 x 10^minus 34 Js
எலக்ட்ரானின் அலைநீளம் என்ன?

p = mv
அலைநீளம் லாம்ப்டா = h/p
= 6.6 x 10^minus 34/ (9.1 x 10^ minus 31) x 10^6) 
= 0.7 x 10^minus 9
= 0.7 nm 

ஆக, இக்கணக்கில் எலக்ட்ரானின் அலைநீளம் 
0.7 நானோமீட்டர் ஆகும்.

புரோட்டான், நியூட்ரான் ஆகியவற்றின் அலைநீளத்தை 
விட எலக்ட்ரானின் அலைநீளத்தைக் கண்டறிவது எளிது.
ஏனெனில் எலக்ட்ரானின் நிறை மிகவும் குறைவு 
என்பதால் இதன் டி பிராக்லி அலைநீளம் ஒப்பீட்டளவில் 
அதிகம். எனவேதான் எல்லாப் பரிசோதனைகளிலும் 
எலக்ட்ரான் கணக்கில் கொள்ளப் படுகிறது.

எலக்ட்ரான் நுண்ணோக்கிகள்!
--------------------------------------------------
எலக்ட்ரானின் அலைநீளம் கண்டறியப் பட்டதுமே, எலக்ட்ரான்
நுண்ணோக்கிகள் (electron microscopes) உருவாக்கப் பட்டன.
அதுவரை பயன்பாட்டில் இருந்த ஒளியியல் நுண்ணோக்கிகளை
(optical microscopes) விட, இவை பன்மடங்கு துல்லியமானவை.

ஒரு ஒளியியல் நுண்ணோக்கியின் திறன் (resolving power)
அதிகபட்சமாக 200 நானோமீட்டர் என்ற அளவில் இருக்கும்.
இதன் உருப்பெருக்கம் 2000x ஆகும். அதாவது ஒரு பொருளை
2000 மடங்கு பெரிதாக்கிப் பார்க்க முடியும்.

ஆனால் எலக்ட்ரான் நுண்ணோக்கியின் திறன் (resolving power)
என்பது 50 pm (pm = pico meter = 10^minus 12) வரை எளிதில்
அடையப் பட்டுள்ளது. அதே போல அதன் உருப்பெருக்கம்
10,000,000x ஆகும். அதாவது ஒரு பொருளை 10 மில்லியன்
மடங்கு பெரிதாக்கிப் பார்க்க முடியும்.

ஒளியியல் நுண்ணோக்கி, எலக்ட்ரான் நுண்ணோக்கி என்னும்
இவ்விரண்டுக்கும் இடையிலான பாரதூரமான வேறுபாட்டிற்குக்
காரணம் என்ன? ஒளியியல் நுண்ணோக்கியில் காணத்தக்க
ஒளி (visible light) பயன்படுகிறது. இதன் அலைநீளம்
380 நானோமீட்டர் முதல் 740 நானோமீட்டர் வரை.

இந்த ஒளியியல் நுண்ணோக்கியில் 200 நானோமீட்டருக்குக்
குறைவான அலைநீளம் உள்ள ஒரு பொருளைப் பார்க்க
இயலாது. உதாரணமாக ஒரு பாக்டீரியா 150 நானோமீட்டர்
நீளம் இருக்கிறது என்றால், அந்த பாக்டீரியாவை ஒளியியல்
நுண்ணோக்கியைக் கொண்டு பார்க்க இயலாது.

20 நானோமீட்டர் நீளமுள்ள ஒரு புரதத்தையோ 50 பிக்கோ மீட்டர்
நீளமுள்ள ஒரு பொருளையோ எலக்ட்ரான் நுண்ணோக்கி
மூலமாக மட்டுமே பார்க்க இயலும். ஏனெனில்
ஒளிமங்களின் (photons) அலைநீளத்தை விட, எலக்ட்ரான்களின்
அலைநீளம் குறைவு. மிகவும் குறைவான அலைநீளம் உடைய
எலக்ட்ரான்களைப் பயன்படுத்துவதன் மூலம், மிக நுண்ணிய
பொருளையும்கூட எலக்ட்ரான் நுண்ணோக்கியால் பார்க்க
முடியும்.                  

பகுத்தறிவு முரண்படுவது ஏன்?
------------------------------------------------
எலக்ட்ரானின் அலைநீளத்தையே பரிசோதனை மூலம் 
கண்டறிந்து கூறினாலும் சராசரி மனிதனின் பகுத்தறிவு 
இன்றும் கூட, அதை ஏற்காமல் தர்க்கம் செய்து கொண்டு 
இருக்கிறது. 

சராசரி மனிதனின் புரிதல் இப்படி இருக்கிறது.
ஒரு துகள் என்று சொன்னால், மிக மிக நுண்ணிய 
ஓர் இடத்தில் தன்னை அடைத்துக் கொண்டு இருப்பது.
ஆனால் அலை என்று சொன்னால், அது சிறிதளவேனும்
நீளமாக இருக்கக்கூடிய ஒன்று.  

எலக்ட்ரான் போன்ற ஒரு நுண்ணிய மகா அற்பமான 
நிறையைக் கொண்ட ஒரு துகள் எப்படி அலையாக 
நீட்டிக் கொண்டு நிற்க முடியும் என்று சராசரி 
மனிதனின் பகுத்தறிவு இன்றும் கேள்வி எழுப்புகிறது.

கணக்கற்ற பரிசோதனைகள் இக்கேள்விக்கு 
முதுகெலும்பை முறிக்கும் பதில்களைக் கொடுத்த 
பின்னும், மீண்டும் மீண்டும் உருப்படாத கேள்வியை 
எழுப்புவதில் பயனில்லை. ஏன் இத்தகைய கேள்விகள் 
எழும்புகின்றன? குவாண்டம் கொள்கையானது 
மக்களால் இன்னும் புரிந்து கொள்ளப்படவில்லை
என்பதே இதற்குக் காரணம்.

சராசரி மனிதனின் மூளையை முழுவதுமாக ஆக்கிரமித்துக் 
கொண்டிருக்கிறது நியூட்டனின் இயற்பியல். அதில் 
காலாவதி ஆகிப்போன கொஞ்சத்தை எடுத்து அப்புறப் 
படுத்தி, குவாண்டம் கொள்கைக்கு மூளையில் சிறிது      
இடம் ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும். அப்போதுதான் 
எலக்ட்ரான் துகளாகவும் அலையாகவும் இருக்க முடியும் 
என்ற உண்மை புலப்படும்.
*****************************************************