செவ்வாய், 5 மே, 2020

அறிவியல் எழுத்து என்பது எப்போதுமே மூன்று
வகைப்படும்.
1. அறிவியல் மூல நூல் (original text).
உதாரணம்: நியூட்டனின் பிரின்சிபியா மேத்தமேட்டிக்கா
டார்வினின் Origin of species.

2. அறிவியல் விளக்க நூல்.
Popular science என்று அறியப்படும் கடினமான அறிவியலை
எளிமையாக விளக்கி மக்களுக்குத் தரும் நூல்.
உதாரணம்: ஸ்டீபன் ஹாக்கிங் எழுதிய
A brief history of time.   

3. அறிவியல் புனைவு (ScFi)
உதாரணம்: ஆர்தர் சி கிளார்க் எழுதிய
2001: A space Odyssey.

சுஜாதாவின் அறிவியல் எழுத்து என்பதில் (2)  மற்றும் (3)
ஆகியவை அடங்கும். சுஜாதா எழுதிய பல்வேறு
நூல்களைப் படித்திருந்தால் மட்டுமே இங்கு நான்
எழுதுவது புரியும்.

இவற்றில் சுஜாதாவின் Science fictionஐ மட்டும்
விமர்சனம் செய்ய ஜெயமோகன் தகுதி உடையவர்
என்பதெல்லாம் பெரும் அபத்தங்கள். மன்னிப்புக் கேட்டுக்
கொண்டு ஒதுங்குவதைத் தவிர ஜெயமோகனுக்கு
வேறு எந்த வழியும் இல்லை.

     

திங்கள், 4 மே, 2020

தொழிற்புரட்சியைத் தொடர்ந்த முதலாளிய வளர்ச்சி
இலக்கியத் துறையில் அறிவியலுக்கு மெலிதான ஒரு
முக்கியத்துவத்தைத் தந்தது. இதையொட்டி மேனாட்டில்,
ஆங்கிலத்தில், அறிவியல் இலக்கியம் என்பது உருவானது.

உலகின் முதன் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்
என்று பிரெஞ்சு எழுத்தாளரான ஜூல்ஸ் வெர்ன்  (1828-1905),
ஆங்கிலேயரான ஹெச் ஜி வெல்ஸ் (1866-1946) ஆகிய
இருவரையும் கூறுவார்கள். அறிவியல் புனைவு (science fiction)
உட்பட அறிவியலை எழுதியவர்கள் இவர்களே.

ஹெச் ஜி வெல்ஸின் The invisible Man  பற்றி ஆயிரம் முறை கூறி
இருக்கிறேன். எத்தனை பேர் அந்த அறிவியல் புனைவைப்
படித்திருப்பீர்கள்? அவருடைய The time machine என்ற நாவலும்
அற்புதமான அறிவியல் புனைவே.

ஜூல்ஸ் வெர்ன் எழுதிய பிரபல நாவலான
Around the world in eighty days என்பது மிகக் குறைவான
அறிவியல் கொண்ட ஓர் அறிவியல் புனைவு.
எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. 1966-68ல் தமிழ்நாட்டில்
11ஆம் வகுப்பு (SSLC) ஆங்கில மொழிப்  பாடத்தில்,
Around the world in eighty days நாவலானது Non detailed பிரிவில்
பாடமாக இருந்தது.

அக்காலத்தில் அறிவியல் புனைவு (science fiction) என்ற சொல்லே
உண்டாகி இருக்கவில்லை. Science romance என்றுதான்
அறிவியல் புனைவுகள் அழைக்கப் பட்டன.

மேனாட்டிலேயே அறிவியல் எழுத்துக்கு உரிய அங்கீகாரம்
இல்லாமல் இருந்த காலம் அது. இந்நிலையில் தமிழ்நாட்டில்
அறிவியலைப் பரப்புவது என்பது எளிய விஷயம் அல்ல.
இவ்வளவு எதிர்மறை அம்சங்களுக்கு இடையில்
சுஜாதா மிகவும் பரவலாக தமிழ் வாசகப் பரப்பில்
அறிவியலைக் கொண்டு சேர்த்தார்.




ஆதி மானுடம் எப்படி இருந்தது? ஆதி மானுட சமூகம்
என்பது சமூகத்தில் வர்க்கப் பிரிவினை ஏற்படுவதற்கு
முன்பான காலத்தில் நிலவிய சமூகம். தனியுடைமை
ஏற்படுவதற்கு முந்திய சமூகம் அது. அனைத்தும்
அனைவருக்கும் பொதுவானதாக இருந்த அந்தக் கால
சமூகத்தை மார்க்சியம் புராதனப் பொதுவுடைமை
சமூகம் என்று அழைக்கிறது.

உணவு தேடி வேட்டைக்குச் செல்வர் அக்கால மானுடர்கள்.
வேட்டையில் இருந்து மாலை திரும்பியதும் ஒரு சிலருக்கு
மட்டுமே வேட்டையில் ஏதேனும் கிடைத்திருக்கும்.
சிலர்  வெறுங்கையுடன் திரும்பி இருப்பர். இருப்பினும்
அனைவருக்கும் உணவு பங்கிடப்படும். அவ்வளவு
சமத்துவம் நிலவிய சமூகம்  புராதனப் பொதுவுடைமைச் 
சமூகம் ஆகும்.

அவ்வளவு சமத்துவமும் பொதுவுடைமையும் நிலவிய
அந்தச் சமூகத்தில் கூட, வேட்டைக்குச் சென்று
மிருகத்தின் நெஞ்சுப் பகுதியைக் கொண்டு வந்தவனுக்கு
மிருகத்தின் கால், வால் போன்ற பகுதிகளைக் கொண்டு
வந்தவர்களை விட அதிக மரியாதை உண்டு. ஏன் இந்தக்
கூடுதல் மரியாதை? அந்தக் காலத்தின் பொருள் உற்பத்தி
என்பது வெட்டி மாமிசத்தைக் கொண்டு வருதலே.

பொருள் உற்பத்தியில் சிறப்பிடம் பெறுவதே மானுடத்தின்
லட்ச்சியம். எனவேதான் பொதுவுடைமைச் சமூகத்தில்
கூட, மிருகத்தின் நெஞ்சுப் பகுதியைக் கொண்டு
வந்தவனுக்கு கூடுதல் மரியாதை தரப்பு படுகிறது.
இதெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

         

கே என் சிவராமன்

ஐயா
சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்கள் பயனற்றவை,
நிலைத்து நிற்காதவை, தரக் குறைவானவை என்றே
இருந்துவிட்டுப் போகட்டும். இதைச் சொல்லுவதற்கு
தற்குறி ஜெயமோகனுக்கு என்ன அருகதை உள்ளது?

அறிவியல் இலக்கியத்தை விமர்சிக்கும் ஒருவன்
அறிவியலைக் கற்றிருக்க வேண்டாமா? ஜெயமோகனின்
கல்வித் தகுதி என்ன? ப்ளஸ் 2வில் அவர் படித்தது என்ன?

பத்தாங்கிளாசுக்கு மேல் படிக்காத ஒரு பழுவினும்
இழிந்த தற்குறி அது சரியில்லை, இது சரியல்லை
என்று தீர்ப்புச் சொல்ல என்ன அருகதை உள்ளது?

தேற்றத்தைச் சொல்வதுதான் அறிவியல் புனைவு என்று
யாம் கூறவில்லை. அறிவியல் இலக்கியம் என்பதில் ஒரு
தேற்றத்தைக் கலாபூர்வமாகக் கூறுவதும்தான் உள்ளது.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் கருத்துச் சொல்லலாம்
என்பது அராஜகவாதம் (anarchism). அறிவியல்
இலக்கியத்தை விமர்சிப்பவன் அறிவியல் படித்திருக்க
வேண்டும். அறிவியலே படிக்காத ஜெயமோகன்
அறிவியலை விமர்சிக்கப் புகுந்தால், அவரின்
முட்டாள்தனம்தான் வெளிப்படும் தவிர வேறு எதுவும்
நடக்காது.

   
   
2019 மே அறிவியல் ஒளி இதழில் சுஜாதா குறித்த
எனது கட்டுரை வெளியாகி உள்ளது. சுஜாதா
குறித்த அறிவியல் வழி மதிப்பீடு அது மட்டுமே.
வேண்டுவோருக்கு மின்னஞ்சலில் அனுப்பி
வைக்கப் படும்.




மதம் வேறு; கடவுள் வேறு. மதம் பிற்காலத்தில்
தோன்றியது. அதற்கு முன்பே கடவுள் நம்பிக்கை
தோன்றி விட்டது. இதை எப்போதும் நினைவில்
கொள்ளவும். கடவுள் இல்லாமல் மதம் இருக்க
முடியாது. ஆனால் மதம் இல்லாமலும் கடவுள்
இருந்தார். அதாவது கடவுள் நம்பிக்கை இருந்தது.
இது மானுட வரலாறு. நிற்க.

கடவுள் இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக
அறிவியலால் ஆயிரம் முறை நிரூபிக்கப் பட்டு
விட்டது. It is a settled matter.

கடவுள் என்பவர் மொத்தப் பிரபஞ்சத்திலும் எங்கும்
இல்லை. அவருக்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
இல்லை. கடவுள் என்பது நம் மனத்தில் நம் சிந்தனையில்
மட்டும் வாழும் ஒரு கருத்து. அவ்வளவுதான்.
இதெல்லாம் settled science. இதில் விவாதத்துக்கெல்லாம்
இடமில்லை.  


ரோமானிய சாம்ராஜ்யத்தை எதிர்த்த அடிமைகள்,
ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களின் சார்பாக
உதயமானது கிறிஸ்துவம் என்று பிரடெரிக் எங்கல்ஸ்
கூறக்  கேள்விப்பட்டு இருக்கிறேன். சகோதரி கோதை
நாச்சியார் commoner என்று கூறியது ஒடுக்கப்பட்ட
அடிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும்
என்பதுதான் என்னுடைய புரிதல்.

யூதர்களின் பழங்கதைகளை கிறிஸ்துவம் சுவீகரித்துக்
கொண்டதால், அவை கிறிஸ்துவ அறிஞர்களால்
எழுதப்பட்டது என்று பிற்காலத்தில் சொல்லப் பட்டது.
பழைய ஏற்பாடு என்பது பழங்குடிகளின் கதை.

புதிய ஏற்பாட்டில் மட்டுமே ஏசு கிறிஸ்து இடம்
பெறுகிறார். அது கிறிஸ்துவர்களுக்கு முழுவதும்
சொந்தமானது. ஒரு சாமானியராலோ அல்லது பல
சாமானியர்களாலோ எழுதப்பட்டு இருந்தாலும், அது
மேன்மை மிக்கவர்களால் உயர்குடிப் பிறப்பினரால்
எழுதப்பட்டது என்று காட்டும் போக்கு உலகளாவிய
போக்காக இருந்தது.அதற்கு ரோம் விதிவிலக்கு அல்ல.


வருணம் என்பது இன்று இல்லை. அது முன்பு இருந்து
பின்னர் மறைந்து போன ஒரு விஷயம். தற்போது
சாதிய அமைப்பு முறை உள்ளது. இதற்கும்
வருணத்துக்கும் தொடர்பில்லை. டாக்டர் அம்பேத்கர்
நால்வகை வர்ணம் என்பதை ஏற்கவில்லை. அவர்
மூன்று வகையான வர்ணங்கள் மட்டுமே
இந்தியாவில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.

இன்றைய சாதி அமைப்பு முறையை வருண முறை
என்று கூறுவதால் என்ன பயன் விளையும்?
இன்றைய சாதி அமைப்புக்கு ஒரு பொருளியல்
அடித்தளம் உள்ளது. உள்ளதா, இல்லையா?
வருண அமைப்புக்கான பொருளியல் அடித்தளம்
நம் நாட்டில் என்ன உள்ளது?


மதங்கள்  அனைத்துமே நிறுவனங்கள் (institutions).
அவை நிறுவனமயம் ஆக்கப்பட்டவை. பழங்குடிகளின்
மதம் மட்டுமே வழிபாட்டையும் கடவுளையும்
மட்டும் கொண்டு நிறுவனமாகாமல் இருப்பது.

மதங்களின் வரலாறு ரத்த வரலாறு. மதங்கள்
காலப்போக்கில்  மூர்க்கம் அடைந்து, அவற்றின்
ஆரம்ப கால  முற்போக்குத் தன்மையையும் இழந்து
பிற்போக்கின் திரண்ட வடிவமாகி விடுகின்றன.
எனவே மதங்களை எதிர்க்க வேண்டி வருகிறது.

ஆனால் ஒரு மதத்தை மட்டும் விமர்சிப்பவன்
மற்ற ஏதேனும் ஒரு மதத்தின் கைக்கூலி ஆவான்.

  
  







எட்வர்ட் பெர்ன்ஸ்டைன்(1850-1932) எங்கெல்ஸ் இருக்கும்போதே அவருடன் இருந்த சோசலிச சிந்தனையாளரில் ஒருவர். அவரின் ரிவிசனிசம் மார்க்சியர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்டது. அவர் Evolutionary Socialism என்கிற புத்தகத்தை எழுதினார். அவரின் மற்றொரு ஆக்கமான My Years of Exile 1915 காலத்தில் எழுதப்பட்ட நினைவு குறிப்புகள். அவ்வாக்கத்தில் 9 ஆம் அத்தியாயம் எங்கெல்ஸ் லண்டன் வீட்டின் மாலைசந்திப்புக்களை குறித்த குறிப்புகள். பலதரப்பு சோசலிச சிந்தனையாளர்கள் கூடிடும் இல்லமாக எங்கெல்ஸ் இல்லம் இருந்தது. அங்கு வருபவர்கள், நடக்கும் விவாதம் பற்றிய சிறு குறிப்பது. கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் அவ்வீட்டில் எப்படி இருந்தது என்பதும் அதில் காணக்கிடைக்கும் சுவாரஸ்யமான தகவல்.
அவ்வத்தியாயம் இப்படித்தான் ஆரம்பிக்கிறது
ENGELS was not only democratic in his opinions; he was thoroughly democratic in feeling as well. His manner of living showed in many characteristic ways that he came from a good middle-class home, but he had chosen a girl of the lower middle classes as his life’s companion; and in the choice of his associates he recognised no class distinctions. At the same time he did draw distinctions. Those who wished to be invited to his social evenings must either have done good service in the Socialist cause, or must be of some consequence intellectually. On the other hand, if Socialists they need not necessarily be Marxists. In this respect there was little of the pedant about the co-founder of the Marxist school. Even Socialists who were not Social Democrats were tolerated.
இனி கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் பற்றிய பாரா
I cannot help thinking of an evening at Engels’ which preceded the Christmas celebrations. It was on the day when the dough, or rather paste, for the Christmas puddings was prepared. An enormous quantity was made, for there was not a single friend of the house who did not receive a Christmas pudding from 122 Regent’s Park Road. Professor Karl Schorlemmer, Engels’ medical adviser, Dr. Gumpert of Manchester, friend Sam Moore in Yorkshire, the old Chartist, Julian Harney in Jersey, Peter Layoff, the honoured leader of the Russian Socialists, as well as Marx’s sons-in-law, Paul Lafargue and Charles Longuet in Paris, various intimate friends in London, and, if I am not mistaken, some friends in Germany as well, were always remembered. Hence, on a given day, about a fortnight before Christmas, the lady friends of the house turned up early in the morning, and worked on until the evening, chopping great heaps of apples, nuts, almonds, candied peel, etc., into little bits, and stoning and chopping pounds upon pounds of raisins; and as may be supposed it was a thoroughly cheerful party: As the ingredients were prepared they were put into a huge tub. Later in the evening the male friends of the house arrived, and each of them was required to lay hold of a ladle that stood upright in the tub, and stir the paste three times round; a by no means easy task, which needed a good deal of muscular strength. But it had rather a symbolical meaning, and those whose strength was inadequate were mercifully exempted. The concluding touch was given by Engels himself, who descended into the wine-cellar and brought up champagne, in which we drank to a merry Christmas and many other things as well. All this, of course, took place downstairs in the great kitchen, which enhanced the charm of the whole proceeding, for to linger in a spacious kitchen always puts one somehow in mind of one’s home. At one time even well-to-do people used to eat in the kitchen: and this would have answered capitally in Engels’ house, for the kitchen was a roomy one, with the range built into the fireplace after the English fashion, so that it did not take up any room to speak of. Like so many things in England, it combined the old with the new. The construction of the range was at that time regarded as modern, but the old-fashioned turn-spit or meat-jack was not lacking, on which a hanging joint of beef could be roasted, while underneath was a dish to catch the dripping fat. In Germany, in a small house or tenement, the kitchen has often enough to serve as a sitting-room; but hardly so often as in England, where in the advertisements of dwelling-houses the kitchen, in the smaller houses, is briefly described as a “living-room,” to distinguish it from the best room, or sitting-room, as it is called.
கடவுள் இருக்கிறார் என்று உறுதிபடக் கூறவில்லை.
ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை சேவித்த சுஜாதா
கடவுள் இருக்கிறார் என்று அடித்துக் கூற வேண்டாமா?

அதற்கு மாறாக,
 என்று கேள்வி எழுப்பி,  வாழ்ந்த   று ரெங்கநாதரை சேவித்தார்.
இலக்கியப்


வைணவரான சுஜாதா கடவுளின் இருப்பை ஏற்கிறார்.
ஆனால் அறிவியலாளரான சுஜாதாவால் கடவுளின்
இருப்பை ஏற்க இயலவில்லை. ஏனெனில் கடவுளின்
இருப்புக்கு இன்று வரை எந்தத் தடயமோ ஆதாரமோ
இல்லை. எனவேதான் " It depends" என்ற பதிலை அவர்
தருகிறார். கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க இயலாத
நிலையில் சுஜாதாவால் அப்படித்தான் பதிலளிக்க முடியும்.

அக்நாஸ்டிசிசம் என்பதெல்லாம் சுஜாதாவிடம் கிடையாது.
அவர் மிகத் தெளிவானவர். எனவே ஒரு quantum superpositionஐ
முன்வைக்கிறார். It depends என்பதற்கு அதுதான் அர்த்தம்;
அது மட்டுமே அர்த்தம்.

ஒரு சர்க்யூட் ஒரே நேரத்தில் ON, OFF என்ற இரண்டு
நிலைகளிலும் இருக்குமா? இருக்க முடியுமா?
இருக்கும்; இருக்க முடியும் என்கிறது குவாண்டம்
இயற்பியல். அப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர்
நிலைகளில் இருப்பதுதான் quantum superposition.

கடவுள் இருக்கிறாரா? ....ஆம், இருக்கிறார். இது ஒரு தரப்பு.
கடவுள் இருக்கிறாரா? ......இல்லை, இல்லவே இல்லை. இது
இன்னொரு தரப்பு. இப்படித்தான் கடவுள் பற்றிய நிலைமை
இருப்பதாக சுஜாதா உணர்கிறார். எனவே it depends என்கிறார்.
      
    
ஜெயமோகனின் கொம்புக் கோட்பாடும்
சுஜாதா பற்றிய தவறான மதிப்பீடும்!
கொம்புக் கோட்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் பதில்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------- 
எழுத்தாளன் என்பவன் கொம்பு  முளைத்தவன் என்கிறார்
ஜெயமோகன். வேறு பல எழுத்தாளர்களும் அப்படிக்
கருதுகின்றனர். ஆனால் புதுமைப் பித்தன் அப்படிக்
கருதவில்லை. ஜெயமோகனைப் போலவே ஜெயகாந்தனும்  
கருதி இருக்கக் கூடும்.

ஜெயமோகனின் கொம்புக் கோட்பாடு சரிதானா?
அறிவியல் என்ன சொல்கிறது? மார்க்சியம் என்ன
சொல்கிறது?

கொம்புக் கோட்பாடு முட்டாள்தனமானது என்கிறது
அறிவியல். அறிவியலை வழிமொழிகிறது மார்க்சியம்.
எந்த ஒரு சமூகத்திலும் எது முக்கியத்துவம் பெறும்?
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டு
அதில் செலுத்தப்படும் உழைப்பு மட்டுமே எந்த ஒரு
சமூகத்திலும் மேன்மையானதாகும். 

கதை நாவல் கவிதை எழுதுவதெல்லாம் பொருள்
உற்பத்தியில் வராது. அதெல்லாம் மார்க்சியம்
கூறுகிறபடி, இரண்டாம் பட்சமானது (secondary).

ஜெயமோகன் தம்முடைய இளம் வயதில்
தொலைதொடர்புத் துறையில் பணியாற்றியபோது,
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுத்
தம் உழைப்பைச் செலுத்தினார். பின்னாளில் பணிஓய்வு
பெற்று, பொருள் உற்பத்தியில் இருந்து முற்றிலுமாக விலகி
முழுநேர எழுத்தாளர் ஆனார்.

பொருள் உற்பத்தியில் இருந்து தம்மைத் துண்டித்துக்
கொண்டவர்கள், மலையைப் புரட்டினாலும் அது
இரண்டாம் பட்சமானது தான். 

தமிழ்நாட்டில் அறிவியல் எழுத்து என்பது  வெறும் அடையாளம்
என்ற அளவில்தான் இருந்தது. ந சுப்பு ரெட்டியார்,
பெ நா அப்புசாமி ஆகியோர் எழுதுவதும், கோவை தாமோதரனின் கலைக்கதிரும், மஞ்சரியில் சிறிதளவும் மட்டுமே
1950, 1960களில் அறிவியல் எழுத்து என்பதாக இருந்தது.

இந்நிலையில்தான் சுஜாதா வெண்கலக் கடையில் யானை
புகுந்தது போல தமிழ் இலக்கிய உலகில் அதிரடியாகப்
புகுந்தார். 1970களில்தான் பரவலாக அவர் எழுதத்
தொடங்கி இருந்தார். எதை எழுதினாலும் அதில்
அறிவியல் இருந்தது. (அறிவியல் என்பது தொழில்நுட்பத்தையும்
உள்ளடக்கியது). பெரும்வீச்சு உடைய அறிவியலை,
மொத்தத் தமிழ் வாசகப் பரப்பிலும் கொண்டு
சேர்த்தவர் சுஜாதா.

சுஜாதா குறித்து நாலைந்து கட்டுரைகளை எழுதி
இருக்கிறார் ஜெயமோகன். சுஜாதாவின் அறிவியல்
எழுத்து தீவிரமற்ற எழுத்து என்று அவற்றில்
வரையறுக்கிறார் ஜெயமோகன். சுஜாதாவின் எழுத்து
நீண்ட காலத்திற்கு நிற்காது என்றும் அவரின் அறிவியல்
புனைவுகள் தரமானவை அல்ல என்றும் பலவாறாக 
சுஜாதாவின் அறிவியல் எழுத்தைச் சிறுமைப் படுத்தி
உள்ளார் ஜெயமோகன்.

ஜெயமோகனின் பார்வை (perspective) அறிவியல் எழுத்தின்
மீதான முற்றிலும் இளக்காரமான பார்வை ஆகும். இது
அறிவியலுக்கு எதிரான மூடத்தனமான பார்வை ஆகும்.
அறிவியல் எழுத்தை, அறிவியல் இலக்கியத்தை மதிப்பிடும்
ஒருவர் குறைந்தபட்ச அளவேனும் அறிவியல் கற்றிருக்க
வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. ஏனெனில்
அறிவியல் எழுத்தை எடைபோட வேண்டுமெனில்,
எடை போடுபவருக்கு அறிவியல் தெரிந்திருக்க
வேண்டும் அல்லவா?

சுஜாதா அறிவியலைக் கற்றவர். அறிவியலைக்
கற்ற பின்னரே அவர் அறிவியலை எழுதுகிறார்.அவரின்
அறிவியல் எழுத்தை எடைபோடும் ஜெயமோகன்
எந்த அளவுக்கு அறிவியலைக் கற்று இருக்கிறார்?
அதாவது ஜெயமோகனின் அறிவியல் தகுதி என்ன?

அறிவியல் என்று ஜெயமோகன் படித்ததெல்லாம்
பத்தாம் வகுப்பு வரையிலானதுதான். பத்தாம்
வகுப்பைத் தாண்டிய அறிவியல் எதுவும்
ஜெயமோகனுக்கு அறவே தெரியாது. அறிவியல் கல்வியோ
அறிவியல் அறிவோ இல்லாத ஜெயமோகன், அறிவியலைக்
கற்று அறிவியலை எழுதும் சுஜாதாவின் அறிவியல்
எழுத்தை எப்படிச் சரியாக எடை போட முடியும்?

ப்ளஸ் 2 பையனின் கணிதத் தேர்வு விடைத்தாளை
அவன் படித்த பள்ளியின் எட்டாங்கிளாஸ் மட்டுமே
படித்த வாட்ச்மேன் திருத்துவது போன்றதுதானே இது.
எட்டாங்கிளாஸ் மட்டுமே படித்த வாட்ச் மேன்,
பள்ளிக்கூடத்தில்  வேலை பார்ப்பதாலேயே பிளஸ் 2
மாணவனின் கணித விடைத்தாளைத் திருத்தும்
உரிமையைப் பெற்று விடுகிறார் என்றால் அது
பெருங்கயமை அல்லவா?  அது போல ஜெயமோகன்
ஒரு எழுத்தாளராக இருப்பதனாலேயே,
may be a prolific writer even, சுஜாதாவின் அறிவியல் எழுத்தை
மதிப்பிடும் அருகதையையோ அல்லது உரிமையையோ
பெற்று விடுகிறார் என்பதும் பெருங்கயமையே.    

அறிவியல் இலக்கியத்தை (science literature)
மதிப்பிடுவதற்கான இலக்கியக் கொள்கைகள் என்ன?
அப்படி என்ன மயிரு கொள்கைகளை ஜெயமோகன்
முன்வைக்கிறார்? அல்லது ஜெயமோகனை விடுங்கள்.
மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து அறிவியல்
இலக்கியத்தை மதிப்பிடுவது எப்படி என்பதற்கான
மதிப்பீட்டு நெறிகளையோ அல்லது நடைமுறைகளையோ
வகுத்து வைத்திருக்கிறார்களா?  ஒன்றும் இல்லையே.

அப்படியிருக்க, சுஜாதாவின் எழுத்து தீவிரமற்ற எழுத்து
என்றும் அது அல்பாயுசில் போய்விடும் என்றும்  
அவரின் அறிவியல் புனைவுகள் தரமற்றவை என்றும்
கூறுவதற்கு அறிவியலையே கற்காத ஜெயமோகனுக்கு
என்ன அருகதை உள்ளது?

சுஜாதா பிரௌனியன் இயக்கம் (Brownian motion) பற்றிப்
போகிற போக்கில் எழுதி விட்டுப் போய் விடுவார்.
தனிக்கட்டுரையாக அல்ல. ஒரு சிறுகதையின்
ஊடாகவோ அல்லது ஒரு கட்டுரையின் ஊடாகவோ
சுஜாதா just like that சொல்லி விட்டுச் சென்று விடுவார்.

இதெல்லாம் ஜெயமோகனுக்குப் புரியுமா?
சிக்கல் எண்கள் பற்றியும் Fractals பற்றியும் சுஜாதா
எழுதி உள்ளார்.  இதெல்லாம் ஜெயமோகனின்
மண்டையில் ஏறுமா?

டி மோவிர் தேற்றம் (De Movir's theorem) பற்றி ஒரு இழவும்
தெரியாமல் சிக்கல் எண்கள் (complex numbers) பற்றியோ
fractals பற்றியோ யாரும் புரிந்து கொள்ள முடியாது.
நிலைமை இப்படியிருக்க, பாவம், டி மோவிர்
தேற்றத்துக்கு எங்கே போவார் ஜெயமோகன்?

இரணியலில் பண்ணி மேய்க்கிற செபாஸ்டியன் கூட
பிளஸ் 2வில் மேத்ஸ் படித்திருக்கிறான். ஒரு எட்டு
இரணியல் வரை சென்று ஜெயமோகன் இதைச்
சரிபார்க்கலாம். 

கடந்த 20 ஆண்டுகளின் சராசரியைப் (2001-2020)
பார்த்தால், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்குக்
குறையாமல் பொறியியல் படித்து விட்டு
(கோர்ஸ் முடித்து விட்டு) வெளியே வருகிறார்கள்
தமிழ்நாட்டில் மாணவர்கள். அறிவியல் கற்காத
முந்தைய சமூகம் அல்ல இது. நான் மேலே சொன்ன
சிக்கல் எண்கள், fractals, டி மாவு தேற்றம்  உட்பட
அனைத்தும் அறிந்த சமூகம் இது. பழைய தற்குறிச்
சமூகமாக இருந்தால், ஜெயமோகன் சொன்னதுதான்
வேதம். இன்று அப்படி அல்ல.    
        
ஆக, முற்றிலும் பழுதுபட்ட ஒரு பார்வையுடனும் 
(wrong perspective), அளவுகடந்த அறியாமையுடனும்
சுஜாதாவை மதிப்பிடுவது என்ற பெயரில் தமது
அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார்
ஜெயமோகன். சுஜாதா பற்றிய அவரின் நேர்மையற்ற
முட்டாள்தனமான மதிப்பீட்டை  தமிழ்ச் சமூகம்
குப்பையில் வீசி எறிகிறது.

தமிழ்ச் சமூகத்திடம் ஜெயமோகன் மன்னிப்புக் கேட்க
வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கோருகிறது.
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
கண்ட பயலும் ஜெயமோகன் மீது காழ்ப்புடன்
அலைகிறான். எல்லாப் பயலும் வன்மம் பிடித்த
பயல்கள். வெளிநாட்டுக் கழிசடை யமுனா ராஜேந்திரன்,
உள்நாட்டுக் கழிசடை ராஜன் குறை, எட்வின் போன்ற
அநேகப் புழுக்கள் ஜெயமோகனின் மாமிசத்தைப்
பட்டசித்து விட வேண்டும் என்று வெறியுடன்
அலைகின்றன.

ஜெயமோகன் மீதான எமது கண்டனம் நியாயமானது.
நமக்கும் காழ்ப்பு, வன்மக் கூட்டத்திற்கும் யாதொரு
தொடர்பும் இல்லை.
**************************************************************    

 
  

 
  





   

சனி, 2 மே, 2020

பெரியாருக்கும் மேதினத்துக்கும் என்ன சம்பந்தம்?
இந்தியாவின் முதல் மேதினம் தமிழ்நாட்டில்தான்
சென்னையில்தான் கொண்டாடப்பட்டது. அதற்கான
ஏற்பாடுகள் அனைத்தையும் செய்து மேதினத்தைத்
தலைமையேற்று நடத்தியவர் கம்யூனிஸ்ட்டான
சிங்காரவேலர்.

சிங்காரவேலர், திருவிக போன்ற பிரிட்டிஷ் ஆட்சியை
எதிர்த்த சக்திகளே மேதினத்தைக் கொண்டாடினர்.
பெரியார் பிரிட்டிஷ் ஆட்சியை விசுவாசத்துடன்
ஆதரித்து நின்றவர். அவருக்கும் மேதினத்துக்கும்
என்ன சம்பந்தம்?

மேதினம் என்பது சம்பளத்துடன் கூடிய விடுமுறை
என்பது மத்திய அரசு ஊழியர்களுக்கு நீண்ட காலமாக
இருந்து வருகிறது. அதைப் பார்த்து, தமிழகத்திலும்
கொண்டு வரப்பட்டது.


thozhar jeevaa avarkale,

தோழர் ஜீவா அவர்களே,
நேற்று நீங்கள் எழுதியது சரி. இன்று எழுதி இருப்பதுதான்
தவறானது. வெளிமாநிலங்களுக்குச் செல்லும்
யார் எவரும் ஒரு பைசா கூட கட்டணமாகச் செலுத்த
வேண்டியதில்லை.

இந்திய ரயில்வே தெளிவாக விளக்கம் அளித்துள்ளது.
பயணிகள் ரயில் சேவையை இந்திய ரயில்வே இன்னும்
தொடங்கவில்லை. தற்போதைய ரயில்கள் மாநில
அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப விடப்படுகின்றன.
அதற்கான கட்டணம் முழுவதையும் மாநில அரசுகள்
செலுத்தி விட்டன.

எனவே பயணிகளிடம் இருந்து கட்டணம் வசூலிக்கப்
படுகிறது என்று இந்து ஏடு எழுதியது பொய் என்று
நிரூபிக்கப் பட்டுள்ளது.

எனவேதான் தமிழ்ச் சமூகம் நெடுகிலும்  அவரால்
அறிவியலைக் கொண்டு செல்ல முடிந்தது.



இதை (இந்து ஏட்டின் செய்தி பொய் என்பதை) நான்
சற்று முன்பு பார்க்க நேர்ந்தது.
எனவே இதைத் தோழரின் கவனத்துக்குக் கொண்டு
வர வேண்டியது என் கடமை. 



த. ஜீவானந்தம் 


எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

என்னால் இரண்டு தரப்பையும் தற்போது நம்ப
முடியவில்லை. எனவே எனது நண்பர் AIRF சங்கத்
தலைவர் ஒருவர் இருக்கிறார். அவரிடம் கேட்க
இருக்கிறேன். 




ஒரு நாளைக்கு நான்கு பக்கமாவது
பொது விஷயங்களைப் படியுங்கள்.
பொது விஷயம் என்றால் கதை, சினிமா, காதல்
இல்லாதவை. சுஜாதா அறிவுரை!  

உறக்கம் என்பது BIOLOGICAL requirement.



மறைந்த எழுத்தாளர் சுஜாதா அறிவுரை.

அவரின் கவிதைகள் குறித்தெல்லாம் எனக்கு
எந்த மதிப்பும் இல்லை.
After all, ஒரு கூத்தாடி அவர்.

அவரின் இந்தக் குறிப்பிட்ட கவிதையில் துகள்களை
எண்ணி இருக்கிறார் (counted physically)  என்று அவரின்
கவிதையைப் பாராட்டி எழுதியவர் தமது கட்டுரையில்
குறிப்பிடுகிறார்.

துகளை எண்ணுதல் (physically counting  செய்தல்) என்பது
என்னைப் பொறுத்தவரை மகத்தான விஷயம்.
ஆனால், கூத்தாடியானவர் துகள்களை எண்ணவே இல்லை
என்று அறிந்த பிறகு இவருக்கு ஏன் இந்தக் கிரிமினல்
வேலை என்று கேட்பது இயற்கை.

ஒரு 10ஆம் வகுப்பு மாணவனோ அல்லது 12ஆம் வகுப்பு
மாணவனோ, ஒரு கிலோ ரவையில் 144 கோடி துகள்கள்
இருக்கின்றன என்று மனதில் பதித்துக் கொள்வானாகில்
அது சமூகத் தீங்கை விளைவிக்கும் செயல். அந்தத் தவறான
சித்திரத்தை அழித்து விட்டு, சரியான சித்திரத்தை வரைய
அறிவியல் பரப்புநர்கள் கூடுதல் மைல்கள் நடக்க வேண்டும்.