திங்கள், 4 மே, 2020

ஜெயமோகனின் கொம்புக் கோட்பாடும்
சுஜாதா பற்றிய தவறான மதிப்பீடும்!
கொம்புக் கோட்பாட்டின் முதுகெலும்பை முறிக்கும் பதில்!
-------------------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------------------------- 
எழுத்தாளன் என்பவன் கொம்பு  முளைத்தவன் என்கிறார்
ஜெயமோகன். வேறு பல எழுத்தாளர்களும் அப்படிக்
கருதுகின்றனர். ஆனால் புதுமைப் பித்தன் அப்படிக்
கருதவில்லை. ஜெயமோகனைப் போலவே ஜெயகாந்தனும்  
கருதி இருக்கக் கூடும்.

ஜெயமோகனின் கொம்புக் கோட்பாடு சரிதானா?
அறிவியல் என்ன சொல்கிறது? மார்க்சியம் என்ன
சொல்கிறது?

கொம்புக் கோட்பாடு முட்டாள்தனமானது என்கிறது
அறிவியல். அறிவியலை வழிமொழிகிறது மார்க்சியம்.
எந்த ஒரு சமூகத்திலும் எது முக்கியத்துவம் பெறும்?
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டு
அதில் செலுத்தப்படும் உழைப்பு மட்டுமே எந்த ஒரு
சமூகத்திலும் மேன்மையானதாகும். 

கதை நாவல் கவிதை எழுதுவதெல்லாம் பொருள்
உற்பத்தியில் வராது. அதெல்லாம் மார்க்சியம்
கூறுகிறபடி, இரண்டாம் பட்சமானது (secondary).

ஜெயமோகன் தம்முடைய இளம் வயதில்
தொலைதொடர்புத் துறையில் பணியாற்றியபோது,
சமூகத்தின் பொருள் உற்பத்தியில் நேரடியாக ஈடுபட்டுத்
தம் உழைப்பைச் செலுத்தினார். பின்னாளில் பணிஓய்வு
பெற்று, பொருள் உற்பத்தியில் இருந்து முற்றிலுமாக விலகி
முழுநேர எழுத்தாளர் ஆனார்.

பொருள் உற்பத்தியில் இருந்து தம்மைத் துண்டித்துக்
கொண்டவர்கள், மலையைப் புரட்டினாலும் அது
இரண்டாம் பட்சமானது தான். 

தமிழ்நாட்டில் அறிவியல் எழுத்து என்பது  வெறும் அடையாளம்
என்ற அளவில்தான் இருந்தது. ந சுப்பு ரெட்டியார்,
பெ நா அப்புசாமி ஆகியோர் எழுதுவதும், கோவை தாமோதரனின் கலைக்கதிரும், மஞ்சரியில் சிறிதளவும் மட்டுமே
1950, 1960களில் அறிவியல் எழுத்து என்பதாக இருந்தது.

இந்நிலையில்தான் சுஜாதா வெண்கலக் கடையில் யானை
புகுந்தது போல தமிழ் இலக்கிய உலகில் அதிரடியாகப்
புகுந்தார். 1970களில்தான் பரவலாக அவர் எழுதத்
தொடங்கி இருந்தார். எதை எழுதினாலும் அதில்
அறிவியல் இருந்தது. (அறிவியல் என்பது தொழில்நுட்பத்தையும்
உள்ளடக்கியது). பெரும்வீச்சு உடைய அறிவியலை,
மொத்தத் தமிழ் வாசகப் பரப்பிலும் கொண்டு
சேர்த்தவர் சுஜாதா.

சுஜாதா குறித்து நாலைந்து கட்டுரைகளை எழுதி
இருக்கிறார் ஜெயமோகன். சுஜாதாவின் அறிவியல்
எழுத்து தீவிரமற்ற எழுத்து என்று அவற்றில்
வரையறுக்கிறார் ஜெயமோகன். சுஜாதாவின் எழுத்து
நீண்ட காலத்திற்கு நிற்காது என்றும் அவரின் அறிவியல்
புனைவுகள் தரமானவை அல்ல என்றும் பலவாறாக 
சுஜாதாவின் அறிவியல் எழுத்தைச் சிறுமைப் படுத்தி
உள்ளார் ஜெயமோகன்.

ஜெயமோகனின் பார்வை (perspective) அறிவியல் எழுத்தின்
மீதான முற்றிலும் இளக்காரமான பார்வை ஆகும். இது
அறிவியலுக்கு எதிரான மூடத்தனமான பார்வை ஆகும்.
அறிவியல் எழுத்தை, அறிவியல் இலக்கியத்தை மதிப்பிடும்
ஒருவர் குறைந்தபட்ச அளவேனும் அறிவியல் கற்றிருக்க
வேண்டும் என்பது நியாயமான எதிர்பார்ப்பு. ஏனெனில்
அறிவியல் எழுத்தை எடைபோட வேண்டுமெனில்,
எடை போடுபவருக்கு அறிவியல் தெரிந்திருக்க
வேண்டும் அல்லவா?

சுஜாதா அறிவியலைக் கற்றவர். அறிவியலைக்
கற்ற பின்னரே அவர் அறிவியலை எழுதுகிறார்.அவரின்
அறிவியல் எழுத்தை எடைபோடும் ஜெயமோகன்
எந்த அளவுக்கு அறிவியலைக் கற்று இருக்கிறார்?
அதாவது ஜெயமோகனின் அறிவியல் தகுதி என்ன?

அறிவியல் என்று ஜெயமோகன் படித்ததெல்லாம்
பத்தாம் வகுப்பு வரையிலானதுதான். பத்தாம்
வகுப்பைத் தாண்டிய அறிவியல் எதுவும்
ஜெயமோகனுக்கு அறவே தெரியாது. அறிவியல் கல்வியோ
அறிவியல் அறிவோ இல்லாத ஜெயமோகன், அறிவியலைக்
கற்று அறிவியலை எழுதும் சுஜாதாவின் அறிவியல்
எழுத்தை எப்படிச் சரியாக எடை போட முடியும்?

ப்ளஸ் 2 பையனின் கணிதத் தேர்வு விடைத்தாளை
அவன் படித்த பள்ளியின் எட்டாங்கிளாஸ் மட்டுமே
படித்த வாட்ச்மேன் திருத்துவது போன்றதுதானே இது.
எட்டாங்கிளாஸ் மட்டுமே படித்த வாட்ச் மேன்,
பள்ளிக்கூடத்தில்  வேலை பார்ப்பதாலேயே பிளஸ் 2
மாணவனின் கணித விடைத்தாளைத் திருத்தும்
உரிமையைப் பெற்று விடுகிறார் என்றால் அது
பெருங்கயமை அல்லவா?  அது போல ஜெயமோகன்
ஒரு எழுத்தாளராக இருப்பதனாலேயே,
may be a prolific writer even, சுஜாதாவின் அறிவியல் எழுத்தை
மதிப்பிடும் அருகதையையோ அல்லது உரிமையையோ
பெற்று விடுகிறார் என்பதும் பெருங்கயமையே.    

அறிவியல் இலக்கியத்தை (science literature)
மதிப்பிடுவதற்கான இலக்கியக் கொள்கைகள் என்ன?
அப்படி என்ன மயிரு கொள்கைகளை ஜெயமோகன்
முன்வைக்கிறார்? அல்லது ஜெயமோகனை விடுங்கள்.
மற்ற எழுத்தாளர்கள் எல்லாம் சேர்ந்து அறிவியல்
இலக்கியத்தை மதிப்பிடுவது எப்படி என்பதற்கான
மதிப்பீட்டு நெறிகளையோ அல்லது நடைமுறைகளையோ
வகுத்து வைத்திருக்கிறார்களா?  ஒன்றும் இல்லையே.

அப்படியிருக்க, சுஜாதாவின் எழுத்து தீவிரமற்ற எழுத்து
என்றும் அது அல்பாயுசில் போய்விடும் என்றும்  
அவரின் அறிவியல் புனைவுகள் தரமற்றவை என்றும்
கூறுவதற்கு அறிவியலையே கற்காத ஜெயமோகனுக்கு
என்ன அருகதை உள்ளது?

சுஜாதா பிரௌனியன் இயக்கம் (Brownian motion) பற்றிப்
போகிற போக்கில் எழுதி விட்டுப் போய் விடுவார்.
தனிக்கட்டுரையாக அல்ல. ஒரு சிறுகதையின்
ஊடாகவோ அல்லது ஒரு கட்டுரையின் ஊடாகவோ
சுஜாதா just like that சொல்லி விட்டுச் சென்று விடுவார்.

இதெல்லாம் ஜெயமோகனுக்குப் புரியுமா?
சிக்கல் எண்கள் பற்றியும் Fractals பற்றியும் சுஜாதா
எழுதி உள்ளார்.  இதெல்லாம் ஜெயமோகனின்
மண்டையில் ஏறுமா?

டி மோவிர் தேற்றம் (De Movir's theorem) பற்றி ஒரு இழவும்
தெரியாமல் சிக்கல் எண்கள் (complex numbers) பற்றியோ
fractals பற்றியோ யாரும் புரிந்து கொள்ள முடியாது.
நிலைமை இப்படியிருக்க, பாவம், டி மோவிர்
தேற்றத்துக்கு எங்கே போவார் ஜெயமோகன்?

இரணியலில் பண்ணி மேய்க்கிற செபாஸ்டியன் கூட
பிளஸ் 2வில் மேத்ஸ் படித்திருக்கிறான். ஒரு எட்டு
இரணியல் வரை சென்று ஜெயமோகன் இதைச்
சரிபார்க்கலாம். 

கடந்த 20 ஆண்டுகளின் சராசரியைப் (2001-2020)
பார்த்தால், ஆண்டொன்றுக்கு ஒரு லட்சம் பேருக்குக்
குறையாமல் பொறியியல் படித்து விட்டு
(கோர்ஸ் முடித்து விட்டு) வெளியே வருகிறார்கள்
தமிழ்நாட்டில் மாணவர்கள். அறிவியல் கற்காத
முந்தைய சமூகம் அல்ல இது. நான் மேலே சொன்ன
சிக்கல் எண்கள், fractals, டி மாவு தேற்றம்  உட்பட
அனைத்தும் அறிந்த சமூகம் இது. பழைய தற்குறிச்
சமூகமாக இருந்தால், ஜெயமோகன் சொன்னதுதான்
வேதம். இன்று அப்படி அல்ல.    
        
ஆக, முற்றிலும் பழுதுபட்ட ஒரு பார்வையுடனும் 
(wrong perspective), அளவுகடந்த அறியாமையுடனும்
சுஜாதாவை மதிப்பிடுவது என்ற பெயரில் தமது
அறியாமையை வெளிச்சம் போட்டுக் காட்டி உள்ளார்
ஜெயமோகன். சுஜாதா பற்றிய அவரின் நேர்மையற்ற
முட்டாள்தனமான மதிப்பீட்டை  தமிழ்ச் சமூகம்
குப்பையில் வீசி எறிகிறது.

தமிழ்ச் சமூகத்திடம் ஜெயமோகன் மன்னிப்புக் கேட்க
வேண்டும் என்று நியூட்டன் அறிவியல் மன்றம்
கோருகிறது.
-----------------------------------------------------------------------------
பின்குறிப்பு:
கண்ட பயலும் ஜெயமோகன் மீது காழ்ப்புடன்
அலைகிறான். எல்லாப் பயலும் வன்மம் பிடித்த
பயல்கள். வெளிநாட்டுக் கழிசடை யமுனா ராஜேந்திரன்,
உள்நாட்டுக் கழிசடை ராஜன் குறை, எட்வின் போன்ற
அநேகப் புழுக்கள் ஜெயமோகனின் மாமிசத்தைப்
பட்டசித்து விட வேண்டும் என்று வெறியுடன்
அலைகின்றன.

ஜெயமோகன் மீதான எமது கண்டனம் நியாயமானது.
நமக்கும் காழ்ப்பு, வன்மக் கூட்டத்திற்கும் யாதொரு
தொடர்பும் இல்லை.
**************************************************************    

 
  

 
  





   

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக