ஞாயிறு, 17 மே, 2020

ரூ 2 லட்சம் காசோலை மோசடி வழக்கில்
கேரள உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப் பட்டதே
ரெஹானா பாத்திமாவின் வேலைநீக்கத்திற்குக் காரணம்!
------------------------------------------------------------------------------------
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்
---------------------------------------------------------------------
ரெஹானா பாத்திமா என்பவர் கேரளத்தைச் சேர்ந்த
ஒரு இஸ்லாமியப் பெண். இவரின் முழுப்பெயர்
ரெஹானா பாத்திமா பியாரிஜான் சுலைமான்.
சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு இளம் பெண்களும்
போகலாம் என்ற உச்சநீதிமன்றத் தீர்ப்பை ஒட்டி,
சபரிமலைக்குச் செல்ல முயன்று நாடு முழுவதும்
பிரபலம் ஆனவர் இவர்.

இவரின் இணைய பக்கத்திற்குச் சென்று பார்த்தால்,
இவர் தமது நிர்வாணப் படத்தையே profile pectureஆக
வைத்திருக்கிறார். அதில் இவர் எழுதியுள்ள
வாசகங்களைப் படித்தால் குமட்டுகிறது.

"பிறக்கும்போதே எனக்கு ஆண்குறியும்
யோனியும் இரண்டும் இருக்கின்றன.
நான் ஆண் பெண் இருவருடனும் உறவு கொள்வேன்".
(ஆங்கில வாசகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு)

ரெஹானா பாத்திமா சுலைமான் ஒரு பின்நவீனத்துவக்
காமவெறிப் பெண் ஆவார். பின்நவீனத்துவம்
கழிபெருங்காமத்தை ஆதரிக்கிறது. பின்நவீனத்துவம்
என்றால் என்ன என்று தெரிந்து கொள்ளாமல் இந்தக்
கட்டுரையைப் புரிந்து கொள்ள முடியாது.

தலைப்பில் கூறப்பட்ட வேலைநீக்கம் என்பதன்
பொருள் ரெஹானா பாத்திமாவுக்கு கட்டாய ஒய்வு
கொடுக்கப் பட்டுள்ளது என்பதே. ரெஹானா பாத்திமா
BSNL நிறுவனத்தில் டெக்னீஷியனாகப் பணிபுரிந்து
வந்தவர்.

அவர் மீதான குற்றச்சாட்டுக்களின் பேரில், ஒரு உள்ளக
விசாரணையை BSNL ஊழல் தடுப்புப் பிரிவு (Vigilance section)
நடத்தியது. குற்றங்கள் நிரூபிக்கப் பட்டன என்று
விசாரணை அதிகாரி அறிக்கை அளித்தார். அதன் பேரில்
Competent Disciplinary authority ரெஹானா பாத்திமாவுக்கு
மே 14, 2020 அன்று கட்டாய ஒய்வு அளித்து உத்தரவு
பிறப்பித்தார்.

கட்டாய ஒய்வு என்ற தண்டனையை வழங்கக் காரணம்
என்ன? சபரிமலை கோவிலுக்குச் செல்ல முயன்றார்
என்பதோ, சமூக அமைதியைக் குலைக்கும் விதத்தில்
முகநூலில் எழுதினார் என்பதோ செயல்பட்டார் என்பதோ
வேலைநீக்கம் செய்யும் அளவுக்கான குற்றங்கள் அல்ல.
ஒன்றிரண்டு இன்கிரிமென்ட்டுகளை வெட்டுவது 
அல்லது அதிகபட்சம் 5 ஆண்டு ஊதியக் குறைப்பு
(Pay reduction) செய்வது என்பதற்கு மேல் இந்தக்
குற்றங்களுக்கு தண்டனை வழங்க முடியாது.

அப்படியானால் அவர் இழைத்த எந்தக் குற்றம் அவரின்
வேலைநீக்கத்திற்குக் காரணம் ஆனது?
ரூ இரண்டு லட்சம் கடன் வாங்கி விட்டு, திருப்பிக்
கொடுக்காமல், இவர் கொடுத்த காசோலை திரும்பி விட,
இவர் மீது வழக்குத் தொடரப்பட்டது. அந்த வழக்கில்
ஆலப்புழை கீழமை நீதிமன்றம் இவரைத் தண்டித்தது.
கேரள உயர்நீதிமன்றமும் இவரின் தண்டனையை உறுதி
செய்தது.

நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவர் அரசுப் பணியிலோ
அல்லது BSNL நிறுவனத்திலோ நீடிக்க முடியாது என்கிறது
சட்டம். (Persons convicted by a court of law cannot continue in the ranks
of  BSNL).

இரண்டு நீதிமன்றங்களால் தண்டிக்கப்பட்ட ஒருவர்
BSNL நிறுவனத்தில் ஒரு ஊழியராக ஒருபோதும்
நீடிக்க முடியாது. இதுதான் கட்டாய ஒய்வு என்ற
பெயரில் இவரை வேலையை விட்டு நீக்கியதற்கான
காரணம். இது மட்டுமே காரணம்.

இந்த ரெஹானா பாத்திமாவுக்கு புரட்சி வேஷம் கட்ட
முயன்றுள்ள சில பின்நவீனத்துவர்கள் சபரிமலை
கோவிலுக்குச் செல்ல இவர் முயன்றதுதான் காரணம் என்று
பொய் சொல்கிறார்கள். இவர்கள் யாரும் மத்திய
அரசின் சட்ட திட்டம் குறித்தோ, BSNL CDA Rules குறித்தோ
ஒரு இழவும் தெரியாத முட்டாள்கள். சபரிமலை
கோவிலுக்குப் போக முயன்றதற்கு இன்கிரிமென்ட்டை
வெட்டலாமே தவிர வேலைநீக்கம் செய்ய முடியாது.
ஒருவேளை உள்ளக விசாரணையில் வேலைநீக்கம்
என்று தீர்ப்பு வழங்கி இருந்தாலும், பாதிக்கப்பட்ட ஊழியர்
நீதிமன்றத்தில் முறையீடு செய்யும்போது, வேலைநீக்க
தண்டனை ரத்தாகி விடும்.

BSNLல் டெக்னீஷியனாக வேலை பார்த்த போது, குறைந்த
பட்சமாக மாதச்சம்பளம் ரூ 50,000 வாங்கினார் ரெஹானா
பாத்திமா சுலைமான். கொச்சி போன்ற சிறுநகரத்தில்
இது ஒரு decent salaryதான். என்றாலும் ரெஹானா
பாத்திமாவுக்கு இது போதாது. அவருடைய
வித விதமான போஸ்களில் அமைந்த புகைப்படங்கள்,
அதற்கான உடைகள் என்று அவருடைய பின்நவீனத்துவ
ஆடம்பர வாழ்க்கைக்கு BSNL தரும் ரூ 50,000 சம்பளம்
வெறும் பிச்சைக்காசுதான். அவருடைய Costly lifeக்கு
மாதந்தோறும் சில லட்சம் வேண்டும்.

இதற்கு எங்கே போவார் ரெஹானா பாத்திமா? எனவே
பலரிடமும் கடன் வாங்கி பலரையும் ஏமாற்றினார்.
அதில் விழிப்புடன் இருந்த ஒருவரிடம் மாட்டிக் கொண்டு
காசோலை மோசடிக்கு தண்டனை பெற்று இன்று
வேலையையும் இழந்து நிற்கிறார்.

உள்ளக விசாரணைகளில் 99 சதவீதம் வழக்குகள்
merits of the case என்ற அடிப்படையிலேயே தீர்க்கப்படும்.
சமூக அரசியல் கூறுகள் வெளிப்பட்டு நிற்கும் சில
அபூர்வமான வழக்குகளில் அரசியல் ரீதியாகவும்
முடிவு எடுக்கப்படும். ரெஹானா பாத்திமாவின்
வழக்கானது, சபரிமலை கோவில் குறித்து சமூகப்
பதட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டால்,
அரசியல் வழக்காகவும் கவனம் பெற்றது. இது கேரள
மக்கள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

உயர்நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட ஒருவரை
வேலைநீக்கம் செய்வதைத் தவிர வேறு வழியே இல்லை
என்ற நிலையில் உள்ளக விசாரணையில் ரெஹானா
பாத்திமாவுக்கு கட்டாய ஒய்வு வழங்கப் பட்டிருக்கிறது.
இது கேரளத்தின் மார்க்சிஸ்ட் அரசு ரெஹானாவுக்குக்
காட்டிய சலுகையாகும்.

Removed from service அல்லது Dismissed from service  என்று
நேரடியாக ஒரு straight forward தண்டனையைக்
கொடுத்தால் பாஜக ஆர்எஸ்எஸ் போன்ற சக்திகளுக்கு
சாதகமாகி விடும் என்பதால், மூன்று விதமான
வேலைநீக்கத்தில், கட்டாய ஓய்வைத் தேர்ந்தெடுத்து
இருக்கிறது பினராயி விஜயனின் மார்க்சிஸ்ட் அரசு.   
**************************************************************   
மத்திய அரசு நிறுவனமான BSNLன் கொள்கை முடிவுகள்,
டெண்டர்கள் போன்றவற்றில் மாநில அரசு தலையிட
முடியாது.   

ஆனால் இதுபோன்ற முடிவுகளில், Human factor கொண்ட
விஷயத்தில் மாநில அரசு பிரமாதமாகத் தலையிட
முடியும். மத்திய அரசு ஊழியராக, ரயில்வேயிலோ
அஞ்சல் துறையிலோ அல்லது பாதுகாப்புத் துறையிலோ
நீங்கள் பணியாற்றி இருந்தால், நேரடி அனுபவம்
மூலமாகவே உங்களுக்குத் தெரிய வரும்.  

மத்திய அரசுக்கென்று தனியாகக் குடிமக்கள் (citizens)
கிடையாது. எல்லோரும் மாநில அரசின் குடிமக்களே.

கேரளத்தில் BSNL நிறுவனத்தில் மிகுந்த செல்வாக்கோடு
இருக்கும் சங்கங்கள், அங்கீகரிக்கப்பட்ட சங்கங்கள்
யாவும் கம்யூனிஸ்ட் சங்கங்களே (BSNLEU, NFTE).
மார்க்சிஸ்ட் கட்சியால் இயக்கப்படும் BSNLEU சங்கமே
கேரளத்தில் முதன்மைச் சங்கமாக இருக்கிறது.

ஊழியர்கள் சம்பந்தப்பட்ட விஷயத்தில் இந்தக்
கம்யூனிஸ்ட் சங்கங்களைப் புறக்கணித்தோ அல்லது
பகைத்துக் கொண்டோ BSNL நிர்வாகத்தால் செயல்பட
முடியாது.

எனவே ஊழியர்கள் சம்பந்தப்பட்ட ஒரு விஷயத்தில்
கேரள மார்க்சிஸ்ட் அரசானது, தனது தொழிற்சங்கம்
மூலமாக செல்வாக்குச் செலுத்துவது காலங்காலமாக
நடந்து வருவதுதான்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக