சனி, 30 மே, 2020

மிஸ்டர் திலீபன் செல்வராசன்,
அசைக்க முடியாத ஆதாரத்துடன் இந்தக் கட்டுரையை
நான் எழுதி உள்ளேன். இதை எழுதியது சென்ற ஆண்டு
2019 நவம்பரில்.

காங்கிரஸ் ஆட்சியில் என்ன கொடுக்கப் பட்டது?
ஆதாரம் இருந்தால் தரவும். நான் இங்கு அகில இந்திய
ஒதுக்கீட்டு இடங்களில் பிற்பட்டோர் ஒதுக்கீடு
(OBC reservation in All India Quota) பற்றிப் பேசுகிறேன்.

நான் கடந்த 20 ஆண்டுகளாக எண்களின் நியூட்டன் அறிவியல்
மன்றத்தின் மூலம் IIT, Medical இடங்கள் குறித்தும்
அவற்றில் OBC இட ஒதுக்கீடு குறித்தும் பிரச்சாரம்
செய்தும் இயக்கம் நடத்தியும் வருகிறோம்.

All India Quota இடங்கள் என்றால்
என்ன என்று கட்டுரையில் தெளிவாக விளக்கி
இருக்கிறேன். MBBS/BDS படிப்பில், மாநில அரசுகள்
மத்தியத் தொகுப்புக்கு ஒதுக்குகிற 15 சத இடங்களைப்
பற்றிப் பேசுகிறோம் என்று உணர்க.

இந்த 15 சத இடங்களில், மத்திய அரசின் கல்வி
நிறுவனங்களான (Medical Institutes of central Govt)
AIIMS போன்றவற்றில் இடஒதுக்கீடு அளித்தது
போக, மீதமுள்ள அகில இந்திய இடங்களில்
OBCக்கு ஏன் வழங்கவில்லை? 93ஆவது அரசமைப்புச் சட்டம்
பற்றி என்னுடைய கட்டுரையில் எழுதி இருக்கிறேனே,
அதை படித்தாலே தெரியுமே!

எதையும் புரிந்து கொள்ளாமல்,
புரிந்து கொள்ள முயற்சி செய்யாமல் பேசுவது சரியல்ல.  
நீங்கள் கூறுவது முற்றிலும் தவறு. நீங்கள் வணங்கும்
கடவுளின் அருளால், நீங்கள் கூறுவது தப்பு என்று
நீங்களே உணரக் கடவது.
Please try to understand that you are not talking to a layman.


மக்களை எப்படியெல்லாம் ஏமாற்றுகிறார்கள் பாருங்கள்.
SC க்கு ஒதுக்கீடு கொடுக்கும் மன்மோகன்சிங், BCக்கு
கொடுக்க மறுக்கும்போது, மத்திய அரசின் சுகாதாரத்
துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி.





  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக