வியாழன், 28 மே, 2020

உபி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பாப்பர்!
காங்கிரசின் தோல்வி எவ்வளவு பெரிது என்று பார்ப்போம்!
---------------------------------------------------------------------------------------------
1) இந்தி நடிகர் ராஜ் பப்பர் இந்தி பேசும் மாநிலங்களில்
நன்கு அறிமுகம் ஆனவர். இவர் ஓர் இந்தி நடிகர்.
நம்மூர் விஜயகாந்த் போன்ற நடிகர் இவர்.
2) ஸ்மிதா பட்டீல் என்ற நடிகையை இந்திப்படம்
பார்ப்பவர்கள் அறிவார்கள். இவரை ராஜ் பப்பர்
திருமணம் செய்து இரண்டாம் மனைவியாகக்
கொண்டு வாழ்ந்து வருகிறார்.
3) இவரைப்பற்றி ஏன் நாம் தெரிந்து கொள்ள வேண்டும்?
இவர்தான் உபி மாநில காங்கிரஸ் தலைவர். இந்தியாவின்
மிகப்பெரிய மாநிலம் உபி. இங்கு மட்டும் 80 MP தொகுதிகள்
உள்ளன.
4) ராஜ் பப்பர் மூன்று முறை மக்களவை உறுப்பினராகவும்
இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராகவும்
இருந்தவர். எனவே சாதாரண ஆள் அல்ல.பெரும் புள்ளி.
5) தற்போது 2019 தேர்தலில் ராஜ் பப்பர் உபியில் ஆக்ராவுக்கு
அருகில் உள்ள பதேபூர் சிக்ரி என்ற தொகுதியில்
போட்டி இட்டார். தோற்றுப் போனார். டெபாசிட்டும்
இழந்து விட்டார்.
6) வாக்கு விவரம்: பதேபூர் சிக்ரி (உபி)
பதிவான வாக்குகள் = 10,37,151
ராஜ்குமார் சாகர் (பாஜக) = 6,67,147 (64.32 சதம்)
ராஜ் பப்பர் (காங்) = 1,72,082 (16.59 சதம்)
சர்மா (பகுஜன்) = 1,68,043 (16.2 சதம்)
பாஜக வெற்றி! வாக்கு வித்தியாசம் = 4,95,065.
7) கிட்டத்தட்ட 5 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் நடிகர்
ராஜ் பப்பர் தோல்வி அடைந்து டெபாசிட்டையும்
பறி கொடுத்துள்ளார். பாஜக வேட்பாளர் 64.32 சதம்
வாக்கு வாங்கி உள்ளார்.
8) உபி மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும்
காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. சோனியா காந்தியின்
வெற்றியே அது. இந்த வெற்றிக்குக் காரணம் மாயாவதியும்
அகிலேஷும் சோனியாவை எதிர்த்து வேட்பாளரை
நிறுத்தவில்லை. அதாவது சோனியாவின் வெற்றி
மாயாவதி போட்ட பிச்சை!
11) ஐந்து முறை எம்பி ஆக இருந்த, நாடறிந்த நடிகர்,
உபி மாநில காங்கிரஸ் தலைவர் ராஜ் பப்பர்
டெபாசிட் இழக்கிறார். இது உபியில்!
12) உபியில் காங்கிரஸ் தோற்று விட்டது என்று
மட்டுமே நாம் அறிந்து வைத்து இருக்கிறோம்.
அந்தத் தோல்வியின் பரிமாணம் (scale or dimension)
எவ்வளவு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
13) தமிழர்கள் கிணற்றுத் தவளைகளாக இருந்து
விடக்கூடாது. குண்டுச் சட்டியில் குதிரை
ஓட்டுபவர்களாக இருந்து விடக்கூடாது. பிற
மாநிலங்களில் என்ன நடந்திருக்கிறது என்று அறிந்து
கொள்ள வேண்டும். அதற்காகவே இந்தக் கட்டுரை.
14) உபியில் காங்கிரஸ் அடைந்த தோல்வி
மிகவும் பருமனானது. அமேதி தொகுதியில் ராகுலே 
தோற்று விட்டாரே!
------------------------------------------------------------------------------

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக