ஞாயிறு, 31 மே, 2020

கலிலியோ
கலிலியோ மிகுந்த
நம்பிக்கை கொண்ட கிறிஸ்தவர்.
வாடிகனில் உள்ள
கத்தோலிக்க
தேவாலயத்திற்கும், கலிலியோவிற்கும்
ஏற்பட்ட சச்சரவுகள்
அறிவியல் வரலாற்றில்
ஒரு திருப்புமுனையாகும்!!
பைசா நகரின்
தேவாலயத்தில்
நீளமும், குட்டையுமான
இரண்டு சர விளக்குகள் ஆடும்போது
ஒரே அளவிலான நேரத்தை எடுத்துக் கொள்வதை
தன் நாடித் துடிப்புகள் மூலம் நேரத்தை கணக்கிட்டு
ஊசல் விதியை கண்டுபிடித்தார்!
காற்றிலும், நீரிலும்
ஒரு பொருளின் எடையை துல்லியமாக கணக்கிடும் கருவியை
(Hydrostatic Balance ) உருவாக்கினார்.
எட்டு மடங்கு
உருப்பெருக்கம் தரக்கூடிய தொலைநோக்கியை கண்டுபிடித்தார்,
பின்பு
ஐம்பது மடங்கு உருப்பெருக்கும் தொலைநோக்கியை
(Telescope)
கண்டுபிடித்து
வானவியலின் அற்புதங்களை
விளக்கினார்!
இயக்கவியலில்
செய்த சாதனைகள்
அவருக்கு,
"நவீன அறிவியலின் தந்தை"
என்று பெயர் பெற்றுத் தந்தது.
கிரேக்க அறிஞர்
அரிஸ்டாட்டில்
"பொது அறிவுப் பார்வையில்"
இயற்பியலை
அணுகியதால்
அவருடைய தத்துவங்கள்
தவறானவை என்பதை
ஒன்றன்பின் ஒன்றாக
அறிவியல் பூர்வமாக
நிரூபித்தார் கலிலியோ.
அரிஸ்டாட்டில்
ஜியோ சென்ட்ரிக் தத்துவத்தை
(பூமி மையக் கோட்பாடு ) அறிமுகம் செய்தார்,
கலிலியோ
தனக்கு முன்னதாக
கோபர்நிக்கஸ்
உருவாக்கிய
ஹீலியோ சென்ட்ரிக்
தத்துவத்தை
(சூரிய மையக் கோட்பாடு )
அறிவியல் மூலம் நிரூபித்தார்!
1609ம் ஆண்டு
கலிலியோ தொலைநோக்கி மூலமாக நிலவில்
மலைகளை கண்டார்,
ஜுபிடருக்கு
நான்கு நிலவுகள் இருப்பதை கண்டறிந்தார்!
வீனஸ் கிரகத்திற்கு
சந்திரனைப் போல்
பிறைகள் உண்டு என்பதை கண்டறிந்தார்.
இது வானவியலில்
பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
கோபர்நிக்கஸின் தத்துவத்தை உண்மை என நிரூபித்தார்.
அரிஸ்டாட்டிலின்
தத்துவங்களை உள்ளடக்கிய
கிறிஸ்தவ மத நம்பிக்கைகளுக்கு
எதிரானதாகவே
கோபர் நிக்கஸின்
வானவியல் தத்துவங்கள் இருந்தது!
கலிலியோவின்
வானவியல், இயற்பியல் கருத்துக்களை
அறிவியல் ரீதியாக
எதிர்க்க முடியாதவர்கள்
ஒன்றிணைந்து
கோபர்நிக்கஸின் தத்துவம் விவிலியத்திற்க்கு
எதிரானது என்றும்,
கலிலியோ,
தேவாலயத்தின்
மத நம்பிக்கைகளுக்கு
எதிரானவர் என்றும்,
பைபிளின்
பாதையை விட்டு
மாற்றுப் பாதையை
தேர்ந்தெடுத்த
குற்றத்திற்க்கு ஆளானவர் என்றும்,
சட்டப்படி
தணடனைக்குரிய குற்றம் செய்தவர் என்றும்
வாதிட்டனர்!!
அறிவியலின்
அடிப்படை வேர் என்பது
இயற்கை நிகழ்வுகளை,
இயற்கையான
காரணங்களைக் கொண்டே விளக்க வேண்டும் என்பதே கலிலியோவின் கொள்கை!
நம்மை மீறிய சக்திகளின் செயல்பாடுகள்
என்ற நம்பிக்கையை அறிவியலுக்குள்
கொண்டு வரக்கூடாது என்றார்.
கலிலியோவின்
இந்த அடிப்படை கொள்கையை
கிறிஸ்தவம் அசைத்துப் பார்த்தது,
"இந்துத்துவா தத்துவம்"
சேது சமுத்திர திட்டத்திலும்,
பாப்ரி மஜித்திலும்
அசைக்கப் பார்க்கிறது!!
மக்களின் அறியாமையையும்,
மத குருமார்கள்
என்ற போர்வையில்
தங்களை பாதுகாத்துக் கொள்ளும்
பெரிய கும்பலுக்கு எதிராக பேரார்வம் மிக்க,
பகுத்தறிவுச் சிந்தனைகளின் பிரதிநிதியாக,
எழுந்து நின்ற மாமனிதர் கலிலியோ.
கலிலியோவின்
வானவியல் கண்டுபிடிப்புகள், அதன் வெற்றிகள்,
வாதங்கள், சச்சரவுகள்,
இவைகளெல்லாம்
தேவாலயத்திற்கு
ஒரு நிர்பந்தத்தை
ஏற்படுத்தியது.
அறிவியலை விட்டு
விலகுவதைத் தவிர
வேறு வழியே இல்லாமல் போய்விட்டது!
மேலும்,
அறிவியலை
மதங்களின் பிடியில் இருந்து விடுவித்து,
சுயாட்சியுடன் சுதந்திரமாக செயல்படுவதற்கு
கலிலியோவின் வருகை
மிக முக்கியமான காரணமாக இருந்தது.
மனிதனின் வளர்ச்சிக்கு
மதம் தடையாக உள்ளது
என்ற நிலையை
கலிலியோவின் கொள்கை உறுதிப்படுத்தி விட்டது,
புனித நூல்கள்
ஒரு விஷயத்தில்
தவறு புரியக்கூடியவை
என்று ஒப்புக்கொண்டால்
மற்ற விஷயங்களில்
புனித நூல்களின்
நம்பகத் தன்மையை
ஏன் சந்தேகிக்கக்கூடாது
என்ற கேள்வி எழும்.
எனவே தேவாலயம்
கலிலியோ மீது சுமத்திய குற்றச்சாட்டை உறுதிசெய்து "வீட்டுச்சிறை" தண்டனை வழங்கியது!
1642 ஜனவரி 8ம் தேதி
கலிலியோ வீட்டுச் சிறையிலேயே
உயிரை இழந்தார்!
1981ம் ஆண்டு
கலிலியோ விவகாரத்தில் தேவாலயம்
தனது தவறுகளை ஒப்புக்கொண்டது.


2009ம் ஆண்டு
வானவியல் ஆராய்ச்சியின் 400வது ஆண்டு விழாவில் வாடிகன் நகரில்
கலிலியாவிற்கு
சிலை வைப்பதாக
தேவாலயம் முடிவு செய்தது!!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக