புதன், 13 மே, 2020

(2) வசுமித்ர எந்த நேரமும் கொலை செய்யப் படலாம்!
தொடரின் (அம்பேத்கர்/அவமதிப்பு/வசுமித்ர) 2ஆம் கட்டுரை!
----------------------------------------------------------------------------------
"அவதூறாக எழுதி விட்டாராம் வசுமித்ர! கேஸ் போட்டு
விட்டார்கள்" என்ற செய்தி எங்களுக்குக் கிடைத்தபோது
மார்க்சைப் பற்றியோ, லெனினைப் பற்றியோ பக்குவம்
இல்லாமல் ஏதோ உளறி, மாட்டிக் கொண்டு விட்டார்
வசுமித்ர என்றுதான் நாங்கள் நினைத்தோம்.

கொஞ்ச நேரத்திலேயே அப்படி இல்லை என்று தெரிய
வந்தது. மார்க்சிய மூல ஆசான்கள் ஐவரையோ (மார்க்ஸ்,
எங்கல்ஸ், லெனின், ஸ்டாலின், மாவோ), இந்தியாவின்
கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் (CPI, CPM,CPI ML)
எவரையுமோ வசுமித்ர குறிப்பிடவில்லை என்று
தெரிய வந்தது.

தலைவர்கள் என்றால் இரண்டே இரண்டு வகைதான்!
1. கம்யூனிஸ்ட் தலைவர்கள்                                         
(அதாவது பாட்டாளி வர்க்கத் தலைவர்கள்).
2. பூர்ஷ்வா  தலைவர்கள்
அதாவது ஆளும் வர்க்கத் தலைவர்கள்.

கம்யூனிஸ்ட் தலைவர்களை வசுமித்ர அவதூறு
செய்யவில்லை என்பது நிரூபணம் ஆகி விட்டதால்,
ஆளும் வர்க்கத் தலைவர்களைத்தான் அவர் அவதூறு
செய்திருக்க வேண்டும். இதுதான் தவிர்க்க இயலாத தர்க்கம்.
(வசுமித்ர அவதூறு செய்தார் என்பது purely for the sake of argument)
எனவே எவரோ ஒரு ஆளும் வர்க்கத் தலைவரை அவதூறு
செய்து விட்டதாக வசுமித்ர மீது Libel suit போடப்பட்டிருக்க
வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் Libel suit அல்ல, SC-ST வன்கொடுமைத் தடுப்புச்
சட்டமே வசுமித்ரவுக்கு எதிராகப் பிரயோகிக்கப் பட்டு
விட்டது என்றும், அம்பேத்கருக்கு வசுமித்ர வன்கொடுமை
இழைத்து விட்டதாகப் புகார் அளிக்கப்பட்டுவிட்டது என்றும்
அறிந்தோம்; அதிர்ந்தோம்.

வன்கொடுமைச் சட்டத்திற்குப் பதில், வசுமித்ர மீது
மார்க்சிஸ்ட் கட்சியானது அவதூறு வழக்கு (Libel suit)
தொடுத்திருக்கலாம். இது உலகியல் முறைமையோடு
பொருந்தி நிற்கும். இதை சமூகம் ஏற்கும். இதில்
abnormality எதுவும் இல்லை என்று பொதுச் சமூகம் அறியும்.

ஆனால் உலகியலை ஏற்க மறுத்து, அவதூறு வழக்கின்
இடத்தில் வன்கொடுமைச் சட்டத்தை வைக்கிறது
மார்க்சிஸ்ட் கட்சி. துலாபாரத்தில் 5 கிராம் எடை
வைத்தால் போதும் என்கிற இடத்தில், 5 மெட்ரிக் டன்
எடையை வைப்பது போன்றது இது.

வன்கொடுமைச் சட்டத்தால் மட்டுமே வசுமித்ர
இழைத்தாகக் கூறப்படும் தவறுக்குத் தீர்வு காண முடியும்
என்று மார்க்சிஸ்ட் கட்சி கருதவில்லை என்பதை
நானறிவேன். இங்கு அம்பேத்கரோ வன்கொடுமையோ
மார்க்சிஸ்ட் கட்சிக்குப் பிரச்சினை அல்ல. பிரச்சினை
வசுமித்ர என்கிற தனிநபர்தான். வன்கொடுமைச்
சட்டத்தில் வழக்கு என்பதெல்லாம் தனி மனித வன்மத்தின்
வெளிப்பாடுதான்.

செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத்து
இயற்கை அறிந்து செயல்.
(குறள்: 637, அதிகாரம்: அமைச்சு).

செயல்களைச் செய்வதற்கான புதுப்புது வழிமுறைகளை
நூலறிவால்  ஒருவன் பெற்றிருந்தாலும், உலகத்து
மாந்தரின் இயற்கை நியதி என்ன என்பதை அறிந்து,
அதனோடு பொருந்துமாறு செய்ய வேண்டும்.
(வீரை பி இளஞ்சேட்சென்னி உரை).

"The punishment should commensurate with the gravity of the offence"
என்பது சட்டத்தின் ஒரு முக்கிய அம்சம். மார்க்சிஸ்ட்
கட்சியின் வழக்கறிஞர்கள் இந்த அம்சத்தைத்
தங்களின் தலைமைக்கு எடுத்துச் சொல்வார்கள்
என்று நம்புகிறேன். சிவப்பு விளக்கு எரியும்போது
சாலையைக் கடந்தவன்  பாரிய குற்றத்தை இழைத்து
விட்டான் என்று கருதி அவனுக்கு ஆயுள் தண்டனை
வழங்க முடியாது.

அம்பேத்கர் மீதான மார்க்சிஸ்ட் கட்சியின் அபரிமிதமான
மரியாதை போலித்தனமானது. இந்தியாவில் உள்ள
கட்சிகளிலேயே அம்பேத்கரை அதிகபட்சமாக இழிவு
படுத்தும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சிதான். பட்டியல்
இனத்தவரின் பிரதிநித்துவம் ஒவ்வொரு இடத்திலும்
இருக்க வேண்டும் என்பதுதான் அம்பேத்கரின்
நோக்கம்.

முறைப்படி மாவட்ட, மாநில, அகில இந்திய மாநாடுகளை
நடத்தி நிர்வாகிகளைத் தேர்ந்தெடுப்பதில் சிறப்பிடம்
பெறும் கட்சி மார்க்சிஸ்ட் கட்சி. ஆனால் இதுவரை
நடந்த மாநாடுகளில், மத்தியக் கமிட்டியிலோ பொலிட்
பீரோவிலோ ஒரு பட்டியல் இனத்தவருக்குக் கூட இடம்
கொடுக்காத மார்க்சிஸ்ட் கட்சியை விட, அம்பேத்கருக்கு
வன்கொடுமையை யார் இழைத்து விட முடியும்?

பங்காரு லட்சுமணன், டாக்டர் கிருபாநிதி என்று கட்சித்
தலைமையிலும், ராம்நாத் கோவிந்த் என்று அரசுத்
தலைமையிலும் இந்துத்துவ பார்ப்பனீய சங்கிகளான
பாஜக கட்சியினரே பட்டியல் சாதியினருக்குப் பிரதிநித்துவம் கொடுக்கும்போது, இன்னும் எத்தனை
காலம்தான், பட்டியல் இனத்தவரை மார்க்சிஸ்ட் கட்சி
ஏமாற்றும்?

1) வசுமித்ர எழுதிய அந்த ஒற்றை வாக்கியம்
அம்பேத்கருக்கு வன்கொடுமை இழைக்கிறதா?
 .........................அல்லது...........................
2) 1920ல் ரஷ்யாவின் தாஷ்கண்டில் தொடங்கப்பட்டு,
நூறாண்டு வரலாற்றைக் கொண்ட மார்க்சிஸ்ட் கட்சி
இதுவரை ஒரே ஒரு தலித்துக்குக் கூட மத்தியக்
கமிட்டித் தலைமையில் இடமளிக்காமல் மொத்த
தலித்துகளுக்கும் வன்கொடுமை இழைக்கிறதா?
*********************************************************
முக்கிய குறிப்பு:
வசுமித்ர எந்த நேரமும் மார்க்சிஸ்ட் குண்டர்களால்
கொலை செய்யப் படலாம் என்று கருதுகிறேன்.
இதற்கான நிகழ்தகவு = 0.65 என்று கணக்கிட்டுள்ளேன்.

இதுவே கேரளவாக இருந்தால், இந்நேரத்துக்குள்
வசுமித்ர கொலை செய்யப்பட்டு இருப்பார்.
தமிழ்நாடாக இருப்பதால் வசுமித்ர உயிருடன்
இருக்கிறார்.

தனக்கு விடுக்கப் பட்ட கொலை மிரட்டல் குறித்து
மெத்தனம் காட்டாமல், போலீஸ் கமிஷனரை நேரில்
சந்தித்து புகார் அளிப்பதே அறிவுடைமை என்று வசுமித்ர
உணரா வேண்டும். எதிரி சட்டப்படி காய் நகர்த்தும்போது
நாமும் சட்டப்படி நடந்து, நமக்குரிய பாதுகாப்பை
உறுதி செய்ய வேண்டும். இது குறித்த தகுந்த IQ
உடையவர்களை வசுமித்ர கலந்தாலோசிக்க வேண்டும்.
--------------------------------------------------------------------------------------
தொடரும்
-------------------------------------------------------------------------------------
கட்டுரை ஆக்கம்:
பி இளங்கோ சுப்பிரமணியன்
முன்னாள் மாவட்டச் செயலாளர்
NFTE BSNL, சென்னை மாவட்டம்.
வெளியீடு: நியூட்டன் அறிவியல் மன்றம்.
****************************************************   

                       (வசுமித்ர அவதூறு செய்தார் என்பது purely for the sake of argument)

         





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக