திங்கள், 4 மே, 2020

கடவுள் இருக்கிறார் என்று உறுதிபடக் கூறவில்லை.
ஸ்ரீரங்கம் சென்று ரெங்கநாதரை சேவித்த சுஜாதா
கடவுள் இருக்கிறார் என்று அடித்துக் கூற வேண்டாமா?

அதற்கு மாறாக,
 என்று கேள்வி எழுப்பி,  வாழ்ந்த   று ரெங்கநாதரை சேவித்தார்.
இலக்கியப்


வைணவரான சுஜாதா கடவுளின் இருப்பை ஏற்கிறார்.
ஆனால் அறிவியலாளரான சுஜாதாவால் கடவுளின்
இருப்பை ஏற்க இயலவில்லை. ஏனெனில் கடவுளின்
இருப்புக்கு இன்று வரை எந்தத் தடயமோ ஆதாரமோ
இல்லை. எனவேதான் " It depends" என்ற பதிலை அவர்
தருகிறார். கடவுள் இருக்கிறார் என்று நிரூபிக்க இயலாத
நிலையில் சுஜாதாவால் அப்படித்தான் பதிலளிக்க முடியும்.

அக்நாஸ்டிசிசம் என்பதெல்லாம் சுஜாதாவிடம் கிடையாது.
அவர் மிகத் தெளிவானவர். எனவே ஒரு quantum superpositionஐ
முன்வைக்கிறார். It depends என்பதற்கு அதுதான் அர்த்தம்;
அது மட்டுமே அர்த்தம்.

ஒரு சர்க்யூட் ஒரே நேரத்தில் ON, OFF என்ற இரண்டு
நிலைகளிலும் இருக்குமா? இருக்க முடியுமா?
இருக்கும்; இருக்க முடியும் என்கிறது குவாண்டம்
இயற்பியல். அப்படி ஒரே நேரத்தில் இரண்டு எதிரெதிர்
நிலைகளில் இருப்பதுதான் quantum superposition.

கடவுள் இருக்கிறாரா? ....ஆம், இருக்கிறார். இது ஒரு தரப்பு.
கடவுள் இருக்கிறாரா? ......இல்லை, இல்லவே இல்லை. இது
இன்னொரு தரப்பு. இப்படித்தான் கடவுள் பற்றிய நிலைமை
இருப்பதாக சுஜாதா உணர்கிறார். எனவே it depends என்கிறார்.
      
    

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக