வியாழன், 28 மே, 2020

சோஷலிசம், மார்க்சியம் ஆகிய சொற்கள் இன்று
வெகுவாகப் பிரபலம் ஆனவை; புகழ் பெற்றவை.
ஆனால் 19ஆம் நூற்றாண்டில் அனார்க்சிசம்
(Anarchism) என்ற சொல்லே வெகுவாகப் பிரசித்தம்.
அனார்க்சிசம் என்பது முதலாளித்துவத்துக்கு
எதிரான ஒரு சித்தாந்தம்; ஒரு வகையான
சோசலிச சித்தாந்தம்.
 அனார்க்கிசத்தின் தந்தையாக புருதோன் கருதப்
பட்டார். இவரின் அனார்க்கிஸம் ஒரு விதமான
கற்பனாவாத சோஷலிசம் ஆகும்/

தொழிலாளர்களுக்கு வட்டி இல்லாமல் கடன் கொடுக்க
ஒரு  தேசிய வங்கியை உருவாக்க முயன்று தோல்வி
அடைந்தார் புருதோன். புருதோனின் சோஷலிசம்
உருப்படாத நடைமுறை சாத்தியமற்ற போலி சோஷலிசம்
ஆகும். இதை மார்க்ஸ் தாக்கித் தகர்த்தார்.

வாசகர்கள் மார்க்ஸ் பிரெஞ்சு மொழியில் எழுதிய
The poverty of philosophy என்ற நூலைப் படிக்கவும்.
      

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக