ஞாயிறு, 31 மே, 2020

என்னுடைய பதிவு மட்டுமே உண்மையைச்
சொல்கிறது. இதற்கு முந்திய பதிவில் விரிவான
கட்டுரை எழுதி உள்ளேன். அதைப் படிக்கவும்.

நீங்கள் காட்டிய பதிவு அதை எழுதியவரின்
அறியாமையை வெளிப்படுத்துகிறது.
எழுதியவரின் கல்வித் தகுதி என்ன?
அவருக்கு ஆங்கிலம் தெரியுமா? இந்த விஷயம்
தொடர்பான பல ஆவணங்கள் ஆங்கிலத்தில்
உள்ளபோது, ஆங்கிலம் அறியாதவரால் எந்த
விஷயத்தை அறிந்து கொள்ள முடியும்?

OBCக்கு எதில் இடஒதுக்கீடு இல்லை என்பதையே
புரிந்து கொள்ள முடியாமல், முட்டாள்தனமாக
உளறுகிற ஈனப்பயல்களை அடித்துக் கொல்லாமல்
இந்த நாடு உருப்படாது.

==================================================
டாக்டரய்யா அவர்களே, உங்களின் பதில் என்ன?
--------------------------------------------------------------------------
டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மையில்,
தான் வெளியிட்ட அறிக்கையில் மருத்துவப் படிப்பில்
OBCக்கு கடந்த மூன்றாண்டுகளாக இடஒதுக்கீடு (27சதம்)
வழங்கப்படவில்லை என்கிறார். மூன்றாண்டுகளாக
அல்ல, கடந்த 14 ஆண்டுகளாகவே OBCக்கு
வழங்கப்படவில்லை என்கிறேன் நான்.

மூன்றாண்டா பதினாலு ஆண்டா என்பதுதான் கேள்வி.
டாக்டர் ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான
கேள்வி.  மூன்றாண்டுகளாக OBCக்கு இட ஒதுக்கீடு
இல்லை என்று சொல்லும் டாக்டரையா அவர்கள்,
இந்த மூன்றாண்டுகளாக மௌனம் காத்தது ஏன்?
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே
அதை எதிர்த்துப் போராடாமல் இருந்தது ஏன்?
பதில் சொல்லுங்கள் டாக்டர் அவர்களே!
==============================================
2007 முதல் OBCக்கு மருத்துவப் படிப்பில்
அகில இந்திய கோட்டாவில் ஐடா ஒதுக்கீடு இல்லை!
SC-ST கண்ணில் வெண்ணெயும் OBC கண்ணில்
சுண்ணாம்பும் வைத்த புண்ணியவான் மன்மோகன்சிங்!
------------------------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
---------------------------------------------------------------------------- 
உயர் கல்வி நிறுவனங்களில் சாதி அடிப்படையிலான
இடஒதுக்கீடு இந்தியாவில் முதன் முதலாக 2007ஆம்
ஆண்டு அறிமுகப் படுத்தப் படுகிறது. அதற்கு முன்பு
கிடையாது.அதன்படி SC, ST, OBC ஆகிய மூன்று
பிரிவினருக்கும் உயர் கல்வி நிறுவனங்களில் இட ஒதுக்கீடு
வழங்கப்பட வேண்டும். இதுதான் அரசமைப்புச் சட்டம்
சொல்லுகிற நிலை.

இந்தியாவின் மாநிலங்களில் 26 மாநிலங்கள் மத்தியத்
தொகுப்புக்கு மருத்துவ இடங்களை வழங்குகின்றன.
UGயில் 15 சத இடங்களும், PGயில் 50 சத இடங்களும்
மத்தியத் தொகுப்புக்கு வழங்கப் படுகின்றன.
இவ்வாறு வழங்கப்படும் இடங்கள் அகில இந்திய
கோட்டா இடங்கள் (ALL INDIA QUOTA) எனப்படும்.

டாக்டர் மன்மோகன்சிங் அரசு 2007 முதல் இந்த அகில
இந்திய கோட்டா இடங்களில், SC, ST பிரிவினருக்கு
இட ஒதுக்கீடு வழங்குகிறது. (கவனிக்கவும்: SC, ST
பிரிவினருக்கு மட்டும்தான்). OBCக்கு வழங்கவில்லை.

SC, STக்கு இட ஒதுக்கீடு வழங்கச் சொல்லும் அதே
அரசமைப்புச் சட்டம்தான் OBCக்கும் உயர் கல்வி
நிறுவனங்களில் இட ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது.
ஆனால் மன்மோகன் சிங் அரசு என்ன செய்தது?
SC, STக்கு இட ஒதுக்கீட்டை வழங்கியது.ஆனால்
OBCக்கு வழங்க மறுத்து விட்டது. இது என்ன நியாயம்?
ஒரு கண்ணில் வெண்ணெய்! ஒரு கண்ணில் சுண்ணாம்பா?

மன்மோகன் சிங் இந்த முடிவை எடுத்து OBCக்கு
துரோகம் செய்த போது, மன்மோகன் சிங் அரசில்
சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தவர் அன்புமணி
ராமதாஸ்! இதை யாராவது மறுக்க முடியுமா?
மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்!

அன்புமணி ராமதாஸ் மட்டுமல்ல, OBC நலன்களின்
பாதுகாவலர்கள் என்று போலி வேஷம் போடும்
திமுகவினர் பலர் அப்போது மன்மோகன் சிங்கின்
அமைச்சரவையில் அமைச்சர்களாக இருந்து
துரோகத்துக்கு துணை போயினர். ஆ ராசா,
தயாநிதி மாறன், டி ஆர் பாலு ஆகியோர்
மத்திய அமைச்சர்களாக இருந்து துரோகம்
செய்தவர்கள் ஆவர். இதை யாராவது மறுக்க
முடியுமா? மறுத்துப் பார் என்று சவால் விடுகிறேன்.

டாக்டரய்யா அவர்களே, உங்களின் பதில் என்ன?
--------------------------------------------------------------------------
டாக்டர் ராமதாஸ் அவர்கள் அண்மையில்,
வெளியிட்ட அறிக்கையில் மருத்துவப் படிப்பில்
அகில இந்திய கோட்டாவில் OBCக்கு கடந்த
மூன்றாண்டுகளாக இடஒதுக்கீடு (27சதம்)
வழங்கப்படவில்லை என்கிறார். மூன்றாண்டுகளாக
அல்ல, கடந்த 14 ஆண்டுகளாகவே (2007 முதல்)
OBCக்கு வழங்கப்படவில்லை என்கிறேன் நான்.

மூன்றாண்டா பதினாலு ஆண்டா என்பதுதான் கேள்வி.
டாக்டர் ஐயா அவர்களுக்கு என்னுடைய தாழ்மையான
கேள்வி.  மூன்றாண்டுகளாக OBCக்கு இட ஒதுக்கீடு
இல்லை என்று சொல்லும் டாக்டரையா அவர்கள்,
இந்த மூன்றாண்டுகளாக மௌனம் காத்தது ஏன்?
இட ஒதுக்கீடு மறுக்கப்பட்ட முதல் ஆண்டிலேயே
அதை எதிர்த்துப் போராடாமல் இருந்தது ஏன்?
பதில் சொல்லுங்கள் டாக்டர் அவர்களே!

மருத்துவப் படிப்பில் அகில இந்திய கோட்டாவில்
OBCக்கு இட ஒதுக்கீடு இல்லை என்ற உண்மையை
முதன் முதலாக அம்பலப்படுத்தியவன் நான்.
இது தொடர்பான கட்டுரையை, 2019 நவம்பரிலேயே
எழுதியவன் நான். அதை படித்து விட்டு, திருடனைத்
தேள் கொட்டியது போல இருந்தார்கள் திமுக மற்றும்
பாமகவினர். எந்த ஊடக நெறியாளரும் என்னை
இப்பொருளில் விவாதத்துக்கு வேண்டுமென்றே
அழைக்கவில்லை.

இன்று நீதிமன்றத்தில் வழக்குப் போட்டு கபட நாடகம்
ஆடுகின்றனர். மக்கள் முட்டாள்களாக இருக்கும் வரை
இப்படித்தான் நடக்கும்.
****************************************************
அரசமைப்புச் சட்டம் 93ஆவது திருத்தம் 2005
என்பது ( 93 of 2005) OBCக்கு உயர்கல்வியில் இட
ஒதுக்கீடு வழங்கச் சொல்கிறது. இத்திருத்தம் 2006ஆம்
ஆண்டிலேயே நிறைவேறி விட்டது 
 
கடந்த 25 ஆண்டுகளாக மருத்துவக் கல்லூரி
மற்றும் ஐ.ஐ.டி
           
  

  


 

1 கருத்து: