மதம் வேறு; கடவுள் வேறு. மதம் பிற்காலத்தில்
தோன்றியது. அதற்கு முன்பே கடவுள் நம்பிக்கை
தோன்றி விட்டது. இதை எப்போதும் நினைவில்
கொள்ளவும். கடவுள் இல்லாமல் மதம் இருக்க
முடியாது. ஆனால் மதம் இல்லாமலும் கடவுள்
இருந்தார். அதாவது கடவுள் நம்பிக்கை இருந்தது.
இது மானுட வரலாறு. நிற்க.
கடவுள் இல்லை என்பது அழுத்தம் திருத்தமாக
அறிவியலால் ஆயிரம் முறை நிரூபிக்கப் பட்டு
விட்டது. It is a settled matter.
கடவுள் என்பவர் மொத்தப் பிரபஞ்சத்திலும் எங்கும்
இல்லை. அவருக்கு எவ்விதமான பௌதிக இருப்பும்
இல்லை. கடவுள் என்பது நம் மனத்தில் நம் சிந்தனையில்
மட்டும் வாழும் ஒரு கருத்து. அவ்வளவுதான்.
இதெல்லாம் settled science. இதில் விவாதத்துக்கெல்லாம்
இடமில்லை.
ரோமானிய சாம்ராஜ்யத்தை எதிர்த்த அடிமைகள்,
ஒடுக்கப்பட்டவர்கள் ஆகியவர்களின் சார்பாக
உதயமானது கிறிஸ்துவம் என்று பிரடெரிக் எங்கல்ஸ்
கூறக் கேள்விப்பட்டு இருக்கிறேன். சகோதரி கோதை
நாச்சியார் commoner என்று கூறியது ஒடுக்கப்பட்ட
அடிமைகளை ஒடுக்கப்பட்ட மக்களைக் குறிக்கும்
என்பதுதான் என்னுடைய புரிதல்.
யூதர்களின் பழங்கதைகளை கிறிஸ்துவம் சுவீகரித்துக்
கொண்டதால், அவை கிறிஸ்துவ அறிஞர்களால்
எழுதப்பட்டது என்று பிற்காலத்தில் சொல்லப் பட்டது.
பழைய ஏற்பாடு என்பது பழங்குடிகளின் கதை.
புதிய ஏற்பாட்டில் மட்டுமே ஏசு கிறிஸ்து இடம்
பெறுகிறார். அது கிறிஸ்துவர்களுக்கு முழுவதும்
சொந்தமானது. ஒரு சாமானியராலோ அல்லது பல
சாமானியர்களாலோ எழுதப்பட்டு இருந்தாலும், அது
மேன்மை மிக்கவர்களால் உயர்குடிப் பிறப்பினரால்
எழுதப்பட்டது என்று காட்டும் போக்கு உலகளாவிய
போக்காக இருந்தது.அதற்கு ரோம் விதிவிலக்கு அல்ல.
வருணம் என்பது இன்று இல்லை. அது முன்பு இருந்து
பின்னர் மறைந்து போன ஒரு விஷயம். தற்போது
சாதிய அமைப்பு முறை உள்ளது. இதற்கும்
வருணத்துக்கும் தொடர்பில்லை. டாக்டர் அம்பேத்கர்
நால்வகை வர்ணம் என்பதை ஏற்கவில்லை. அவர்
மூன்று வகையான வர்ணங்கள் மட்டுமே
இந்தியாவில் இருந்ததாகக் குறிப்பிட்டார்.
இன்றைய சாதி அமைப்பு முறையை வருண முறை
என்று கூறுவதால் என்ன பயன் விளையும்?
இன்றைய சாதி அமைப்புக்கு ஒரு பொருளியல்
அடித்தளம் உள்ளது. உள்ளதா, இல்லையா?
வருண அமைப்புக்கான பொருளியல் அடித்தளம்
நம் நாட்டில் என்ன உள்ளது?
மதங்கள் அனைத்துமே நிறுவனங்கள் (institutions).
அவை நிறுவனமயம் ஆக்கப்பட்டவை. பழங்குடிகளின்
மதம் மட்டுமே வழிபாட்டையும் கடவுளையும்
மட்டும் கொண்டு நிறுவனமாகாமல் இருப்பது.
மதங்களின் வரலாறு ரத்த வரலாறு. மதங்கள்
காலப்போக்கில் மூர்க்கம் அடைந்து, அவற்றின்
ஆரம்ப கால முற்போக்குத் தன்மையையும் இழந்து
பிற்போக்கின் திரண்ட வடிவமாகி விடுகின்றன.
எனவே மதங்களை எதிர்க்க வேண்டி வருகிறது.
ஆனால் ஒரு மதத்தை மட்டும் விமர்சிப்பவன்
மற்ற ஏதேனும் ஒரு மதத்தின் கைக்கூலி ஆவான்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக