திங்கள், 4 மே, 2020

தொழிற்புரட்சியைத் தொடர்ந்த முதலாளிய வளர்ச்சி
இலக்கியத் துறையில் அறிவியலுக்கு மெலிதான ஒரு
முக்கியத்துவத்தைத் தந்தது. இதையொட்டி மேனாட்டில்,
ஆங்கிலத்தில், அறிவியல் இலக்கியம் என்பது உருவானது.

உலகின் முதன் முதல் அறிவியல் புனைவு எழுத்தாளர்கள்
என்று பிரெஞ்சு எழுத்தாளரான ஜூல்ஸ் வெர்ன்  (1828-1905),
ஆங்கிலேயரான ஹெச் ஜி வெல்ஸ் (1866-1946) ஆகிய
இருவரையும் கூறுவார்கள். அறிவியல் புனைவு (science fiction)
உட்பட அறிவியலை எழுதியவர்கள் இவர்களே.

ஹெச் ஜி வெல்ஸின் The invisible Man  பற்றி ஆயிரம் முறை கூறி
இருக்கிறேன். எத்தனை பேர் அந்த அறிவியல் புனைவைப்
படித்திருப்பீர்கள்? அவருடைய The time machine என்ற நாவலும்
அற்புதமான அறிவியல் புனைவே.

ஜூல்ஸ் வெர்ன் எழுதிய பிரபல நாவலான
Around the world in eighty days என்பது மிகக் குறைவான
அறிவியல் கொண்ட ஓர் அறிவியல் புனைவு.
எளிதில் புரிந்து கொள்ளக் கூடியது. 1966-68ல் தமிழ்நாட்டில்
11ஆம் வகுப்பு (SSLC) ஆங்கில மொழிப்  பாடத்தில்,
Around the world in eighty days நாவலானது Non detailed பிரிவில்
பாடமாக இருந்தது.

அக்காலத்தில் அறிவியல் புனைவு (science fiction) என்ற சொல்லே
உண்டாகி இருக்கவில்லை. Science romance என்றுதான்
அறிவியல் புனைவுகள் அழைக்கப் பட்டன.

மேனாட்டிலேயே அறிவியல் எழுத்துக்கு உரிய அங்கீகாரம்
இல்லாமல் இருந்த காலம் அது. இந்நிலையில் தமிழ்நாட்டில்
அறிவியலைப் பரப்புவது என்பது எளிய விஷயம் அல்ல.
இவ்வளவு எதிர்மறை அம்சங்களுக்கு இடையில்
சுஜாதா மிகவும் பரவலாக தமிழ் வாசகப் பரப்பில்
அறிவியலைக் கொண்டு சேர்த்தார்.




ஆதி மானுடம் எப்படி இருந்தது? ஆதி மானுட சமூகம்
என்பது சமூகத்தில் வர்க்கப் பிரிவினை ஏற்படுவதற்கு
முன்பான காலத்தில் நிலவிய சமூகம். தனியுடைமை
ஏற்படுவதற்கு முந்திய சமூகம் அது. அனைத்தும்
அனைவருக்கும் பொதுவானதாக இருந்த அந்தக் கால
சமூகத்தை மார்க்சியம் புராதனப் பொதுவுடைமை
சமூகம் என்று அழைக்கிறது.

உணவு தேடி வேட்டைக்குச் செல்வர் அக்கால மானுடர்கள்.
வேட்டையில் இருந்து மாலை திரும்பியதும் ஒரு சிலருக்கு
மட்டுமே வேட்டையில் ஏதேனும் கிடைத்திருக்கும்.
சிலர்  வெறுங்கையுடன் திரும்பி இருப்பர். இருப்பினும்
அனைவருக்கும் உணவு பங்கிடப்படும். அவ்வளவு
சமத்துவம் நிலவிய சமூகம்  புராதனப் பொதுவுடைமைச் 
சமூகம் ஆகும்.

அவ்வளவு சமத்துவமும் பொதுவுடைமையும் நிலவிய
அந்தச் சமூகத்தில் கூட, வேட்டைக்குச் சென்று
மிருகத்தின் நெஞ்சுப் பகுதியைக் கொண்டு வந்தவனுக்கு
மிருகத்தின் கால், வால் போன்ற பகுதிகளைக் கொண்டு
வந்தவர்களை விட அதிக மரியாதை உண்டு. ஏன் இந்தக்
கூடுதல் மரியாதை? அந்தக் காலத்தின் பொருள் உற்பத்தி
என்பது வெட்டி மாமிசத்தைக் கொண்டு வருதலே.

பொருள் உற்பத்தியில் சிறப்பிடம் பெறுவதே மானுடத்தின்
லட்ச்சியம். எனவேதான் பொதுவுடைமைச் சமூகத்தில்
கூட, மிருகத்தின் நெஞ்சுப் பகுதியைக் கொண்டு
வந்தவனுக்கு கூடுதல் மரியாதை தரப்பு படுகிறது.
இதெல்லாம் ஜெயமோகனுக்குத் தெரியுமா?

         

கே என் சிவராமன்

ஐயா
சுஜாதாவின் அறிவியல் எழுத்துக்கள் பயனற்றவை,
நிலைத்து நிற்காதவை, தரக் குறைவானவை என்றே
இருந்துவிட்டுப் போகட்டும். இதைச் சொல்லுவதற்கு
தற்குறி ஜெயமோகனுக்கு என்ன அருகதை உள்ளது?

அறிவியல் இலக்கியத்தை விமர்சிக்கும் ஒருவன்
அறிவியலைக் கற்றிருக்க வேண்டாமா? ஜெயமோகனின்
கல்வித் தகுதி என்ன? ப்ளஸ் 2வில் அவர் படித்தது என்ன?

பத்தாங்கிளாசுக்கு மேல் படிக்காத ஒரு பழுவினும்
இழிந்த தற்குறி அது சரியில்லை, இது சரியல்லை
என்று தீர்ப்புச் சொல்ல என்ன அருகதை உள்ளது?

தேற்றத்தைச் சொல்வதுதான் அறிவியல் புனைவு என்று
யாம் கூறவில்லை. அறிவியல் இலக்கியம் என்பதில் ஒரு
தேற்றத்தைக் கலாபூர்வமாகக் கூறுவதும்தான் உள்ளது.

எல்லோரும் எல்லா விஷயத்திலும் கருத்துச் சொல்லலாம்
என்பது அராஜகவாதம் (anarchism). அறிவியல்
இலக்கியத்தை விமர்சிப்பவன் அறிவியல் படித்திருக்க
வேண்டும். அறிவியலே படிக்காத ஜெயமோகன்
அறிவியலை விமர்சிக்கப் புகுந்தால், அவரின்
முட்டாள்தனம்தான் வெளிப்படும் தவிர வேறு எதுவும்
நடக்காது.

   
   
2019 மே அறிவியல் ஒளி இதழில் சுஜாதா குறித்த
எனது கட்டுரை வெளியாகி உள்ளது. சுஜாதா
குறித்த அறிவியல் வழி மதிப்பீடு அது மட்டுமே.
வேண்டுவோருக்கு மின்னஞ்சலில் அனுப்பி
வைக்கப் படும்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக