சனி, 9 மே, 2020

கொரோனாவும் ஆரோக்கிய சேதுவும்!
------------------------------------------------------------
நியூட்டன் அறிவியல் மன்றம்
----------------------------------------------------------
ஆரோக்கிய சேது என்பது ஓர் App. கணினியோடு பரிச்சயம்
உள்ளவர்கள் App பற்றி அறிவார்கள். கணினிப் பரிச்சயம்
என்பது இளைஞர்களின் ஏரியா. (Unless the context otherwise requires,
இங்கு இளைஞர்கள் என்பது இளம்பெண்களையும் குறிக்கும்).

Apeல் இருந்து வந்த மனிதன் App பற்றியும் அறிந்துகொள்ள
வேண்டும். App என்பது ஒரு குறிப்பிட்ட வேலையைச்
செய்து முடிக்க (கணினி வழியில் செய்து முடிக்க)
பயன்படும் ஒரு கருவி என்று புரிந்து கொள்க.

ஒரு நோயாளிக்கு சிகிச்சை அளிக்கும் டாக்டர்,
அந் நோயாளிக்கு ஒரு இஞ்சக்சன் போட விரும்புகிறார்.
மருந்துக் கடையில் போய் டாக்டர் எழுதிக் கொடுத்த
ஊசி மருந்தை வாங்கி வந்தாயிற்று. இப்போது ஊசி
போட வேண்டும். அதற்கு என்ன வேண்டும்?

ஒரு சிரிஞ்சு வேண்டும். சிரிஞ்சு இல்லாமல் ஊசி போட
முடியுமா? இந்த சிரிஞ்சைப் போன்றதுதான் App.
ஆக App என்பது ஒரு கருவி. அது ஒரு குறிப்பிட்ட
வேலையை மட்டும் செய்யும். அவ்வளவுதான்.

இப்போது App என்றால் என்னவென்று தோராயமாகவேனும்
உங்களுக்குத் புரிந்திருக்கும். அப்படியானால்
ஆரோக்கிய சேது என்னும் App என்ன வேலை செய்யும்?
அது ஒரு டிராக்கர். Tracker என்ற ஆங்கிலச் சொல்லுக்குப்
பொருள் புரிந்தால் மட்டுமே மேற்கொண்டு நகர முடியும்.
இப்போது ஆங்கிலப் பாடம் நடத்த நேரம் கிடையாது;
விருப்பமும் கிடையாது.

ஒரு இளம் பெண் 12B பேருந்தில் ஏறி விட்டாள். பேருந்து
நிறுத்தத்தில் நாய் மாதிரிக்கு காத்துக் கிடந்த
அந்த விடலைப் பையனும் உடனே அதே 12Bயில் ஏறி
விட்டான். அவள் சுடுகாட்டில் இறங்கினாலும் இவனும்
அங்கேயே இறங்கி அந்தப் பெண்ணை முற்றிலுமாக
follow பண்ணுவான். இதுதான் டிராக்கிங். இந்தப்
பையன் ஒரு டிராக்கர்.

அப்படியானால் ஆரோக்கிய சேது யாரைப்
பின்தொடர்கிறது? அது கொரோனா வைரஸை,
கொரோனா நோயாளிகளைப் பின்தொடர்கிறது.
ஆரோக்கிய சேதுவின் பெயரே COVID-19 Tracker
என்பதுதான்.

ஏன் இந்த App? இதன் வேலை என்ன? இந்தியாவில்
மூன்றாம் கட்ட கொரோனா பரவல் ஏற்படும்
முன்னரே, அதாவது சமூகப் பரவல் ஏற்படும்
முன்னரே, சமூகப் பரவலைத் தடுக்கும் பொருட்டு
ஆரோக்கிய சேது கொண்டு வரப்படுகிறது.

ஆரோக்கிய சேது App எல்லா மொபைல் போனிலும்
வேலை செய்யாது. ஸ்மார்ட் போனில் மட்டுமே வேலை
செய்யும். (Tablet, Lap, PC ஆகியவற்றில் வேலை செய்யும்).
GPS, Bluetooth  ஸ்மார்ட் போனில் மட்டுமே ஆரோக்கிய
சேது வேலை செய்யும்.

ஆரோக்கிய சேதுவில் இணைவது நாட்டு மக்களுக்கு
கட்டாயம் அல்ல. அரசு ஊழியர்களுக்கு மட்டும்
கட்டாயம் ஆக்கப் பட்டுள்ளது.    

இந்திய மக்கள் தொகை 130 கோடி. இதில் ஆரோக்கிய
சேதுவை வைத்திருப்பவர்கள் எத்தனை பேர்?
ஒரு கோடி இருக்குமா? இல்லை. ஒரு கோடியை இன்னும்
எட்டவில்லை என்கிறது அரசின் புள்ளி விவரம்.
வெறும் 70 லட்சம் பேர் மட்டுமே ஆரோக்கிய சேதுவை
வைத்துள்ளனர். 
              
50 கோடிப்பேர் இந்தியாவில் ஸ்மார்ட் போன் வைத்து
இருக்கிறார்கள் என்கிறது ஏற்கத்தக்க ஒரு புள்ளி
விவரம். 130 கோடியில், திசுக்கள் சிறு குழந்தைகள்,
படிப்பறிவற்றவர்கள் ஆகியோரைக் கழித்து விட்டுப்
பார்த்தல், மிச்சமுள்ள 100 கோடிப்பேரில் 50 கோடிப்பேர்
ஸ்மார்ட் போன் வைத்து இருக்கிறார்கள். அதாவது
இந்தியர்களில் இரண்டு பேரில் ஒருவரிடம் ஸ்மார்ட்
போன் இருக்கிறது.

இவ்வளவு இருந்தும் ஆரோக்கிய சேது Appஐ
வைத்திருப்பவர்கள்  ஒரு கோடி கூட இல்லை.
வெறும் 70 லட்சம்தான். இதில் மிகுதியும் அரசு
ஊழியர்கள்.

ஆரோக்கிய சேது App என்னவெல்லாம் செய்கிறது?
கொரோனா குறித்த அரசின் செய்திகள், தகவல்கள்
அனைத்தையும் ஒன்று விடாமல் சொல்கிறது.
இந்தியாவில் பேசப்படும் அனைத்து மாநில
மொழிகளிலும் சொல்கிறது. அரசின் அறிவிப்புகள்
உடனுக்குடன் தெரிய வருகின்றன.

சென்னை நுங்கம்பாக்கத்தில் இருந்து ஆரோக்கிய சேது
Appஉடன் மோட்டார் பைக்கில் கோடம்பாக்கம் செல்ல
இருக்கிறேன். கோடம்பாக்கம் கொரோனா
நோய்த்தொற்று அதிகமுள்ள இடம் என்ற cautionஐ
ஆரோக்கிய சேது எனக்கு அளிக்கும். நான்
கோடம்பாக்கம் செல்வதைத் தவிர்த்து விடுவேன்.

நான் எங்கெல்லாம் செல்கிறேன், எந்த ரோட்டில்
சென்று திரும்புகிறேன் என்கிற அனைத்தும் GPS
மூலமாக ஆரோக்கிய சேதுவுக்குத் தெரியும்.
அப்படித் தெரிந்தால்தான்  அது நான் செல்லக்கூடாத
இடத்தைச் சுட்டிக்காட்டி என்னை caution செய்ய இயலும்.
(caution என்பதற்கு எச்சரிக்கை என்றும் App என்பதற்கு  செயலி என்றும் மொழிபெயர்ப்பவனுக்கு இங்கு இடமில்லை.
அவன் எங்காவது தண்டவாளத்தில் சரக்கு ரயில்
வரும்போது தலை கொடுத்து முக்தி அடையவும்).

நோயாளிகளின் எண்ணிக்கை உட்பட எல்லாத்
தகவல்களையும் ஆரோக்கிய சேது சொல்கிறது.
இது ஒரு குறிப்பிட்ட தேவைக்கானது. அந்தத் தேவையை
இது செவ்வனே நிறைவேற்றுகிறது. சமூகப் பரவல்
என்னும் மூன்றாம் கட்டத்துக்கு கொரோனா வந்து
விடக்கூடாது என்பதற்காகவே ஆரோக்கிய சேது
என்னும் டிராக்கர் கொண்டு வரப்பட்டது. அது ஒரு
டிராக்கர் என்பதை உணர வேண்டும்.

எந்தத் தொழில்நுட்ப அறிவும் இல்லாமல், அறிவியல்
பின்னணியும் இல்லாமல், ஆரோக்கிய சேது என்னுடைய
ரகசியங்களைப் பறித்து விடுகிறது என்று உளறுவது
முழுமுட்டாள்தனம்.

ஒரு டாக்டரிடம் சிகிச்சைக்குச் செல்லும்போது, அவரிடம்
நமது நோய் குறித்த விவரங்களை ஒளிவு மறைவின்றிச்
சொல்லுவது போல, ஆரோக்கிய சேதுவிடம் அதற்குத்
தேவையான விவரங்களைத் தருகிறோம். இதில்
ரகசியம் பறிபோகிறது என்ற பேச்சு அபத்தமானது.

130 கோடி மக்கள்தொகை உள்ள ஒரு நாட்டில்,
50 கோடிப்பேர் ஸ்மார்ட் போன் வைத்திருக்கும் ஒரு நாட்டில்,
இதுவரை வெறும் 70 லட்சம் பேர் மட்டுமே ஆரோக்கிய
சேதுவில் இணைந்துள்ளனர் எனும்போது, இதனால்
என்ன தீமை விளைந்து விட முடியும்? பதில்
சொல்லுங்கள் லும்பன்களே!
******************************************************  




  .

 
  

                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக