லெனின் மறைவிற்குப் பின் சோவியத் யூனியன் வளர்ச்சி 1924 ஆம் ஆண்டு 2.40 லட்சம் தொழிலாளர்கள் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.
கம்யூனிஸ்ட் கட்சி லெனினுடைய அறிவுறைகளை செயல்படுத்துவதில் சோவியத் மக்களின் முயற்சிகளையும் சக்திகளையும் ஈடுபடுத்தியது. புதிய பொருளாதாரக் கொள்கையை கடைப்பிடித்ததின் பயனாக தேசிய பொருளாதாரம் 1925 ஆம் ஆண்டு முடிவுக்குள் முதலாம்யுத்தத்திற்கு, முந்திய 1913 ஆம் ஆண்டின் தரத்தை எட்டியது. விவசாய விளைபொருட்களின் உற்பத்தி அனேகமாக யுத்தத்திற்கு முந்திய அளவுக்கு வந்துவிட்டது. தொழில் துறையும் கணிசமாக முன்னேற்றம் அடைந்தது.
இயந்திர நிர்மாண தொழில், கடைசல், பட்டறை நிர்மாண தொழில், மின்சார இயந்திரத் தொழில், விமான நிர்மாண தொழில், மோட்டார் லாரி நிர்மாண தொழில், ரசயான தொழில் தற்காப்பு சாதன தொழில் டிராக்டர் நிர்மாண தொழில் அறுவடை கம்பைன் நிர்மானத்தொழில் ஆகியவை முக்கியத்துவம் பெற்றிருந்தன்.
புதிய நிர்மாண வேலைக்கு பெருந்தொகை நிதி தேவைப்பட்டது. அந்நிய முதலாளிகள் சோவியத் யூனியனுக்கு கடன்கள் கொடுக்க விரும்பவில்லை. இயந்திர உற்பத்திக்கு தேவைப்படும் நிதி வசதிகள் உள் நாட்டிலேயே தேடி தேடி திரட்டப்பட்டன. தொழில்துறையிலும் வெளிநாட்டு உள்நாட்டு வர்த்தகத்திலும் இருப்புப்பாதை, நீர்வழிப் போக்குவரத்தில் கிடைத்த லாபங்கள் அனைத்தும், கனரக இயந்திரத் தொழில் அபிவிருத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்டன.
சோவியத் அரசாங்கம் 1926-ம் ஆண்டிலேயே தொழில்துறையில் சுமார் 100 கோடி ரூபாய்களை முதலீடு செய்தது. 1929 ஆம் ஆண்டில் இந்தத் தொகை 500 கோடியாக உயர்ந்தது. ஆலைகளிலும் தொழிற்சாலைகளிலும் புது கட்டுமான தளங்களிலும் வேலை மும்முரமாக நடந்தது. இயந்திரங்களும் உபகரணங்களும் உற்பத்திக்கு போதவில்லை என்றாலும் சோசலிச கருத்தால் உத்வேகம் ஊட்டப்பட்ட தொழிலாளர்கள் அற்புதம் நிகழ்த்தினார்கள். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி வேகம் முதலாளித்துவ நாடுகளில் இருந்ததை விட அதிகமாக இருந்தது.
நாட்டை மின்சார மயமாக்கும் லெனினுடைய திட்டத்தை செயல்படுத்துவதில் கட்சி விசேஷ கவனம் செலுத்தியது.1926 டிசம்பரில் லெனின் கிராத் நகரின் அருகே வல்ஹோவ் நீர்மின் நிலையம் உற்பத்தி தொடங்கியது. 50 ஆயிரம் கிலோ வாட்டுக்கு சற்று அதிகமாய் இருந்தது. அந்தக் காலத்தில் அதுவே நாட்டின் எல்லாவற்றவையும் விட பெரிய நீர் மின்நிலையமாக இருந்தது.
இந்த முதல் வெற்றியை சோவியத் மக்கள் கொண்டாடி னார்கள்.
வல்ஹோவ் மின் நிலையத்துக்கு லெனின் பெயர் சூட்டப்பட்டது. அக்டோபர் புரட்சி கொண்டாட்டத்தில் 1027 நவம்பரில் எட்டாம் தேதி த்னேப்பர் ஆற்றின் மீது பெரிய நீர் மின் நிலையத்துக்கு அடிக்கல் போடப்பட்டது. இதன் திறன் வல்ஹோவ் மின் நிலையத்தின் திறனைக் காட்டிலும் 10 மடங்கு அதிகம். பிற மின் நிலையங்களும் கட்டப்பட்டன.

உராலில் மக்னீத்னயா மலை அடிவாரத்திலும் , மேற்கு சைபீரியாவில் குஸ்னேத்ஸ்க் நகரின் அருகிலும் பிரம்மாண்டமான இரும்பு வகை தொழிற்சாலைகள் இரண்டு கட்டப் பட்டன. 1927 இல் தொடங்கப்பட்ட துருக்கிஸ்தான்- சைபீரிய இருப்புப்பாதை முதலாவது பெரிய இருப்புப்பாதை நிர்மாணமாகும். 1500 கிலோ மீட்டர் நீளமுள்ள இந்த இருப்புப்பாதை மத்திய ஆசியாவையும் மேற்கு சைபீரியாவையும் இணைத்தது. இந்த ரயில்பாதை முன்னர் பொருளாதாரத் துறையில் பின்தங்கியிருந்த கஸாக்ஸ்தான் கீர்கீஸியாத்தி, உஸ்பெஸ்கிஸ்தான் துர்க்மேனிஸ்தான், கிர்கிஸ்தான் ஆகியவற்றின் மக்களின் வளர்ச்சிக்கு மிகவும் உதவியாக இருந்தது.
விவசாய எந்திரங்களும், கருவிகளும் உற்பத்தி செய்வதில் கட்சி முதற்படியாக கவனம் செலுத்தியது .2 லட்சத்து 40 ஆயிரம் விவசாயிகளின் பண்ணைகளுக்கு இவற்றை வழங்குவது அவசியமாக
இருந்தது. அந்த காலத்தில் தொழிற்சாலைகள் குதிரைகளால் இழுக்கப்படும், இயந்திரங்களும் கருவிகளும் தயாரித்து வந்தனர். விதை தெளிக்கும் இயந்திரம் விதை விதைக்கும் இயந்திரம் அறுவடை இயந்திரம் புல் அறுக்கும் இயந்திரம், கதிரடிக்கும் எந்திரம் ,தரம் பிரிக்கும் இயந்திரம் கலப்பை ,கதிர் அரிவாள் முதலியனவை நாட்டில் தயாரிக்கப்பட்ட.
ஒரு சில டிராக்டர்கள் மட்டுமே இருந்தன. அவை அமெரிக்க ஐக்கிய நாடுகளில் வாங்கப்பட்டன உள்நாட்டில் உற்பத்தி அப்போதுதான் துவங்கப் பட்டுக்கொண்டிருந்தது.

விவசாய பண்ணைகளை கூட்டுறவு முறையில் அமைக்கத் தொடங்கிய கட்சி. சோசலிச விவசாயத்திற்கு வேண்டிய பொருளியல் தொழில்நுட்ப அடித்தளத்தை அமைப்பதில் அக்கறை எடுத்துக் கொண்டது. ஓல்கா ஆற்றின் கரையில் ஸ்டாலின் கிராட் நகரில் டிராக்டர் தொழிற்சாலை கட்டப்பட்டது. த்னேப்பர் நதிக்கரையில் ஸப்பரோழியேசி நகரில் அறுவடை இயந்திர தொழிற்சாலை நிறுவப்பட்டது. தோன் ஆற்றின் கரையில் உள்ள ரஸ்தோவ் நகரில் விவசாய இயந்திரங்கள் தயாரிக்க பிரம்மாண்டமான தொழிற்சாலை நிறுவப்பட்டது. வோல்காக் கரையில் மிகப்பெரிய டிராக்டர் தொழிற்சாலை மிகக்குறுகிய நேரத்தில் 11 மாதங்களில் கட்டி முடிக்கப்பட்டது. 1930 ஜூன் மாதம் அதன் கன்வேயரிலிருந்து முதல் டிராக்டர் தயாராகி வெளிவந்தது. தொழிலாளர்கள் அதை மாஸ்கோ கொண்டு சேர்த்தது 1930 ஜூன் 26ஆம் தேதி. கட்சியின் பதினோராவது காங்கிரஸ் தொடங்கிய அன்று, இந்த டிராக்டர் செஞ்சதுக்கத்தில் லெனின் சமாதி அருகே நிறுத்தப்பட்டது. தாய்நாட்டில் தயாரான நவீன எந்திரங்கள் விவசாயத்திற்கு கிடைத்தன.
அதிகார வர்க்கமாக இருந்துவந்த "குலாக்கு"களிடமிருந்து நிறைய நிலமும் வேளாண்மை கறிவிவுகளும் பறித்து சாதாரண மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
அதிகார வர்க்கமாக இருந்துவந்த "குலாக்கு"களிடமிருந்து நிறைய நிலமும் வேளாண்மை கறிவிவுகளும் பறித்து சாதாரண மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டன.
கூட்டுப்பண்ணை மையங்கள் குடியரசுகளிலில் 1927 ஆம் ஆண்டு நிறுவப்பட்டன.
ஏழை விவசாயிகளே நாட்டுப்புறத்தில் கட்சியின் பிரதான ஆதரவாளர்களாக விளங்கினார்கள் .
கட்சி,விவசாய மாதரையும் அரசியல் வாழ்வில் ஈடுபட தூண்டி எழுப்பியது.
கட்சி,விவசாய மாதரையும் அரசியல் வாழ்வில் ஈடுபட தூண்டி எழுப்பியது.
மைய வட்டார நாளிதழ்களும், சஞ்சிகைகளும் விவசாயிகளுக்கு முக்கியமான தொண்டாற்றின. கிராம பொது மக்களின் அபிப்பிராயத்தை உருவாக்க சுவர் செய்தித்தாள் விளம்பரம் நிறைய
கொண்டுவரப்பட்டது. பல்லாயிரம் நாட்டுப்புற நிருபர்கள், குலாக்களின்(நிலச்சுவான்தார்) அச்சுறுத்தல்களையும், மறைமுக துப்பாக்கிச்சூடு களையும் கண்டு பயப்படாமல் சோஷலிச குறிக்கோளை துணிவுடன் ஆதரித்து நின்றார்கள்.

பள்ளி ஆசிரியர்கள், விவசாய நிபுணர்கள், மருத்துவர்கள் போன்ற, அறிவு ஜீவிகளும் நாட்டுப்புறத்தில் புது வாழ்வுக்காண போராட்டத்தில் ஈடுபடும்படித் தூண்டப்பட்டார்கள். விவசாயிகளுக்கு ,அரசியல் கல்வி அளிக்கும் மையங்கள் அமைக்கப்பட்டன. நாட்டுப்புறத்தில் வாசக சாலைகளும் சிவப்பு கூடாரங்களும், நகரத்தில் விவசாயிகள் விடுதிகளும், அமைக்கப்பட்டன. இத்தகையவை, நகரத்துக்கு சொந்த காரியமாக வரும் விவசாயிகள் இந்த விடுதிகளில் இளைப்பாறவும் தேவையான யோசனைகள் பெறவும், சொற்பொழிவு உரையை கேட்கவும், நகர தலைவர்களுடன் உரையாடவும் உதவியாயிருந்தது.
தொடரும்....... By Kottiappan shanmugam
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக