புதன், 6 மே, 2020

ஆரோக்கிய சேது செயலி!
----------------------------------------
செயலியை தரவிறக்கம் செய்து கொண்டீர்களா? அதில் சுய பரிசோதனைக்கு உட்படுத்திக் கொண்டீர்களா? அதில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மிகவும் உண்மையான விடையளித்திருக்கிறீர்களா? அதில் குறைந்தது மூன்று நாட்களுக்கு ஒருமுறையேனும் சுயபரிசோதனை செய்து கொண்டு அதில் வரும் அறிவுரையை கடைப்பிடியுங்கள்.
சுயபரிசோதனை செய்து கொண்ட பின் ஒவ்வொரு முறையும் செயலியை ஓபன் செய்யும் போது 500 மீ, 1, 2, 5 மற்றும் 10 கிமீ சுற்றளவில் கீழ்க்கண்ட விபரங்கள் தெரிய வரும்.......
1. எத்தனை பேர் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளார்கள்.
2. எத்தனை பேர் இதில் சுயபரிசோதனை அந்த நிமிடம் வரை செய்திருக்கிறார்கள்.
3. அதில் எத்தனை பேர், கொடுத்த தகவலின் அடிப்படையில் கொரோனா தொடர்பான சந்தேக அறிகுறிகளோடு இருக்கிறார்கள்.
4. அதில் எத்தனை பேர் தாங்கள் கொடுத்த தகவல்களின் அடிப்படையில் அரசின் நேரடி கண்காணிப்பில் இருக்கிறார்கள்.
5. இந்த சூழலில் நாம் கொடுத்த தகவல் அடிப்படையில் நாம் செய்ய வேண்டியது என்ன....
போன்ற விபரங்கள் தெரிய வருகிறது. இவற்றின் அடிப்படையில் பத்து கிமீ சுற்றளவில் நமக்கு பாதிப்பு அப்போதைக்கு இல்லை என்று தெரியவரும் போது கொஞ்சம் 
நிம்மதியாகத்தான் இருக்கிறது.
வெளியே செல்லும் போது கூட்டம் இருக்கும் இடத்தில் இந்த செயலியை திறந்து மேற்கொண்ட விபரங்கள் தெரிந்து எச்சரிக்கை அடையலாம்.
என்ன......எல்லோரும் இந்த செயலியை உபயோகிப்பது அனைவருக்கும் மிகவும் நல்லது. எல்லாவற்றையும் விட நம் உடல்நலம் குறித்து அவ்வப்போது நாம் அப்டேட் செய்யும் பதில்கள் உண்மையானதாக இருப்பது மிக மிக மிகவும் முக்கியம்.
***************************************************************************8888

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக